அறுசுவைக்கு வரமுடியவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்???

என்ன இது புதுசாயிருக்கேன்னு நினைக்கிறீங்களா? வேற ஒன்னுமில்லைங்க,ஒரு சில நாள் சிலரால் அறுசுவைக்கு வரமுடியாத அளவு வேலை,உடல் நிலை மற்றும் வேறெதாவது காரணம் இப்படி இருக்கும் பொழுது எல்லோரும் அடடா அறுசுவையை ரொம்ப மிஸ் பண்றோமேன்னு நினைக்கிறீங்க இல்லையா! அதை பற்றிதான் இங்கே கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

ஓரிரு நாள் அறுசுவைக்கு வரமுடியவில்லை என்றாலே மிகவும் வருத்தப்படுவோர் இங்கே அதிகமுண்டு அதை பலவாறு
வெளி(தெரிய)ப்படுத்தறீங்க‌ இல்லையா அதை தான் இங்கே வந்து சொல்லலாமே!!!

எனக்கு தற்போதைய நிலையில் நினைக்கவே நேரமில்லை,கொஞ்சம் வரமுடியலயேன்னு நினைச்சேன்,அடுத்து ஊருக்கு போயிட்டு வந்தால் தான் தெரியும் அப்போ வந்து எல்லாமே சொல்றேன்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்........

ஹாய் உமா நல்ல தலைப்பு தொடங்கிய உங்கலுக்கு என்னுடைய் வாழ்த்துக்கள்.....

நான் அறுசுவைக்கு வரலைனா ஏதே ஒன்னு மிஸ் பன்னாமாதிரி தெரியும். நீங்கலாம் என்னை விட்டு ஜாலியா இருக்கிங்கக்ன்னு தேனும்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா,இப்படியா ஃபீல் பண்ணுவீங்க??? என்ன எல்லோரும் சந்தோஷமாயிருக்குறாங்கன்றது உண்மைதான்.

சரி, மற்ற தோழிகள் அறுசுவையை மிஸ் பண்ணுறவங்கெல்லாம் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்...

ஹாய் தொழிஸ், ஒரு சில நாள் வரவில்லைன்னா உங்களுக்கு எதையோ மிஸ் பண்ணின மாதிரியிருக்கா? அடிக்கடி சிலர் காணாமல் போறீங்க..... சிலர் காணாமலே போயிட்டீங்க.... என்ன தோன்றுகிறது உங்களுக்கு அறுசுவை பக்கமே வரலைன்னா, என்று கொஞ்சம் சொல்லுங்களேன்............

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

anaivarukkum vanakkam tholihale. ungaludan palahuvatarkaagave yaam vanthom ,yemaiyum serthu kollungal.

ஹாய் உமா,
நலமா? நல்லா கேட்டிங்க எனக்கு அறுசுவையில் ஒரு நாள் வாராவிட்டாலும் அதே எண்ணம் தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கும், வெள்ளி அன்று மட்டும் தான் வரமுடியாது, அதுவும் டைம் கிடைத்தால் கணவரின் Laptop-பை திறந்து ஒரு முறையாவது தோழிகள் யாராவது நம்மை கேட்டிருக்கிறார்களா? என்று பார்ப்பேன். தினமும் Office முடிந்து வீட்டிற்கு போகும் போது என் கணவரிடம் அறுசுவையே பற்றி தான் பேசி கொண்டிருப்பேன், உங்களை பற்றியும் சொல்லி இருக்கேன். திறந்த வாய் மூடாது. அவர் சில நேரம் பட்டிமன்றத்திற்கு கருத்துக்கள் சொல்லுவார்.அறுசுவையில் உள்ளோர் என்னுடைய நெருங்கிய தோழிகளாகி விட்டனர். எல்லோரையும் பார்க்க தான் ஆசை.

ஹாய் கரீனா, நலமா? நானும் கத்தார் தான், ஒருமுறை நீங்க எங்கு இருக்கீங்க கேட்டதும் ஆளவே காணோம், விருப்பம் இல்லாவிட்டால் சொல்லவேண்டாம். ஓகே வா.
அடிக்கடி வந்து அரட்டையில் கலந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

(பாப்ஸூ) வசூல் ராஜா ஸ்டைலில் படிக்கவும்.
இங்க பதிவு போடணும்ன்னு ஆரம்பிச்சு ஆரம்பிச்சு பாதியிலயே வேற வேலை வந்து போடவே முடியல.
ஆமாம் ரொம்ப பிசிதான். எவ்வளவு பிசின்னா, எந்த ப்ரயத்தனமும் இல்லாம 57 கிலோவிலிருந்து 53 கிலோவுக்கு வந்துட்டேன்.
சரி பாப்ஸுக்கு பதில் சொல்வோம்.
கண்டிப்பா எல்லாரையும் மிஸ் பண்ணறேன். வருத்தமும் உண்டு.
ஆனா வருத்தம் வரும் போது அந்த கெட் டு கெதரை நினைத்துக் கொள்வேன்.
நான் எது பேசினாலும் மாமின்னு கல கலன்னு சிரிச்சுக்கிட்டிருந்த நம்ப அறுசுவை குஷ்பு சாதிகா,
உடம்பு சரியில்லைங்கறதையும் புன்சிரிப்புடன் சொன்ன செந்தமிழ் செல்வி (ப்ளஸ் திரு இளங்கோ)
பர்தாவுக்குள் இருந்த சுஹைனா, சீதாலக்ஷ்மி குடும்பம், இடுப்பில் அமிதவர்ஷினிக்குட்டியுடன் வந்த சாரதா, என்னைவிட வேகமாக லொட லொடன்னு பேசின தனிஷா (தனிஷாவின் சமத்துக்குட்டிப்பெண், கணவர்), லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாவந்த ஜெயலக்ஷ்மி, ஸ்கூல் பெண் போல் இருந்த சிஜா தோட்டா, மாலையில் வந்த லக்ஷ்மி குடும்பத்தினர், கீதா ஆச்சலின் சகோதரர்
மற்றும் நம்ப பாபு, பாப்பி எல்லாரையும் சந்தித்தது அப்படியே படம் போல் மனக்கண்ணில் ஓடும்.
மற்றும் முகம் தெரிந்த (போட்டோவில் பார்த்த), முகம் தெரியாத தோழிகளை நினைத்துக்கொள்வேன்.
அப்புறம் நேரில் சந்தித்த மர்ழியா, எல்லோரையும் நினைத்துக்கொள்வேன்.
அப்புறம் கற்பனை கெட் டு கெதர்பதிவுகளை நினைத்துக்கொள்வேன்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
அன்புடன்
ஜே மாமி

நான் வர முடியலை ன்றதை விட வந்துகிட்டு இருக்கறவங்க நம்ம கூட பேசிட்டு இருக்கறவங்க யாராச்சும் காணாம போனா கஷ்டமா இருக்கு.. மிஸ் பண்ணுவேன்.. அதுவும் சொல்லாம கொள்ளாம காணாம போனா ரொம்பவே கஷ்டமா இருக்கு..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நான் அறுசுவைக்கு வரலைனா ஏதே ஒன்னு மிஸ் பன்னாமாதிரி தெரியும் எனக்கு நல்ல தோழிகள்,அண்ணாக்கள்,எல்லாம் இது மூலம் தான் கிடைத்தார்கள் அவர்களை எல்லாம் மிஸ் பன்னின மாதிரி தோணும்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

மாமி எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா? நீங்கள் மட்டுமல்ல அனைவராலும் அதை மறக்க முடியாது. இந்த முறை இந்தியா வந்து தினமும் ஹாஸ்ப்பிட்டல் செல்லவே நேரம் சரியாக இருந்தது. இன்று வரையிலும் அப்படித்தான்.

சாதிக்கா அக்கா, செல்விமா, மனோகரி மேடம், மனோ மேடம், ஜலிலாக்கா, சீத்தாம்மா, ஆசியாக்கா, உடன்பிறப்பு அதிரா, ரூபி, அஸ்மா அக்கா, மேனு, பர்வின்பானு, தாமரை, வானதி, கவிசிவா, கவி,இமா, பிரபா, செபா மேடம், ப்ரதீபா,ரசியா மஹா, வனிதா, ஹாஷினி, ஹர்ஷினி, ரேணுகா, உசேனம்மா, சுபா, அம்முலு, சுஸ்ரீ, ஆயிஸ்ரீ, தேன்மொழி, ஹைஷ் அண்ணா, மாலி, சவுதி செல்வி, சந்தனா, பாப்ஸ் உமா, குட் கேர்ள் உமா, இலா, கதீஜா, அனாமிகா, ஜீனோ, மஹெஷ்வரி,விஜி,சுஹைனா, சுகன்யா,மைதிலி மற்றும் விடுபட்ட என் பழைய உறவுகள், புதிய வரவுகள் எல்லோரும் நலமா? வீட்டில் அனைவரும் நலமா. எல்லோருக்கும் என் அன்பான நலம் விசாரிப்புக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்