காளான் மசாலா

தேதி: July 20, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 200 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
சர்கரை - சிறிதளவு

செட் 1
வெங்காயம் - 2
தக்காளி - 3
குடைமிளகாய் – 2

செட் 2
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 6
மிளகு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 3
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 துண்ட


 

செட் 1ஐ நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
செட் 2ஐ எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
காளான்களை எலுமிச்சை சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊரவைத்து கழுவி, ஈரம் போக துடைத்து நறுக்கவும்.
கடாயில் எண்ணய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வதங்கிய வெங்காயத்துடன், குடைமிளகாயை சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து நீர் வற்றும் வரை நன்கு கிளரிவிடவும்.
பிறகு காளான் துண்டுகளை போட்டு, மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் அரைத்த மசாலாவை சேர்த்து, உப்பு, சிறிது சர்கரை சேர்த்து, எண்ணை பிறிந்து வரும் வரை வதக்கி, சிரிதளவு நீர் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
புல்கா அல்லது சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்