முந்திரி மசாலா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - 100 கிராம்
பச்சைபட்டாணி - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்பால் - ஒன்றரை கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பல்
வெள்ளரிவிதை - 2 தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி


 

இஞ்சி, பூண்டு, இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சிறிது முந்திரி, இரண்டு தேக்கரண்டி வெள்ளரி விதை, கசகசா ஆகியவற்றை தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை காய வைத்து அதில் வெங்காயம், பச்சைபட்டாணி போட்டு வதக்கவும். அத்துடன் முந்திரியையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி இதனுடன் தக்காளி அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதனுடன் அரைத்த முந்திரி விழுதையும் தேங்காய் பாலையும் சேர்க்கவும். தேவையான உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கலவை சற்று கெட்டியாகும் வரை விடாமல் கிளறி கொதிக்க விடவும். இறுதியில், கரம் மசாலா தூளைத் தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்