Home Pregnancy Test

Vanakkam..enakku 8 days period varavillai aanal period vali vullathu..naan home test panni paarthen negative..test panni 2 days aagirucchi innum period varavillai..yen? Home test pannuvathu nallatha?

indrasuresh

இரண்டு விதமான pregnancy test உள்ளன. அது urine மற்றும் blood. இரண்டுமே நமது உடலில் Human Chorionic Gonadotropic (hCG) உள்ளதா என்பதை அறிய உதவுகிறது. எனினும் இரத்த பரிசோதனை தான் சிறந்தது. இருந்தாலும் நாம் வீட்டில் செய்யும் சிறுநீர் பரிசோதனைக்கும் லேபில் செய்வதற்குமே நிறையவே வித்தியாசம் உள்ளது.

நாம் வீட்டில் பரிசோதனை செய்யும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் செல்லும் சிறுநீரில் பரிசோதிக்க வேண்டும் அல்லது நான்கு மணிநேரத்திற்கு அப்புறம் செல்லும் சிறுநீரிலே பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர் கழிபதர்க்காக சிரமப்பட்டு அதிகபடியான திரவம் எடுத்து கொள்ள கூடாது. குறைந்தது மாதவிடாய் தள்ளி போன ஒரு வாரத்திற்கு பிறகு தான் செய்ய வேண்டும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள் எதாவது மாத்திரை அல்லது மருந்து எடுபவராக இருந்தால் அதில் எதாவது (இது உங்கள் home pregnancy டெஸ்டை பாதிக்கும்) எழுதி உள்ளதா என்று பாருங்கள்.

உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்