பருப்பு ரசம்

image

வழங்கியவர் : PadmaPriya Suresh

தேதி : புதன், 05/08/2009 - 15:56

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

0
No votes yet
Your rating: None
 

 

  • துவரம் பருப்பு : 2 மேசைக்கரண்டி
  • தக்காளி : இரண்டு
  • பச்சை மிளகாய் : 2அல்லது3
  • மிளகாய் தூள் : இரண்டு தேக்கரண்டி
  • தனியா தூள் : 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை
  • புளி : சிறு எலுமிச்சை அளவு
  • சீரகம் : அரைத்தேக்கரண்டி
  • மிளகு : அரைத்தேக்கரண்டி
  • பெருங்காயம் : சிறிது
  • உப்பு : ஒரு மேசைக்கரண்டி
  • பூண்டு : 4
  • கொத்தமல்லி : சிறிது
  • கறிவேப்பிலை : சிறிது

 

  • பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளி கரைத்து வைக்கவும்.
  • தக்காளியை மசித்து வைக்கவும்.இதனுடன் பச்சை மிளகாய் கிறி போடவும்.மிளகாய் தூள்,தனியா தூள் போடவும்.
  • வெந்த பருப்பையும் தண்ணீரையும் அதில் சேர்க்கவும்.புளியை ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கி வைத்துள்ள கலவையை ஊற்றவும்.
  • ஒரு பாத்திரத்தில் மிளகு, சீரகம் பொடி செய்து போடவும்.பூண்டு நசுக்கி போடவும்.கொத்தமல்லி சேர்க்கவும்.
  • கடாயில் உள்ள கலவை நுரை கட்டியவுடன் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி உடனே மூடவும்.
  • சுவையான ரசம் தயார்.

Note:

ரசம் கொதிக்க கூடாது. பருப்பு சேர்க்காமல் தண்ணீரை மட்டும் சேர்த்தால்,தக்காளி ரசம் தயார்.







அன்புள்ள பத்மபிரியா, உங்கள் குறிப்புகளில், நேற்று பருப்பு ரசம் செய்தேன். மிகவும் நன்றாக, சுவையாக இருந்தது.. மிகவும் நன்றி...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய் பத்மப்பிரியா எப்படி இருக்கீங்க உங்க பருப்புரசம் செய்தேன் நான் இதுவரை மிளகாய்த்தூள் சேர்த்ததுகிடையாது செய்துப்பார்த்தேன் நன்ராக இருந்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்