குடல் கத்திரிக்காய்

தேதி: July 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

இந்த குடல் கத்திரிக்காய் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

ஆட்டுக்குடல் – மீடியம் சைஸ் ஒன்று
கத்திரிக்காய் – கால் கிலோ
பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் - 1 - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - 5 மேசைக்கரண்டி (அரைக்க)
எண்ணெய் - 3 - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

குடலை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த குடலுடன் சிறிது கறி மசாலா சேர்த்து பிரட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி, மல்லி தழை, கத்திரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மிளகாய் மல்லி தழை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் தக்காளி வதக்கியவற்றுடன் சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட்டு சுத்தம் செய்த குடலை போட்டு கிளறி விடவும்.
அதன் பின்னர் பருப்பு மற்றும் கறி மசாலாவை சேர்த்து கிளறி விடவும்.
குடல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.
இரண்டு விசில் வந்ததும், தீயின் அளவை குறைத்து அரை மணி நேரம் வேக வைத்து இறக்கவும்.
குக்கரை திறந்து குடல் வெந்து விட்டதா என்று பார்க்கவும். குடலும் பருப்பும் சேர்ந்து வெந்து பார்க்க தளதளவென்று இருக்கும்.
இதில் நறுக்கின கத்திரிக்காய் மற்றும் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி விட்டு உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
மீண்டும் குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.
சுவையான குடல் கத்திரிக்காய் ரெடி. இதனை ப்ளைன் சாதத்துடன் பரிமாறவும். இதனை சப்பாத்தி, ராகி தோசை, அரிசி மாவு ரொட்டியுடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசியா,
நல்ல குறிப்பாக இருக்கு. பருப்புச் சேர்த்துச் செய்திருப்பது புதுவிதமாக இருக்கு. ஊருக்குப் போயும் தொடர்ந்து குறிப்புக் கொடுக்கிறீங்கள். எப்போ திரும்புவீங்கள்?. எனக்கு இக்கறி விருப்பம். உங்கள் வெள்ளைக் கத்தரிக்காய் பார்க்க ஆசையாக இருக்கு.

ஆனால் என்னவர் இறைச்சி தவிர வேறெதுவும் தொட மாட்டார், அவருக்கு அருவருப்பாக இருக்கும். நான் ஈரல்(கோழி, ஆடு) மட்டும், எனக்கு மட்டும் செய்வேன், பிள்ளைகளும் அப்பாபோல், தெரியாமல் வாய்க்குள் வைத்துவிட்டாலே துப்பிப்போடுவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.இது எப்பவாவது இங்கு வாங்கினால் இப்படி நான் சமைத்து கொடுப்பேன்.சரி,அறுசுவையில் யாரும் விரும்புவார்களோ என்ற ஐயத்துடன் தான் கொடுத்தேன்,சரி பிரியப்படுகிறவர்கள் செய்து பார்க்கட்டுமே என்று அனுப்பினேன்.நாம் சுத்தமாக கழுவி சமைத்தால் மணமும் ருசியும் அபாரமாக இருக்கும்.என் மாமாவிற்கு இன்னும் உடல் தேறி நடக்க முடியவில்லை,,இடையில் விசா renewal போய் வரணும்.இப்ப என் கணவரும் மகனும் ஊர் வந்து இருக்கிறார்கள்.(summer vacation -u.a.e.)ஒரு மாதம் இருப்பார்கள். இங்கு காற்று,தூறல் என்று சீசன் நல்ல இருக்கு.இனி கொஞ்சம் பிஸி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ஆசியாக்கா
நலமா??அதிராவின் கதை தான் என் கதையும்..அதை விட மோசம் என்று சொல்லலாம் மட்டனை கூட தொட மட்டார்..
சின்ன வயசில் இதுவெல்லாம்ச் ஆப்பிட்டதுண்டு பெரிசான பின் சாப்பிட ஒரு சின்ன சங்கடம் மாதிரி..ஆனால் இதை பார்த்த பிறகு சப்பிட ஆசையாக இருக்கு..அழகாக செய்து காண்பித்திருக்கிறீர்கள்...தமிழ் நாட்டில் குடலை சுத்தம் செய்யும் முறையும் கேரளாவில் செய்யும் முறையும் கொஞ்சம் மாறுபடும்.எல்லா குடலையும் தணீரில் நல்ல அலசை பிழிந்து விட்டு ஒரு தெண்ணை குச்சியால் குடலில் கடைசி முனையில் குத்தி பின்புறமாக இழுத்து குடலை அப்படியே இன்சைட் அவுட்டாக வெளியாக்கி விடுவார்கள்.அதன் பின் கொதித்த நீரில் போட்டு பலமுறை கழுகி எடுப்பார்கள்.சுத்தமாக ஸ்மேல்லே வராது.

ஆஹா ஆசியாக்கா நம்ம ஊரு குடல் கத்தரிக்காய் முறை அப்படியே செய்து இருக்கீங்க. இதே மெத்தட்லதான் நாங்களும் செய்வோம். என் கணவருக்கு இது ரொம்ப இஷ்டம். ஆனால் நான் குடலை கண்டாலே பத்தடி ஓடி விடுவேன். ஊருக்கு போனாலும் அவர் அக்கா, அல்லது என் அம்மா செய்து கொடுப்பாங்க. உங்க ஹஸ் வந்ததால் ரொம்ப பிஸியாக இருப்பீங்க.

தளி என் அம்மாவும் நீ சொல்லும் முறையில்தான் க்ளீன் பண்ணுவாங்க. ஒரு சில நேரம் தென்னங்குச்சிக்கு பதில் கத்தியில் சொருகு பிறட்டி விடுவாங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நலமா?ரீமா,அஃப்ரா எப்படி இருக்காஙக,உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.என்ன வேலை கிடந்தாலும் அப்ப அப்ப அறுசுவையை எட்டி பார்க்க தவறுவதில்லை.தோழிகள் அனைவரிடமும் பேசாவிட்டாலும் பார்ப்பது போல் ஒரு உணர்வு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா குடல் கத்திரிக்காய் நீங்க போடுவீர்கள் என்று நினைத்தேன்,
இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் முறை தான் (கருவேப்பிலை, கரம் மசாலா சேர்த்ததில்லை.

ரொம்ப அருமையான ரெசிபி, குடல் புண்ணை ஆற்றும். இதில் சூப் வைத்து குடிக்கலாம், மிளகு சேர்த்து கூட்டு போலும், தக்காளி கூட்டு போலும் வைக்கலாம்.

குடலை கிளீன் செய்ய தளிகா சொல்வது போல் தான் நாங்களும் செய்வோம். இல்லை வெத்தலைக்கு போடும் சுண்ணாம்பு சேர்த்து ஊற வைப்பார்கள்.

ஆனால் இப்ப வினிகரில் வெண்ணீர் சேர்த்து ஊறவைத்தாலே சூப்பரா கழண்டு வந்துவிடும்.

Jaleelakamal

மிக்க மகிழ்ச்சி,உங்கள் பின்னூட்டம் பார்த்து.கூட்டாஞ்சோறுவில் முன்பு குடல் கத்திரிக்காய் ரெசிப்பிசிறிது மாறுதலுடன் கொடுத்தேன்,அதில் சுத்தம் செய்யும் முறை கூட கொடுத்து இருந்தேன்.சுண்ணாம்பு தேய்த்து கழுவினால் அப்படியே அழுக்கு கழண்டு வெள்ளைப்புடவை போல் ஆகிவிடும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai asiya umar nan arusuvaila pudusa join panni irukkan enakku friendse illa romba kashtama irukku nan ippo bahrainla irukkan yaravadu bahrain friends irukkingala pls sollunga.
reya suresh