எனக்கு உதவி செய்வீர்களா

Hi Sisters எனக்கு 22 வயது திருமணமாகி 3 வருடங்களாகிறது.நான் LONDON வசிக்கிறேன். எனக்கு 2 தடவைகள் Miscourage ஆகியுள்ளது. எனக்கு ஒரே கோபம் கோபமாக வருகுது மறுபக்கம் கவலையாக இருக்கிறது.நானும் என் கணவரும் மிகுந்த மன வருத்ததில் இருக்கிறோம்.யாராவது உதவி செய்யவும். please, எப்போது நாங்கள் சேர்ந்திருக்க வேண்டும், என்னென்ன உணவு சாப்பிடக்கூடாது.

Thanks

அனுஷா கர்ப்பிணிகள் பகுதியில் இதேபோல் ஒரு கேள்விய நான் ஏற்கனவே பாத்திருக்கிறேன்.யாராவது முடிந்தால் அனுஷா விற்கு அந்த லிங் கொடுக்க முடியுமா? எனக்கு தேட முடியாமல் இருக்கிறது.

ஹாய் அனுஷா,

கவலைபடாம இருங்க. இந்த லிங்க் உங்களுக்கு உதவுமான்னு பாருங்க

http://www.arusuvai.com/tamil/forum/no/12002

மற்ற தோழிகளும் வந்து உங்களுக்கு உதவுவார்கள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

anusha aaRuthal theevaipaddaal virumpinal enakku meyil paNNavum.ssharone08அட்gmail.com

அனுஷா கவலைப்படாதீங்க......, இந்த லிங்க் உங்களுக்கு உதவுமானு பாருங்க.

www.arusuvai.com/tamil/forum/no/11155

மன்றத்திலேயே கர்ப்பகால சந்தேகங்களில் கேட்கப்பட்டிருக்கிற கேள்விகளை ஒவ்வொன்றாக பொறுமையா படிச்சு பார்த்தீங்கனா,உங்களுக்கு ஏதாவது தெளிவு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேல உங்க டாக்டர் என்ன சொல்றாரோ அதன் படி நடந்துக்கோங்க.

விரைவிலேயே நல்ல செய்தியை பகிர்ந்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

பதில் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.
கவி அக்கா, நீங்கள் சொன்ன மாதிரி கர்ப்பிணி பெண்கள் பகுதி அனைத்தையும் படித்தேன். எனக்கு பல சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது. இருப்பினும் மனதுக்கு திருப்தியில்லை. எனக்கு April மாதம் 2nd Miscarrige ஆனது அதற்கு பிறகு ஒழுங்காக pried வருவதில்லை. அதாவது 4,5 நாட்கள் lateஆக வருகிறது. இதனால் பிரச்சனையில்லையா? எனது Doctor ஒரு வைத்தியமும் செய்யவியில்லை.Folic Acid 400 ug tablets மட்டும் பாவிக்கிறேன்.நான் Londonல் வசிப்பதால் எனக்கு உதவி செய்ய ஒருதரும் இல்லை. எனது குடும்பம் Sri lankaல்.

Many Many Thanks
Anusha

தோழி அனுஷா! கவலைபடாதீங்க. விரைவில் நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள இறைவனை வேண்டுகிறேன். இது போல மல்டிபிள் மிஸ்கேரேஜ் நடக்கும் போது ஒரு விதமான கலக்கம் இருக்கும். இதன் பின் பல குழந்தைகள் பிறந்தாலும் இந்த வலி மாறாது காலப்போக்கில் தான் மனசு ஆறும் அதுவரை என்ன செய்ய??!!! முடிந்தவரை நல்ல விஷயங்களை நினையுங்க. கடவுள் பக்தி உண்டு என்றால் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணை போட்டு எல்லா காரியமும் செயுங்க. இந்த சமயத்தில என்ன தேவை என்றால் "Something to look forward to " அது நாமாகத்தான் ஏற்படுத்திக்க முடியும்.மிஸ்கேரேஜுக்கு அப்புறம் இப்படி சில மாறுதல்கள் இருக்கும். இது ஒரு Phase and you will be alright my dear!

லண்டனில் இப்படி மல்டிபிள் மிஸ்கேரேஜ் பிரச்சனை உள்ளவர்களை டிரீட் செய்ய தனியாக ஒரு கிளினிக் இருக்கு. உங்களால் முடிந்தால் சென்று பார்க்கவும் . நான் சென்றதில்லை இது என் பிரச்சனைக்காக தேடிய போது நெட்டில் கிடைத்தது.

http://www.channel4.com/health/microsites/H/health/magazine/miscarriage.html

Recurrent Miscarriage Clinic (RMC)
RMC: St Mary's Hospital
Winston Churchill Wing
Praed Street
London W2 1NY
Helpline: 020 7886 7777
Website: www.miscarriageclinic.co.uk
Featured in the programme, Staying Alive: Tales of Miscarriage, RMC is the largest such clinic in Europe. Patients must be referred by their doctor or another hospital. Online information includes articles on the causes of miscarriage, frequently asked questions and a publication list.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என் நம்புகிறேன்.

அன்புடன்
இலா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அனுஷா மிஸ்கரேஜுக்கு பிறகு இந்த மாதிரி மாற்றங்கள் வருவது சகஜம்தான். கவலைப்படதலும்,பத‌ட்டப்படுதலும், மிஸ்க்ரேஜுக்கு ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்,அதனால நார்மலா இருங்க...., இது கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் முயற்சி பண்ணலாமே..

தனியா இருக்கோமே'னு நினைக்காதீங்க,அறுசுவைக்கு வாங்க இங்க தோழிகள்,அக்காக்கள்,அம்மாக்கள்'னு நிறைய பேர் இருக்காங்க.இங்க வந்து எல்லோர்க்கூடவும் பேசுங்க,என்ன சந்தேகங்கள் வந்தாலும் கேளுங்க இங்க இருக்கவங்க முடிந்தவரை உதவி செய்வார்கள்.

இலா சொன்னமாதிரி உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ,அதில கவனத்தை திருப்ப முயற்சி பண்ணுங்க.கண்டதையும் நினைச்சு மனச‌ போட்டு குழப்பிக்காதீங்க,நடக்க வேண்டியது தானா நடக்கும்,அதுவும் நல்லதாகவே நடக்கும் சரியா...

அனுஷா
கவலைப்பட வேண்டாம்.Miscarriage ஆனபின் சில மாதங்களுக்கு இப்படித்தான் periods குழப்பம் இருக்கும் அது சாதரணம் தான்.எனக்கும் அப்படித்தான் இருந்தது. நானும் treatment எதுவும் எடுக்கவில்லை.6 மாதம் கழித்து தானாகவே சரியாகிவிட்டது.நல்ல ஹெல்த்தியான உணவு முறையை கடைபிடித்தால் மட்டும் போதும்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் கோபம் வரத்தான் செய்யும்(அனுபவம் தான்......) ஆனால் கோபப்ப‌டுவதால் என்ன லாபம் என்று சிந்தியுங்கள்.மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.என்ன பிரச்சனை என்றாலும் அறுசுவையில் மனம் விட்டு பேசுங்கள்.நல்ல பாடல்களை கேளுங்கள்.இசைக்கு மனதை லேசாக்கும் சக்தி உண்டு.

உங்களுக்கு 22 வயது தானே ஆகிறது.வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசியுங்கள்.கணவருடன் வெளியில் செல்லுங்கள். எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணாமல் நான் எல்லா கஷ்டங்களையும் மீறி மீண்டு வருவேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.உங்கள் மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ளும் ரகசியம் உங்களுக்குள் தான் உள்ளது.

என்ன‌ அதிக‌ம் பேசி விட்டேனா? மேற்கூறிய‌வை எல்லாம் என‌க்கு நானே டிரை செய்த‌துதான்.எல்லாம் ந‌ல்ல‌தாக‌வே ந‌ட‌க்கும் ச‌ரியா.

அன்புட‌ன்
திவ்யா.

நன்றி கவி அக்கா நீங்கள் இலா அக்கா,திவ்யா அக்கா,லக்மி அக்கா சொன்னமாதிரி இருக்க முயற்சிக்கிறோன். எனக்கு நேரம் இல்லாததால் தளத்திற்கு வரமுடியவில்லை.இலா அக்கா நீங்கள் London தானா இருக்கிறீங்கள். நீங்கள் சொன்ன Miscarriage clinicற்கு போகவில்லை 4,5மாதங்கள் கழித்து போகிறோம்.நான் part time படிக்கிறேன், part time வேலை செய்கிறேன்.வீட்டில் இருப்பது குறைவு இருந்தாலும் எனக்கு கவலை.

Many Thanks
Anusha

மேலும் சில பதிவுகள்