முருங்கைக்கீரை கேரட் துவரன்

தேதி: August 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கன்னியாகுமரி வட்டாரங்களில் இந்த முறையில் செய்யப்படும் பொரியலை துவரன் என சொல்வார்கள். முருங்கைக்கீரை இரும்பு சத்து, வைட்டமின் ‘சி’, புரோட்டீன், நார்சத்து மற்றும் பல சத்துக்கள் நிறைந்தது. இருதய நோய் வராமல் தடுக்கிறது. கேரட்டும் சேரும் போது வைட்டமின் ‘எ’ யும் கிடைக்கிறது. <b> திருமதி. இளவரசி </b> அவர்கள் தனது மாமியார் செய்யும் முருங்கைகீரை துவரனை, ஒரு மாறுதலுக்காக கேரட் துருவல் சேர்த்து நமது அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியுள்ளார்.

 

முருங்கைக்கீரை - 4 கப்
கேரட் துருவல் – ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய்பொடி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

முருங்கைக்கீரையை ஆய்ந்து, அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலுடன் மிளகாய் பொடி மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக நீர் சேர்க்காமல் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
கீரை பாதியளவு வதங்கியதும் உப்பு மற்றும் கேரட் துருவலை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் இரண்டும் சேர்ந்து நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து வதக்கவும்.
தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி பச்சை வாசனை அடங்கியதும் இறக்கி விடவும்.
சுவையான எளிதாக செய்யக் கூடிய முருங்கைக்கீரை கேரட் துவரன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப அருமையாக இருக்கு. பார்த்ததும் சுவைக்க தோணுது. வாழ்த்துக்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இளவரசி அக்கா இந்த கீரை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு..... இத செஞ்சி பார்த்துட்டு சொல்லரேன்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் இளவரசி அக்கா நான் முருங்கைக்கீரை கேரட் துருவள் செஞ்சேன். ரொம்ப நல்லா இருந்ததுக்கா.........

என் அஸ்சும் பாராட்டினார்..... நன்றிக்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*