ஐஸ்க்ரீம் குச்சிகள் கொண்டு ஒரு அழகிய டிசைன்

தேதி: July 23, 2009

3
Average: 3 (3 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சி
கோல்டன் பேப்பர்
பழைய நோட் அட்டை
கருப்பு நிற வெல்வெட் பேப்பர்
ஃபெவிக்கால்
கத்தி

 

கொடுக்கப்பட்டுள்ள தேவையானப்பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஐஸ்க்ரீம் குச்சிகளை 2 அல்லது 3 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இவ்வாறு ஊற வைப்பதால் ஐஸ்க்ரீம் குச்சிகளை நன்கு வளைப்பதற்கும், வெட்டுவதற்கும் எளிதாக இருக்கும்.
முதலில் ஏதேனும் ஒரு பழைய நோட் அட்டையை செவ்வக வடிவில் எடுத்துக் கொண்டு அதன் அளவை விட இரண்டு இன்ச் கூடுதலாக கருப்புநிற வெல்வெட் பேப்பரை வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வெல்வெட் பேப்பரின் நான்கு ஓரங்களிலும் ஃபெவிக்காலை தடவும்.
பெவிக்கால் தடவிய பிறகு நோட் அட்டையை வெல்வெட் பேப்பரின் நடுவில் வைத்து சுற்றிலும் மீதி உள்ள பேப்பரை அட்டையின் பின்புறம் வரும்படி வைத்து ஒட்டவும்.
அடுத்து அட்டையில் செய்திருக்கும் வெல்வெட் ஃப்ரேமின் ஓரங்களில் ஒட்டுவதற்கு ஏற்றாற்போல் கோல்டன் நிற பேப்பரை இரண்டு இன்ச் அளவில் அகலத்திலும், நீளத்திலும் நறுக்கிக் எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய பேப்பர் முழுவதும் பெவிக்காலை தடவவும்.
இதைப் போல் அட்டையின் ஓரங்கள் சுற்றிலும் பாடர் போல் கோல்டன் பேப்பரை ஒட்டி விடவும். இப்பொழுது சுவரில் மாட்டுவதற்கான ஃப்ரேம் தயார்.
ஊறிய குச்சியை ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும். முதலில் பூ ஜாடியின் அடிப்பாகம் செய்வதற்கு மூன்று குச்சிகளை பாதியாக வெட்டினால் ஆறு துண்டுகள் கிடைக்கும். அதில் ஐந்து குச்சிகளின் ஓரங்களை மட்டும் கத்தியால் லேசாக செதுக்கிக் கொள்ளவும்.
காம்புகள் செய்வதற்கு மெல்லியதாக 4 குச்சிகளை வெட்டிக் கொள்ளவும். ஒன்று பெரிதாகவும் மற்றவை சிறிதாகவும் நீளமாக வெட்டவும். நடுவில் வைக்கும் மொக்கு செய்யவதற்கு குச்சியை சிறிய துண்டாக உடைத்து அதன் ஓரங்களை செதுக்கி வட்டமாக செய்து மூன்று துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். சிறிய இலைகள் செய்ய குச்சியை கால் பாகம் உடைத்துக் கொண்டு உடைத்த பாகத்தை மட்டும் செதுக்கி கூர்மையாக ஆக்கவும். இதுப்போல் இரண்டு இலைகள் செய்துக் கொள்ளவும்.
பெரிய பூ செய்வதற்கு ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை எடுத்து அதை கத்தியால் சமமான அளவில் இரண்டாக வெட்டவும். உடைத்த குச்சியின் முனையை கூர்மையாக செதுக்கி 2 இதழ்கள் செய்துக் கொள்ளவும்.(அதாவது ஒரு குச்சியில் இரண்டு இதழ்கள் வரும்படி). இதே போல் மொத்தம் 8 இதழ்கள் செய்யவும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் ஃப்ரேமில் முதலில் ஜாடியின் அடிப்பாகத்திற்காக வெட்டிய ஐந்து குச்சிகளை வரிசையாக ஒட்டவும்.
செதுக்கிய ஐஸ்க்ரீம் குச்சியின் தூள்களை மண் போல் இருப்பதற்குகாக ஜாடியின் நடுவில் வைத்து ஒட்டவும். பிறகு அதன் மையப்பகுதியில் வெட்டி வைத்திருக்கும் பெரிய நீளமான காம்பை முதலில் ஒட்டி விடவும். மற்ற மூன்று காம்புகளும் படத்தில் காண்பித்துள்ளபடி இடதுப்புறத்தில் ஒன்றும், வலதுப்புறத்தில் இரண்டு என்ற கணக்கில் ஒட்டவும்.
பிறகு இடதுப் புறத்தில் ஒட்டிய காம்பின் முனையில் வட்டமாக வெட்டிய குச்சியும், அந்த காம்பின் நடுவில் இரண்டு இலைகளையும் ஒட்டவும். வலதுப்புறத்தில் உள்ள ஒரு காம்பில் வட்டமாக வெட்டிய குச்சியும், மற்றொரு காம்பில் ஒரு இதழின் கூர்மையான முனை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
இறுதியில் பெரிய நீளமான காம்பின் நடுவில் வட்டமாக வெட்டிய குச்சியை ஒட்டி விட்டு அதனை சுற்றிலும் 7 இதழ்களை ஒட்டவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு சுலபமாக செய்யக்கூடிய அழகிய பூ ஜாடி தயார். இந்த ஃப்ரேமின் மேல் முனையின் நடுவில் சிறிய ஒட்டையிட்டு வரவேற்பறையில் மாட்டி வைக்கலாம். இந்த பூ ஜாடியில் உங்களுக்கு பிடித்தமான வண்ணங்கள் பூசியும், ஸ்டோன்கள் ஒட்டியும் அலங்கரித்துக் கொள்ளலாம்.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த அழகிய டிசைனை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுப்பர்ப், பாராட்டுக்கள் பாப்பி. :))))
நல்ல ஐடியா, உங்கள் கைவேலை அழகாக இருக்கிறது. இன்னும் நிறையக் குறிப்புகள் தரவேண்டும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு.கலர் காம்பினேசன் அருமை. ஆனால் யார் செய்தது என்று பெயர் போடவில்லை.

எனினும் வாழ்த்துகள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

hi
it's so beautiful.nice colour combinations,gud work keep going.Best wishes.
anbudan
kala

Kalai

டிசைன் மிக அழகாக இருக்கிறது. தொடர்ந்தும் பல கைவேலைகள் செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta