தேதி: July 28, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிவப்பு அவல் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 3 கப்
ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)
பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)
சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். அதனுடன் அவல் சேர்க்கவும்.
பிறகு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்க்கவும்.
பாதாமின் தோலை நீக்க வேண்டாம்
Comments
சிவப்பு அவல் பாயசம்
ரொம்ப நல்லா இருந்ததுங்க. நன்றி.