இஞ்சி சப்பாத்தி

தேதி: August 1, 2009

பரிமாறும் அளவு: 3 குழ‌ந்தைக‌ளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோதுமை மாவு - கால் கிலோ
உப்பு - ஒரு தேக்கரண்டி
பட்டர் (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி


 

கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.
பிறகு அதை சப்பாத்தியாகவோ, கொசுவம் வைத்து பரோட்டா போன்று இல்லை வேண்டிய வடிவில் செய்து த‌வாவில் போட்டு சுட்டெடுக்க‌வும்
பெரியவர்களுக்கு பட்டர், நெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து குழைத்து கொள்ளலாம்.
பனீர் மின்ட் கறி, வெஜ் குருமா, மட்டன் சிக்கன் குருமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


பிள்ளைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க அடிக்கடி பரோட்டா ரொட்டி, சப்பாத்தியில் இதுபோல் இஞ்சி சாறு சேர்த்து சுட்டு கொடுக்கலாம்.
பச்சைமிளகாய் பேஸ்ட்க்கு பதில் சிறிது மிளகுத்தூள் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இதில் லேசாக ஜாம் தடவி பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம்

மேலும் சில குறிப்புகள்