பட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா

சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.எனக்கு அளிக்கபட்ட இந்த வாய்ப்பிற்கு மிக்க நன்றி. தலைப்பை பார்த்தவுடன்
இந்த தலைப்பு தேவையா என்று தோன்றும். ஆனால் செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் இருப்பதால் இதை விவாதித்து பார்க்கலாமே என்று தோன்றியது. ஆகவே இந்த வாரம் நான் திருமதி. பஜீலா அவர்களுடைய தலைப்பான செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா..என்பதை தேர்ந்தெடுத்து உள்ளேன். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இது தேவையா என்று விவாதிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை விவாதிக்கலாம்.

நேரம்மில்லாமல் சிறிது வரத் தாமதமானால் இங்கு என்னனவோ போகிறதே....
வந்தேன் ....வந்தேன்...
எனக்கு எதிரணியினரின் வாதங்கள் புரியவில்லை .....
காட்லெஸ் போனை வரவேற்கும் எதிரணியினர் ஏன் அதைவிட சின்னதாக(கைக்கு அடக்கமாக) எப்பொழுதும் available ஆக இருக்கும் செல்போன் அவசியம் இல்லை என்கிறார்கள் என்று தெரியவில்லை.
என் கணவர் லிஸ்டும் கொண்டு போவார் இருந்தாலும் கடையில் எந்த இடத்தில் எது இருக்கும், என்ன brand வாங்க வேண்டும், இன்னும் எதாவது விடுபட்டிருக்கிறதா என்ற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு செல்போன் தான் உதவும். என் கணவர் மீதும் நம்பிக்கை உண்டு லிஸ்டின் மீதும் நம்பிக்கை உண்டு செல்போன் இந்த நம்பிக்கைகளை அதிக படுத்துகிறது.
வெறும் மனிதாபிமானம் மட்டும் உதவவில்லை மனிதாபிமானம் செல்போன் மூலம் உதவியிருக்கிறது.
வெறும் துணிச்சல் இல்லை பாதுகாத்தது துணிச்சலுடன் செல்போன் பாதுகாத்திருக்கிறது .
//அப்பொல்லாம் இல்லீங்க இப்போகூட லான்லைன் இருக்கு கூடவே ஆன்ஸர் மிஷினும் இருக்கு, அழைப்பவர் வீட்டில் யாராவது இருக்காங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்குவாங்க//
கையிலேயே போன் இருந்தால் அழைப்பவர் யாரென்று தெரிந்துகொண்டு உடனடியாக பதிலளிக்கலாமே....
//முதலில் எங்கு போறீங்கன்னே... உங்களுக்கு தெரியவில்லை, இரண்டாவது போற வழியும் தெரியவில்லை, அப்படியே கைப்பேசி இருந்தாலும் அதிலிருந்து அழைக்க நீங்க வைத்திருப்பது என்ன அலாவுதினும் அற்புத விளக்கா? அதிலிருந்து ஜீனி கிளம்பி உங்களுக்கு வழிக்காட்ட!!! இப்படி எதுவும் தெரியாமல் நானும் போகிறேன் கச்சேரிக்கு என்று கிளம்புவதற்கு பதில் பேசாம வீட்டிலேயே இருங்க கிளம்புற நேரமாவது மிச்சம்.//
எங்கேயாவது என்று பொதுவாக சொன்னேன் புரியவில்லை போலும்...
//நாங்களும் அதையே தாங்க சொல்கின்றோம், நமது சமூக அமைப்பிற்கு ஏற்றவாறு மனிதர்களைத் தான் தேடிப்போங்கன்னு சொல்கிறோம் ஆனா நீங்க தான் கருவிகளை கட்டிக்கொண்டிருக்கீங்க!!!!.//
மனிதனை தேடித்தான் செல்போனில் பேசுகிறோம் . வேறு எந்த உயிரினமும் செல்போன் வைத்துக்கொள்ளவில்லை....
//தடுக்கி விழுந்தா ஒரு டெலிபோன் பூத் இருக்கும் //
இல்லிங்க ....அதுதான் எல்லோரும் செல்போன் வச்சிருக்காங்களேனு எடுத்துட்டாங்க...
//அவசரமா லீவு வேணும்போது, லேன்ட் லைனில் கூட கூறலாமே....அதுகூட நல்ல பழக்கம் தாங்க!!!//
வீட்டிலிருக்கும்போது நீங்க லேன்ட்லைனில் பேசுங்க வேண்டாம்னு சொல்லல....
ஆனால் வெளியிருக்கும்போதும் உதவுவது செல்போன்தானே ...
வானதி வந்து தெளிவிக்க வேண்டியதை தெரிவிச்சிட்டேன்.....
கவிசிவா ,வனிதா, மனோ மேடம், மனோசெல்போன் நிச்சயம் அவசியம்...அவசியம்...அவசியமே....கரி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
எதிரணியினருக்கும் என் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!

ஹாய் தோழிகளே... நலமா? நலம் அறிய ஆவல்.

இந்த தலைப்பு இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். அனைவரும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. நிறைய விஷயஙகளை அறிந்து கொண்டேன்.

செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா என்று என்னிடம் கேட்டால் என் பதில் அவசியம். செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. என்னை பொருத்தவரை அது அவரவர் உபயோகிக்கும் முறையை பொருந்தும்.

அன்புடன்,
நளினி குமரா

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் தோழிகளே... நலமா? நலம் அறிய ஆவல்.

இந்த தலைப்பு இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். அனைவரும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. நிறைய விஷயஙகளை அறிந்து கொண்டேன்.

செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா என்று என்னிடம் கேட்டால் என் பதில் அவசியம். செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. என்னை பொருத்தவரை அது அவரவர் உபயோகிக்கும் முறையை பொருந்தும்.

அன்புடன்,
நளினி குமரா

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் தோழிகளே... நலமா? நலம் அறிய ஆவல்.

இந்த தலைப்பு இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். அனைவரும் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. நிறைய விஷயஙகளை அறிந்து கொண்டேன்.

செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா என்று என்னிடம் கேட்டால் என் பதில் அவசியம். செல்போன்களால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. என்னை பொருத்தவரை அது அவரவர் உபயோகிக்கும் முறையை பொருந்தும்.

அன்புடன்,
நளினி குமரா

அன்புடன்,
நளினி குமரா

சந்தனா உங்களைத்தான் காணோமே என்று பார்த்து கொண்டிருந்தேன். வழக்கம் போல் அதிரடி தாக்குதல்களோடு வந்துடீங்க:) இங்க வந்த புதிசில் இப்படித்தான் எக்ஸிட்டை மிஸ் பண்ணிட்டு சுத்து சுத்துன்னு சுத்துவோம்:) பக்கத்தில் உட்காந்து இருப்பவங்களுக்கு ஒரே சிரிப்பா இருக்கும். ஆனா ட்ரைவரோ கடு கடுன்னு இருப்பாங்க:-) உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

தேவா, உங்கள் வேலைகளுக்கிடையில் நீங்க வந்ததே பெரிய விஷயம். எனக்கு மிகவும் சந்தோஷம். பின்னே இந்த பட்டிமன்றத்தில் மட்டும் பெரிய பெரிய பாரால்லாம் மிஸ் ஆச்சுன்னா எனக்கு குறையா இருக்காதா:-). நல்ல வேளை அன்று ஹைவேயில் ஒன்றும் ஆகாமல் இருந்தது. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

சந்தனா, தேவாவின் கேள்விகளுக்கு எதிரணியினர் என்ன சொல்ல போறீங்க? நல்ல வேளை நான் நடுவரா இருப்பதால் எனக்கு அந்த வேலையில்லை:-)

வனிதா, வாங்க இப்படி எல்லாரும் கூட்டமா வந்தாதான் பட்டிமன்றம் களைகட்டும்:) குழந்தையையும் வைத்துக் கொண்டு ரொம்பவே கஷ்டப் பட்டுடீங்க.

ஆயிஸ்ரீ, லக்ஷ்மி உங்கள் இருவரையும்தான் காணோமே என பார்த்து கொண்டிருந்தேன். நேற்று மனோகரி அவர்கள் மட்டும் தனி ஆளாக இருந்தார். கொஞ்சம் கூட்டு சேர்த்து விடலாமே என்றுதான் :) செல் வேண்டாம் என்று அறிவியல் ரீதியாக காரணங்களை அடுக்கிட்டீங்க. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

சுபா, கவிசிவா, தேன்மொழி எதிரணியினரின் கேள்விகளுக்கெல்லாம் நல்ல பதிலோடு வந்துட்டீங்க. எதிரணியினர் என்ன சொல்ல போறாங்கன்னு நானும் ஆவலாக இருக்கிறேன். உங்களின் எதிர் வாதங்களுக்கு மிக்க நன்றி.

நளினி வாங்க. உங்களைப் போன்ற புதிய உறுப்பினர்கள் பட்டிமன்றத்திற்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது. நீங்கள் இனி வரும் விவாதங்களிலும் தவறாமல் பங்கு பெற வேண்டும் என கேட்டு கொள்கிறேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

என்ன நடுவர் அவர்களே? இப்படி நீங்களே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனிப்பதிவு போட்டு பட்டி(மன்றத்தை)யை நிரப்பிடுவீங்க போலிருக்கே!!!

நானும்,உங்க கூட சேர்ந்துக்கவா......ஆனா என்ன அணி என்று இன்னும் முடிவே செய்யல...ஹி...ஹி...ஹி...

இன்றைய விஞ்ஞானம் எல்லாவற்றிலும் நன்மையும் உண்டு,தீமையும் உண்டு ஆனால் அதையெல்லாம் வேண்டாம் என்று விட்டுவிடுகிறோமா என்ன???

நடுவரே நீங்களே சொல்லுங்களேன் நான் எந்த அணியில் பேசலாம் என...கொஞ்சம் உதவியாயிருக்குமேன்னு தான் கேட்கிறேன்.

நடுவர் அவர்களே .. என்ன ஆலமரத்தடியில பசிக்குதா?? தாகமெடுக்குதா?? இந்தாங்க மற்றும் சூடான மொளகா பஜ்ஜி, ஆப்பிள் ஜூஸ்..அப்புறம் இந்தாங்க செல் போன்.. இன்னும் வேறதாவது வேணும்னா ஆலமரத்தடி டெலிவரி ஆர்டர் பண்ணி பசியாற்றுங்க :)

ஹி ஹி ஒரு சந்தேகம்.. எதிரணியில பேசறதுக்கு லேட்டஸ்ட் மாடல் செல் ஏதாவது வாங்கி கொடுத்து ஆள் ஏற்ப்பாடு பண்ணுணீங்களா? இந்த போடு போட்டுக்கிட்டு இருக்காங்க எங்க ஊர்ஸ் :)

வனிதா கவலையே வேண்டாம்.. தம் புடிச்சு இன்னும் பதிவுகள் போடுங்கோ.. வெற்றி நமக்கே.. நன்றி தேவா.. நானும் நினைச்சேன், இவங்களும் நம்மை மாதிரியே நினைச்சிருக்காங்கன்னு.. நன்றி சுபா..

அதிரா, இந்த எதிரணியினர் முழங்கி கொண்டு வருவாங்கன்னு எந்த நேரத்துல சொன்னீங்களோ தெரியல, அதே மாதிரியே வந்து இறங்கியிருகாங்க.. :) இவங்களை ஓரங்கட்ட என்ன பண்ணலாம்?? ம்ம்.. எல்லோரும் அவங்க அவங்க செல் போனில பாட்டு நல்ல சத்தமா போட்டு விடுங்கோ.. "திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" :) தனிஷா, கவிசிவா, ஷரோன், தேன்மொழி, சுகா, நளினி... ம்ம் - தூள் கிளப்பறீங்க.. ஜலீலா - ஒரே ஒரு பத்தி போட்டாலும் உங்க சப்போர்ட்டை கொடுத்துட்டு போனதுக்கு நன்றி..

லக்ஷ்மீ.. நீங்க சொல்லறது ஒரு விதத்துல சரி தான்.. கல்லூரி கடைசி வருஷத்துல நிறைய பேர் செல் போன் வாங்கினோம் (அப்போ நாங்க இளைஞர்கள், இப்பவும் அதே தான் :) ) அந்த முதல் செல் போன் காலம் மறக்க முடியாதது :) நிறைய சேவைகளை செய்து வந்தது... (நல்ல படியா தானுங்க :) ) அதுல நேரம் செலவு பண்ணினது உண்மை.. ஏன்னா அந்த காலம் அப்படி.. செல் இல்லைன்னா வெட்டி அரட்டை, சினிமான்னு நேரம் போயிருக்கும்.. அதுக்கப்புறம் பொறுப்பாகிடலையா ?? ஆனா செல் வாங்கினதுக்கப்புறம் நிறைய விஷயங்கள் இலகுவாகின.. வாங்க காசு கொடுத்ததே எங்க குடும்பம் தானே.. முன்னாடி எல்லாம் எங்கப்பா ரயில் நேரமாயிடுச்சுனா எனக்காக ரொம்ப நேரத்துக்கு வெயிட் பண்ண வேண்டி வரும்.. செல் இருந்தா நான் ரயில் ஊருக்கு கிட்ட வரும் போது அப்பாக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்.. எங்க ஹாஸ்டல் ல இன்கமிங் மட்டுந்தான் இருந்தது.. அதுல யாராச்சும் கடலை போட்டு கிட்டு இருந்தா, எங்களுக்கு போன் வராது.. வீட்டுக்கு கால் பண்ண ஒவ்வொரு வாட்டியும் நாங்க வெளிய தான் போகணும்.. இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தான், ஆனா நேரத்த மிச்சப் படுத்தி எவ்வளவோ சிரமத்தை குறைத்தது செல் போன் தான்..

கல்லூரி வளாகத்துல மட்டுமில்லைங்க.. கோயில்ல, வேலை செய்யற இடத்துலயும் போனை கண்டபடி அலற வுட்டா நல்லதில்லை தான்.. அதுக்கு தான் vibration மோட் கொடுத்திருக்காங்களே.. அதுல வைத்துக்கொள்வது தானே...

அப்புறம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான்னா - எனக்கு சொல்ல தெரியல.. அவங்க அதுல நேரத்தை வீண் செய்யலாம் தான்.. நம்ம ஊருல நிறைய போன் பூத்கள் இருக்கு, தேவையிருக்காது தான்.. ஆனா இங்க அப்படி இல்ல.. என்னை கேட்டா, கொஞ்சம் பெரிய பசங்களுக்கு இன்கமிங் மட்டும் இருக்கிற மாதிரி வாங்கி தரலாம்.. இதெல்லாம் அவங்கவங்க அப்பாம்மா பசங்க மேல இருக்கற ஒப்பீனியனை வைத்து முடிவு பண்ண வேண்டியது..

இப்போ நிறைய கம்பெனிகளில் அவங்களே செல் போன் தங்க எம்ப்ளாயிகளுக்கு வாங்கி தராங்க.. ஆன் கால் என்றால் வீட்டுலேயே இருக்க வேணாம்.. வெளியில போயிருந்தாலும் அவங்க கூப்பிட்ட உடனே திரும்பி வர முடியும்..

அப்புறம் செல் தான் மாணாக்கர்களை கெடுக்கிறது என்றால் - என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.. கெட்டு போகிறவர்களுக்கு, கெட்டவர்களுக்கு அது ஒரு கருவி மட்டுமே.. நான் முன்னமே சொன்ன மாதிரி நாம எல்லோரும் அந்த craze ஐ தாண்டி விட்டோம்.. ஆனால் சிலருக்கு அது addiction மாதிரி ஆகிடலாம்னு சொல்லறீங்க.. addict ஆக கூடியவர்களுக்கு எதுவுமே இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை தந்து விடலாம்.. டீவீ சீரியல், டீக்கடை பேச்சு, சீட்டு விளையாட்டு, ஏன் சாப்பாடு (obesity) கூட சிலருக்கு addiction மாதிரி ஆகிடலாம்.. இதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லைங்க.. போதையை தந்து மீள முடியா துயரில் ஆழ்த்தக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.. இது போன்றவர்கள் எதோ செல் போனில் கொஞ்ச நேரம் sms அனுப்பி என்ஜாய் பண்ணி மத்த விஷயங்களில் இருந்து தப்பித்து விடராங்கன்னு வச்சுக்கலாமே :) இந்த கோணத்துல இருந்தும் யோசிச்சு பாருங்க.. :)

//குடும்பத்தோட சுற்றுலா செல்லும் போது செல்போனை கொண்டு போனா நிம்மதி இருக்குமா அப்பத்தான் அலுவலகத்தில் இருந்து கூப்பிட்டு பேசுவாங்க இல்லனா யாரவது சும்மாவது கூப்பிட்டு பேசிக்கொண்டிருப்பது . சில பேரிடம் தான் உடனே கட் பண்ண முடியும் ........//

ஏற்க்கனவே தனிஷா ஒரு ஐடியா சொல்லிட்டாங்க.. அத்தோட இதையும் சேர்த்துகோங்க.. ஏங்கோ - எதோ அவங்க உங்க காதுக்குள்ள வந்து பேசற மாதிரி பீல் பண்ணறீங்க? :) அவங்களுக்கு என்ன தெரியவா போவுது.. எடுக்காம விடுங்க.. இல்லை சைலன்ஸ் மோடுல வச்சு என்ஜாய் பண்ணிட்டு நேரம் இருக்கும் போது திருப்பி கால் பண்ணி பேசுங்க.. அச்சச்சோ - இந்த எதிரணியினருக்கு செல் ல பாதி விஷயமே தெரியலையே :)

லக்ஷ்மீ - நாங்களும் ஆரம்பத்துல இன்டர்நெட் காக லேண்ட் லைன் வச்சிருந்தோம்.. அப்போ செல் தேவையாயில்லை.. அப்புறம் செல் தேவைப்பட்டவுடனே dsl கனெக்ஷன் வாங்கிட்டு லேண்ட் லைனை கட் பண்ணிட்டோம்.. இங்க இப்படி.. எங்க ஊருல யாருக்கும் நெட் கனெக்ஷன் கிடையாது.. அதனால நிறைய பேர் land லைனை விட்டுட்டு செல்லையே மெயினா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. இந்த ரெண்டுல எது வேணும்ன்னு யாரையாவது கேட்டா - கண்டிப்பா செல் தான்னு பதில் வரும்..

அப்புறம் வாகன விபத்து... அதான் சட்டமே போட்டாங்களே.. தமிழ் நாட்டுல இருக்கான்னு தெரியல.. இந்தியா வுல இன்னொரு மாநிலத்துல இருந்தது.. செல் பேசிட்டு வண்டி ஓட்டுனா பைன் கட்டனும்..

அப்புறம் செல்லுல பேசுனா காசு கரையுதா?? எத்தனயோ ஸ்கீம் இருக்கு - அடிக்கடி பேசறவங்க ஒரே நெட் வர்க் ல இருந்தா நோ சார்ஜ்.. இப்படி பாத்து வாங்க வேண்டியது தானே??

பசிக்குது.. சாப்பிட்டுட்டு வந்து "செல்"லுகிறேன்... :) நன்றி எதிரணி தோழி.. :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்