இறால் ஸ்பெஷல் மசாலா

தேதி: July 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
நல்லெண்ணய் - 30 கிராம்
கருவேப்பிலை - சிறிது
செட் 1
தேங்காய் துறுவல் - 50 கிராம்
ஜீரகம் - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
சிகப்பு மிளகாய் - 9 (எண்ணிக்கை)


 

செட் 1ஐ நன்கு அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு, சிவந்து வந்ததும், அதில் கருவேப்பிலையை போடவும்.
அரைத்து வைத்த மசலாவையும், இறாலையும் அதனுடன் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
நன்கு தண்ணீர் சுண்டியதும், நன்கு கிளரி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

காந்திமதி,
'செட்' என்றால் என்ன? விளக்குவீர்களா?
இமா

‍- இமா க்றிஸ்

இமா,

ஆனாலும் இவ்வளவு கிண்டல் கூடாது. கேள்வியைப் பார்த்து, சோனியாவோ என்று நினைத்தேன்; நேரம் போகவில்லையோ?

;--D

உண்மையாகவே தெரியவில்லை ஹுசேன். கொஞ்சம் சொல்லிவிட்டுச் சிரியுங்களேன். இலங்கைச் சமையலில் இப்படி ஒன்று கேள்விப்பட்டதில்லை.
இமா

‍- இமா க்றிஸ்

இமா,

நீங்கள் சொலவதை உண்மையென்று நம்பி விளக்குகிறேன்.

"செட் 1" என்பதை "அரைக்க வேண்டிய சாமான்கள்" என்று மாற்றிப் படிக்கவும்.

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?

காந்திமதி, எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு இது தோன்றவில்லை. தமிழ்ச்சொல் என்று நினைத்துக் கேட்டுவிட்டேன்.
நன்றி ஹுசேன், உங்களுக்கு அரட்டையில் பதில் கொடுக்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்