சிக்கன் பிரியாணி - 3

தேதி: August 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கோழிக்கால் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - ஒரு கட்டு
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
தக்காளி - ஒன்று
முழுப்பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கரம் மசாலா பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தக்காளிப் பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
கறுவா (பட்டை) - ஒரு துண்டு
கிராம்பு - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய் - ஒரு மேசைக்கரண்டி


 

கோழிக்காலை நான்கு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியின் தோலை நீக்கி வைக்கவும்.
அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு அரிசியை முக்கால் பதத்திற்கு சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கோழியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் உப்பு, தக்காளிப்பழம் சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கவும். அடுத்து தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதில் கரம் மசாலா பேஸ்ட், பிரியாணி பேஸ்ட், எக்ஸ்ரா ஹாட் பேஸ்ட் சேர்த்து மூடி வேகவிடவும். கோழி நன்கு வெந்ததும் குழம்பாக இருக்கும்பொழுது இறக்கி வைத்துவிடவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து அது உருகியதும் முதலில் சாதத்தைப் போடவும்.
அதன் மேல் இறக்கிவைத்திருக்கும் சிக்கன் குழம்பு கறியை விடவும். மீண்டும் அதன் மேல் சாதத்தை போட்டு அடுத்து குழம்பு கறி என்று இதுப்போல் மாறிமாறி செய்யவும்.
பிறகு ஒரு முறை சாதத்தை கிளறி மூடி வைத்து அடுப்பை சிம்மில் விடவும். ஐந்து நிமிடம் கழித்து பிறகு இறக்கவும்.
இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் முட்டை அல்லது ஏதாவது ஒரு பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சிக்கன் பிரியாணி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்டது போல் கறியை வைத்து எல்லாப் பேஸ்ட்டுக்களும் சேர்த்த பின்பு அரிசியைப் போட்டு மூடி வேகவைத்தும் சமைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வத்சலா சூப்பர் பிரியாணி. சிக்கின் வைத்துள்ள விதம் பார்க்க என்னவோ செய்கிறதே...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் வத்சலா! சிக்கன் பிரியாணி பார்க்க நன்றாக இருக்கின்றது. சுவையும் நிச்சயம் நன்றாக இருக்கும். இவற்றை சிவப்பு பச்சை அரிசியில் செய்தால் எப்படி இருக்கும். செய்து அனுபவம் இருந்தால், பதில் தரவும். அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அதிரா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

ராணி, நான் இது வரையில் சிவப்பு பச்சை அரிசியில் செய்யவில்லை. சிவப்பு பச்சை அரிசியில் சோற்றை உதிரியாக வடிக்க முடியுமா? அதில் பசை தன்மை அதிகமாக இருக்கும். நீங்கள் செய்தால் சொல்லுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"