அதிக நாள் வைத்து உண்ணும் உணவு

நான் என் கணவரை விட்டு ஒரு இந்து மாத காலம் இந்தியா செல்ல நேரிட்டுள்ளது. பக்கத்தில் இந்தியன் உணவகம் அல்லது மெஸ் இல்லை. இந்திய உணவிற்காக ரொம்ப தூரம் பயணிக்க வேண்டும், இந்தியன் பொருள் வாங்கவும் தான். ஆகையால் நான் சில வகையான பொடிகள், புளியோகரே தக்காளி தொக்கு மாதிரியான உணவு தயாரித்து வைத்து விட்டு செல்லலாம் என்று நினைக்கிறன். எனக்கு உதவுங்கள் தோழிகளே.....எந்த மாதிரியான உணவு அல்லது பக்க உணவு பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பாக்கிறேன்.

லாவண்யா

ஹாய் லாவண்யா நல்லா படியா ஊருக்கு போயிட்டு வாங்கப்பா........

அதிக நாள் கொடாத உணவு.....

சப்பதி மாவை திரட்டி கவரில் ( தனித்தனி கவரில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் கவர் இருக்கனும்) வைத்து விட்டு சென்ரால் சாப்பிடும் சமையத்தில் பரோட்டா போடுவது போல் இந்த சப்பதியை சுட்டு சாப்பிடலாம்.

மாவு ஆட்டி வைத்து விட்டு போங்கள்... இரு வாரம் வைத்து கொள்ளுவார்கள். இட்லி, தோசை ஊற்றி கொள்ளட்டும்.

அரிசிமாவு ( காயிந்த பவுடர்), கேழ்வரகு மாவு இருந்தால் வாங்கி வையுங்கள் தெரிந்தால் அடைதட்டி கொண்டு சாப்பிடலாம்.

இட்லி, தோசைக்கு வெங்காயா சட்னி அரைத்து வைத்தால் fரிஜில் 3 நாள் இருக்கும்.

தக்காளி தொக்கு செய்து வைத்தால் கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஊற்றி செய்தால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

பூண்டு ஊறுகாய் (தெக்கு என்று செல்வார்கள்) அதுவும் செய்து வைக்கலாம்....

எனக்கு தெரிந்தை செல்லி இருக்கேன். மற்ற தோழிகளும் செல்லுவார்கள்ப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நீங்கள் கூறியவற்றை நான் குறித்து வைத்துள்ளேன். மிகவும் குழப்பமாக உள்ளது. என்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் எதை முதலில் செய்ய என்று. யார் யாருக்கு என்ன என்ன வாங்கவேண்டும் என்று யோசிபதே முழு நேர வேளையாக உள்ளது பிறகு எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு எடுத்து வைக்கணும். இத்தனையும் ஒரு வாண்டு வந்து கலைத்து போடும்......பிறகு அவ தூங்கிய பிறகு எடுத்து வைப்பேன். எதுவே வேளையாக உள்ளது. மற்ற தோழிகள் என்ன கூறுகிறார்கள் என்று பாப்போம்.

லாவண்யா

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் எதுவும் சரியாக தான் பதிவு போடுகிறேனா.....இல்ல தப்பான இடத்தில் போடுகிறேனா என்று சந்தேகமாவே உள்ளது. நான் எழுப்பும் கேள்விகளுக்கு என் தோழிகள் விடை அளிபதே இல்லை.

கேள்வி கேட்க என்று எதாவது விதிமுறை உண்டா...இருந்தால் சொல்லவும். இந்த இணையத்தளத்தில் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் என்று நம்பி எழுப்பும் கேள்விகளை தவிர்க்காதீர்கள் தோழிகளே.......

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா, சோர்ந்து போக வேண்டாம். பெரும்பாலனவர்கள் ஊருக்கு போகும் நேரம் இது. பிஸியாக இருப்பார்கள். எனக்கு இதில் அனுபவம் இல்லை. வேறு தோழிகள் பதில் சொல்வார்கள்.
வாணி

ஹாய் தோழிஸ்

லாவண்யா குழப்பம் வேண்டாம்ப்பா.......... குழ்ம்பினால் சில வற்றை மரந்து விடுவேம்.... அதனால் குழப்பம் வேண்டாம்.......

முதலில் பர்சாசிங் முடியுங்கள். நீங்கள் எப்படியும் குழைந்தையுடன் தான் பர்சசிங்க செய்யா போரிங்கள்.....
அதனால் பயம் இல்லை அது முடிந்தாதும் மற்றைவை.

நீங்கள் உங்கள் கணவருக்கு என்ன செய்து வைத்து விட்டு போக வேண்டும் என முதலில் லிஸ்ட் போடுங்கள்.....

அப்போதுதான் எதையும் மரக்க மாட்டிர்கள்...

ஊருக்கு போகும் முதல் நாள் மாவாட்டி போடுங்கள்..... அன்று வெங்கய சட்னி, தக்காளி தொக்கு, காரக் குழம்பு என செய்யுங்கள்.....

அதர்க்கு முதல் நாள் சயங்கலாம் சப்பாதி திரட்டி fரிஸ் பன்னுங்கள்ப்பா......

****நீங்கள் கோட்டதில் இன்னும் சில....****

அப்பரம் டைம் இருந்தால் அப்பலம், வத்தல் என வருத்து வைக்கலாம்.

வாழக்காய், கருனை, செமை கிழ்ங்குகள் வருத்து வைது போங்கள்..... இது 2 நாள் வைத்து அண்ணா சாபிடுவார் இல்லையா.....
( எண்ணெய் கெஞம் அதிகம் சேர்க்கனும்)

தயிர் தேய்த்து வைத்து விட்டு போங்கள்....

காரக்க்க குழம்பு ( வத்த குழம்பு ) செய்து வைக்காலம்..... காய் இல்ல்லாம் இருந்தால் 1 வாரம் இருக்கும்.

கைபடமல் செய்யனும். அண்ணாமும் சாப்பட்டு அயிட்டதில் கைப்படம பார்த்துக்குனும்.

சாப்பிடதும் அனைத்தும் fரிஜில் வைக்கனுஇம்.....

வாணி செல்வது போல் அனைவரும் ஊருக்கு போயிட்டு இருங்கப்பா...... அதனால் தான் பதிவு இல்லை.

உங்கலுக்கு குழப்பம் வேன்ண்டாம்......

இதில் செல்வது அனைத்தும் என் அனுபவும்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

புளிக்காய்ச்சல் செய்து வைக்கலாம்.

மாங்காய் தொக்கு செய்து வைக்கலாம்

வனிதா இந்த லிங்க்ல

http://www.arusuvai.com/tamil/node/12998

எலுமிச்சை சாறு (சாதத்துக்கு) கொடுத்திருக்கிறார்கள். பிரிட்ஜ் இல் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாது என்று கூறி இருக்கிறார்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

Hi லாவண்யா ஏன் டென்ஷன் ஆகிறீங்க? நானும் கூட வீடுமாற,ஊருக்குன்னு பேக்கிங்கில் தான் இருக்கேன்? நீங்க எப்படியிருக்கிறீங்க?
உங்க பொண்ணு எப்படியிருக்காங்க? நீங்க அடுத்த வாரிசுக்கு ரெடின்னு நினைக்கிறேன்...சரியா? வாழ்த்துக்கள்.கூலா இருங்க...

உங்களுக்கு எத்தனை நாட்களுக்கு உணவு தயாரிக்க முடியும் என்று பாருங்கள்.நான் சமீபத்தில் செய்தவை...

கொத்தமல்லி துவையல்,இஞ்சி துவையல், கார(புளி)குழம்பு...இது எண்ணெய் அதிகமாக ஊற்றி செய்தால் ஒரு வாரம் அதற்குமேல்(மீதமிருந்தால்) வரை கூட வரும்.சட்னி,துவையல் வகைகள் கூட தண்ணீர் இல்லாமல் அதிகமாக எண்ணெய் விட்டு செய்யும் பொழுது நீண்ட நாட்களுக்கு கெடாது.இங்கே கொஞ்சம் ஹெல்த் பற்றி யோசிக்கக்கூடாது.

பிறகு,இட்லி,சில வகை வெரட்டி ரைஸ் கூட செய்து ஃபிரீசரில்(Freezer) வைத்து ஒரு மாதம் வரை உண்ணலாம்,இட்லி,தோசைக்கு மாவு அரைத்து வைத்து விடுங்கள்.புளியோதரைக்கு செய்யும் குழம்பு செய்து கூட வைத்து விடலாம்.எல்லாவகை உணவுமே 2-5 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.பொதுவாக கடைகளில் கிடைப்பது போல அனைத்து உணவுகளுமே வீட்டில் கைப்படாமல் அதிகம் தண்ணீர் இல்லாமல் செய்து ஃப்ரீஸரில் வைத்து விட்டால் ஹோம்மேட் ஃப்ரோசன் ஃபுட் ரெடி.

நீண்டநாள் கெடாமலிருக்கும் உணவிற்கு மரக்கரண்டி அல்லது ஈரமில்லாத ஸ்பூன்ஸ் பயன் படுத்துங்கள்.எனக்கும் இதில் கொஞ்சம் அனுபவம் தான் வேறு யாராவது தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.

நன்றி.

சாயந்திரமே உங்களுக்கு ஒரு பதிவு போட பல குறிப்புகள் தேடி "பதிவு செய்" பண்ணா error வந்து எல்லாம் போச்சு :-((

இந்த topic பல முறை பலர் கேட்டு நிறைய members reply பண்ணியிருப்பதை பார்த்திருக்கிறேன்.ஆனால் இப்போ மன்றத்தில் எந்த category-க்கு கீழ் இருக்கும் என்று தெரியவில்லை :-((

Please read குறிப்பு regarding storage
http://www.arusuvai.com/tamil/node/8232

இதில் உள்ள சில ideas உபயோகமாகும் என நினைக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/forum/no/8311?from=0&comments_per_page=10

Patience is the most beautiful prayer!!

உங்கள் பணிவான வார்த்தைகளுக்கு நன்றி.....

நான் மட்டும் தான் ஊருக்கு கிளம்பிறேன் என்று நினைத்து குதித்து விட்டேன்.....எல்லோரும் ஊருக்கு செல்கிறார்களா.....எப்பொழுது புரிகிறது அவர்களுக்கும் எவ்ளோ டென்ஷன் வேலை இருக்கும் என்று......இந்த விழியத்தை என் சிறு மூளைக்கு புலபடுதியதற்கு ரொம்ப நன்றி.....

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க சொல்வது முற்றிலும் சரி....குழம்பிய காரியம் கெடும்.....ஆகையால் குழம்பாமல் எல்லாவற்றையும் ஆரம்பிக்கிறேன்.....

ஆம் குழந்தையுடன் தான் ஷாப்பிங்.....கையில் ஒன்னு.....வயற்றில் ஒன்னு.....ஹிஹிஹி.....பிரசவத்திற்காக ஊருக்கு போகிறேன்......

இப்போ புரியுமே என் எவ்ளோ டென்ஷன் மற்றும் கொழப்பம் என்று......

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்