பட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா

சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.எனக்கு அளிக்கபட்ட இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி. தலைப்பை பார்த்தவுடன்
இந்த தலைப்பு தேவையா என்று தோன்றும். ஆனால் செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் இருப்பதால் இதை விவாதித்து பார்க்கலாமே என்று தோன்றியது. ஆகவே இந்த வாரம் நான் திருமதி. பஜீலா அவர்களுடைய தலைப்பான செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா..என்பதை தேர்ந்தெடுத்து உள்ளேன். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது தேவையா என்று விவாதிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை விவாதிக்கலாம்.

நடுவர் அவர்களே வணக்கம். பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருக்கும், கலந்துக்க போகிற அனைத்து சகோதரிகளுக்கும் என் வணக்கம்.

நான் இந்த பட்டிமன்றத்தில் செல்போன் நமக்கு அவசியம் என்ற அணியில் வாதாட வந்திருக்கிறேன்.

எந்த ஒரு விஷயத்திலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி நன்மையுடன் தீமை இருக்குத் தான் செய்யும். 10 நன்மைகள் இருக்கும் இடத்தில் 2 தீமைகள் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இப்போது இந்த தலைப்பின் படி செல்போனால் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகள் இருக்கும் பட்சத்தில் செல்வோன் எவ்வாறெல்லாம் அவசியம் என்று பார்க்கலாம் வாங்க!!!

செல்போனில் நாம் பேசுவது தவிர மற்ற சில நன்மைகள் இதோ:-

* மெயில் பார்க்கலாம் --> பாக்கெட் இன்டர்நெட் மூலமாக
* போட்டோ
* வீடியோ
* வாய்ஸ் ரெக்காடின்ங்
* பாடல்கள் கேட்க
* அலார வசதி.
அவ்வளவு ஏங்க டார்ச்சு லைட்டா கூட வச்சுக்கலாம்--அதுவும் எளியவர்களும் வாங்கும் விலையில்.

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் பிரபலமான விளம்பரம் ஒன்று --> அதன் ஆரம்பம், "டாக்டர் இப்ப டெக்னாலஜி நம்மளை அன்ஃபிட் ஆக்கிடுச்சா" ?அதன் முடிவு ""வாக் அன்ட் டாக்"". ஆக தீமை இருக்கு என்பதால் அதை அவசியமில்லை என்பதை சொல்லுவதை விட அதன் நன்மையை கருத்தில் கொண்டு எப்படி தீமையை நன்மையாக்கனும் பார்த்து மாற்றுவது தான் புத்திசாலித்த்னம்.

அடுத்த பதிவில் எனக்கு நடந்த உண்மை சம்பவத்தோடு வருகிறேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

செல்போன் நமக்கு அவசியமில்லை என்று சொல்ல யாராவது வருவார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.இன்னும் வரவில்லை.ஆனாலும் பொறுமையின்றி வந்துவிட்டேன்.

நடுவர் அவர்களே பெண்களாகிய நாம் முன்னேறுவதற்கு கைகொடுத்ததில் இந்த செல்போனுக்கும் பங்குண்டு.பெண்கள் என்றால் பக்கத்து வீட்டுக்கு தனியே அனுப்ப பயப்பட்ட காலம் போய் தனியே காரை எடுத்துக்கொண்டு வெளீயே போவதற்கெல்லாம் துணிவைக்கொடுத்தது இந்த போன் தானே.காரில் சென்று கொண்டு இருக்கும்போது பாதை தவற விட்டுவிட்டீர்கள் அல்லது ஆக்சிடண்ட்.அல்லது நீங்கள் செல்லுமிடத்துக்கு வர நேரமெடுக்கும்.ஹாண்ட் பிரேக்கை இழுத்துப்போட்டுவிட்டு பப்ளிக் போன் தேடி ஓட முடியுமோ.அதுக்காக கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது தூக்கி காதுக்குள் வைக்கிறோம் கவனம் சிதறி ஆக்சிடண்ட் ஆகிறோம் என்றெல்லாம் சொல்லவேண்டாம்.ட்றைவ் பண்ணூம்போது எப்படி பயன்படுத்தவேணுமோ அப்படித்தான் உபயோகிக்கிறோம்.வழிக்குத்துணையாக இன்னொருவர் நம்மோடு வந்து சிரமப்படுவதைவிட பாக்கட்டில் வைத்திருக்கும் இந்த வழித்துணையால் நன்மைகள் மிக அதிகம்.முக்கியமாக வீட்டுக்கு வெளியே சென்றால் நமக்கு செல்போன் இல்லாமல் வெளியில் உலவுவதை நினைத்துப்பார்க்கமுடியுமா?வெளியே சென்று நிறைய அலுவல்களை முடித்து வருவதற்று வீட்டுக்கும் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களூக்கும் தொடர்பு கொல்லவேண்டி வரும்போது பப்ளிக் டெலிபோன் தேடி ஓட வேண்டுமானால் எத்தனை தடவை ஓட முடியும்.இதே செல்போன் என்றால் எவ்வளவு ஈசி என்பதை சொல்லவும் வேண்டுமா?

மனிதர்களுக்கெல்லாம் தனிமனித சுதந்திரத்தை கொடுத்ததே இந்த செல்போன் தான்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எதையும் அளவோடு உபயோகிக்கும் போது அதன் நன்மைகளை நம்மால் பூரணமாக ஏற்றுக்கொள்ளமுடியும்.ஆடத்தெரியாதவர்கள் கூடம் கோணல் என்பதுபோல் செல் போன் தான் நம்மைக்கெடுக்கிறது என்று சொன்னால் அது தவறு.ஆங்காங்கே சிலர் தவறாகப்பயன்படுத்த்வதை வைத்து செல்போன் தீமை என்று சொன்னால் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக்கொளுத்துவதுபோல்தான்.

இங்கு செல்போனால தீமை என்று பார்க்கும் போது 85 வீத நன்மையும் 15வீத தீமையும் இருக்கத்தான் செய்கிறது.இந்த குறந்தளவு தீமைக்காக செல்போன் பாவிப்பது அவசியமற்றது என்று சொல்ல முடியாது.அதைவிட இந்த தீமையும் நம்மை வந்து சேர நாம் அனுமதிக்க வேண்டும்.இல்லாத பட்சத்தில் இங்கு தீமையை பற்றி நாம் கவலை கொள்ளவேண்டிய அவசிமே இல்லையே???

யாராவது avasiyamillai என்று சொல்ல வந்தால் மீண்டும் வருகிறேன்.

கலகலக்கும் பட்டிமன்றம் ஆரம்பித்துவிட்டதா?எனக்கு என்னமோ உங்கள் பட்டிமன்றம் வந்தவுடன் பாடத்தோன்றிவிட்டது,செல்போன் மணி போல் சிரிப்பவள் இவளா?வனிதாவின் பாட்டு இழையினால் வந்தது தான்.பட்டிமன்ற கருத்துக்களை முடிந்தளவு தவறாமல் வாசிப்பேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.இப்போதைக்கு அது மட்டும் தான் முடியும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தேன்மொழி ரெண்டு வரியில் சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டீங்க.

வனிதா வாங்க வந்து சண்டை போடுங்க. ஆனா யாருகூட சண்டைன்னுதான் இன்னும் தெரியல:)

அதிரா பட்டிமன்றம் அமரிக்காவில் நடக்கவில்லை. நாகையில் ஒரு ஆலமரத்தடியில்தான் நடக்கிறது:)

//இப்போ இன்னும் நாகரீகம் வளர்ந்து, செல்போனுக்கு மவுசு அதிகமாகிவிட்டது, மேல்மாடி அறையிலிருந்துகொண்டு கீழே கிச்சினில் நிற்கும் மனைவிக்கு, "ஒரு ரீ கிடைக்குமா பிளீஸ்" எனச் சொல்லவும் பெரிய உதவியாக இருப்பது இந்த சீதேவியாகிய செல்போன் தானுங்கோ:)//

ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எனக்கு. எங்கே நடக்குது இப்படி?:)

நடுவர் அவர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் வணக்கம்.
நானும் செல்போன் அவசியம் என்றா அணிக்கே வதட வந்திருக்கிறேன்.
இப்போது இயந்திர மயமான வாழ்க்கைக்கு ஒரு அறுதல் இந்த செல்போன் தான் ஏன் என்றால் இப்போது நாம் குடும்பங்கள் எல்லாம் வேலை நிமித்தமோ அல்லது வேறு காரணங்களாலே ஒரே நேரத்தில் விட்டில் இருக்க முடிவதில்லை அப்போது நாம் அன்பை பகிர்த்து கொள்வதற்கு இந்த செல்போன் தான் உதவுகிறது என்று கூறி என் முதல் வாதத்தை முடித்துக்கொள்கிறேன்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

தனிஷா வழக்கம்போல் வாந்து பாயின்ட்ஸ்ஸை அடுக்கிட்டீங்க.

//புதிதாக திருமணம் செய்ய போகிறவர்களுக்கும், காதலர்களுக்கும் இந்த செல்பேசி கண் கண்ட கடவுளை போன்று விளங்குகிறது.//

சொன்னீங்க பாருங்க இது சூப்பர்:)

மிரிண்டாதானே குடுங்க. நீங்க தந்து நான் வேணாமின்னு சொல்வேனா:)

சுபா இப்படி திகில் தொடரில் வருவது போல் சரியான இடத்தில் நிருத்திட்டீங்களே.

//அடுத்த பதிவில் எனக்கு நடந்த உண்மை சம்பவத்தோடு வருகிறேன்.//

உங்கள் அனுபவத்தை கேட்க நானும் ஆவலாக உள்ளேன்.

ஆஸியா மிக்க நன்றி. உங்களால் முடியும்போது வந்து உங்கள் கருத்தையும் சொல்லுங்க.

சுகா வந்து அதுக்குள் வாதத்ததை முடித்துக் கொண்டேன்னு சொல்லிட்டீங்களே. நீங்கள் சொல்வதும் வாஸ்தவமான விஷயம்தான்.

ஷரொன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

//செல்போன் நமக்கு அவசியமில்லை என்று சொல்ல யாராவது வருவார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.இன்னும் வரவில்லை.ஆனாலும் பொறுமையின்றி வந்துவிட்டேன்//

ஹி.ஹி..நானும் அப்படித்தான்:-)

பார்ப்போம் எதிரணியிலிருந்து ஒருத்தர் கூடவா வராமல் போய் விடுவார்கள்:-) வாங்க! இந்த செல்ஃபோனின் தொந்தரவு தாங்காமல் போனே வெச்சுக்கிறதில்லை என்று சொல்பவர்கள் வாங்க வந்து உங்கள் கருத்தை சொல்லுங்க:)

நடுவர் அவர்களே:)
உங்களுக்கு இம்முறை வேலை மிச்சமென நினைத்துச் சந்தோஷப்பட வேண்டாம்:)... இனித்தான் எதிரணியினர் முழங்கிக்கொண்டு வரப்போகிறார்களோ எனப் பயமாக இருக்கு:), அதுக்குள் ஒன்று சொல்லிவிட்டு ஓடிடறேன்:).... நான் முன்பு சொன்னதை நாங்கள் இம்முறைதான் கரெக்ட்டா கடைப்பிடிக்கிறோம்... அதுதாங்க..... ஒற்றுமையாக ஒரே கட்சியில இருக்கிறோம்:).....

எனக்கொரு சந்தேகம்:)
நாகையில நாவல் இருக்கும்.... ஆலமரமும் இருக்கோ?:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வின்னீ.. இம்புட்டு ஈசியா தலைப்பு கொடுத்துட்டீங்களே... :) போன ரெண்டு முறையும் ரொம்ப யோசிச்சேன்.. இந்த வாட்டி தேவை இல்லையே.. :)

கத்திய காமிச்சு நன்மை அதிகமா தீமை அதிகமான்னு கேட்டிருந்தீங்கன்னா எல்லோரும் ஆடிப் போயிருப்போம் :) இப்படி உடலோட ஒரு அங்கமாவே ஆயிப் போயிட்ட எங்கட செல் போனை பத்தி கேட்டா என்னத்த சொல்ல !! :)

எதிரணியில யாரும் வருவாங்களான்னே தெரியல.. அப்படியே வந்தாங்கன்னா - ஒரே ஒரு ரிக்வஸ்ட் - இந்த பட்டிமன்றம் முடியற வரைக்கும் வீட்டுல இருக்க எல்லோரோட செல் போனையும் ஆப் பண்ணி வச்சுட்டு அப்புறம் இங்க வந்து பேச சொல்லுங்க.. ஒரு வாரம் கழிச்சு தன்னால நம்ம வழிக்கு சாரி அணிக்கு வந்துடுவாங்க :) பர்சை மறந்துட்டு கூட வெளிய போயிடலாம்.. செல் போனை மறந்துட்டு போக முடியுமா? :)

ஒரு வேளை தீர்ப்பு சொல்லற வேலைய ஈசியாக்கிடலாமுன்னு நினச்சிட்டு இருக்கீங்களோ :) ?? எதிரணியில யாருமே இல்லைன்னா - அப்புறம் நீங்க தான் இறங்கி பேசணும், இப்பவே சொல்லிட்டோம் :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்