புளிச்சக்கீரைத் துவையல் (கோங்குரா)

தேதி: July 31, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

இந்த கீரையில் நார்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி நிறைய உள்ளது. இது வயிற்றுப்புண்ணுக்கு சிறந்தது. குழந்தைகளுக்கான எளிதில் தயாரிக்கக் கூடிய குறிப்புகள் மற்றும் வித்தியாசமான குறிப்புகளை நமது அறுசுவை நேயர்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கும் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள் வழங்கிய மற்றுமொரு சுவையான குறிப்பு இது.

 

புளிச்சக்கீரை - இரண்டு கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால் மட்டும்)
பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கேற்ப)
வெங்காயம் - ஒன்று
சிகப்பு மிளகாய் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு மேசைக்கரண்டி


 

கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து விடவும்.
வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றை மிக்ஸில்யில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் வதக்கி வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்திருக்கும் துவையலுடன் வதக்கியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். சுவையான கோங்குரா துவையல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் இளவரசி,
நல்ல தெளிவான‌ குறிப்பு! எனக்கு புளிச்சக்கீரை துவையல் என்றால் எப்பவுமே ரொம்ப இஷ்டம். உங்க ரெஸிப்பி பார்த்த கையோட சரியா இங்க புளிச்சக்கீரை கிடைக்கவும் உங்க மெத்தெட்டில் வெள்ளியன்று இந்த துவையல் செய்து பார்த்தேன். ரொம்ப அருமையா இருந்தது. இட்லிக்கு பெஸ்ட்டான மேட்ச்! டிபரெண்ட்டான இந்த குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப நல்ல ரெசிபி இளவரசி அவர்களே. மிக அருமையாய் இருந்துது சாப்பிட. பொதுவாக இந்த கீரையை வெறும் மிளகாய் உப்பு போட்டு தான் வேகவைச்சு கடைவாங்க. ஆனால் இந்த முறை படி செய்து பார்த்தேன். சம ஹிட் ஆயிடுச்சு போங்க. இந்த குறிப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி :)) இந்த வெயிலுக்கு உடல் குளுர்ச்சிக்கு ரொம்ப நல்லது இல்லையா. இனிமேல் வெயில் வந்தால் எங்க வீட்டில் கண்டிப்பா உங்களோட இந்த புளிச்சகீரை கீரை துவையல் ஆஜர் ஆகிடும் :)

இதுவும் கடந்து போகும்.

கோங்குரா துவையல் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது நன்றி