எளிமையாக செய்யக்கூடிய ஒரு அழகிய பூந்தொட்டி உறி

தேதி: August 17, 2009

4
Average: 3.8 (6 votes)

இந்த அழகிய பூந்தொட்டி உறியை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

பாக்கிங் நாடா (ரேயான் ராஃபியா - Rayon Raffia) - 20 மீ
பெரிய மணிகள் - 16
கத்தரிக்கோல்
ஊசி

 

பூந்தொட்டி உறி செய்வதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ராஃபியா நாடாவினை 2.5 மீ அளவிலான 8 துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் ஒரு முனையில் சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.
அனைத்து நாடாக்களையும் ஒன்றாக சேர்த்துப் பிடித்து இரண்டாக மடித்துக் கொள்ளவும். மடித்த இடத்திலிருந்து 5 செ.மீ தள்ளி ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். (இதற்கு சாதாரணமாகப் போடும் வளைய முடிச்சுப் போதுமானது). இப்பொழுது பூந்தொட்டியில் தொங்கவிடுவதற்கான வளையம் தயார்.
முடிச்சுப் போட்டிருக்கும் வளையத்திற்கு கீழே உள்ள ஏதாவது இரண்டு நாடாத் துண்டுகளைத் எடுத்துக் கொள்ளவும். பிறகு முதலாவது முடிச்சிலிருந்து 30 செ.மீ தள்ளி இந்த இரண்டு நாடாத் துண்டுகளையும் இணைத்து ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
இப்பொழுது அடுத்தடுத்து உள்ள ஒவ்வொரு இரண்டு நாடாத் துண்டுகளையும் சேர்த்து இதேப் போல் முடிச்சுப் போட்டு வைக்கவும். இந்த முடிச்சுக்கள் முதலில் போட்ட முடிச்சுக்கு ஒரே நேராக வருமாறு போட்டுக் கொள்ளவும். கூடுமானவரை இதில் பின்னல்கள், சிக்கல்கள் வராமல் அடுத்தடுத்து வரும் நாடாத் துண்டுகளைப் பார்த்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முடிச்சுப் போடப்படும் சமயங்களில் இரண்டு நாடாக்களும் ஒரே நீளமாகவும், அடியில் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஏதாவது ஒரு தொகுதி நாடாக்களில் ஒரு பெரிய மணியை நுழைத்துக் கொள்ளவும். அந்த மணி போட்டிருக்கும் முடிச்சிற்கு மேலே வருமாறு வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மணியின் கீழ் உள்ள இரண்டு துண்டு நாடாக்களையும் தனித்தனியாக மணியில் உள்ள துளையில் விட்டு சுற்றி, மேலே கொண்டு சென்று மீண்டும் உள்ளே நுழைத்து கீழ்ப்பக்கம் இழுத்து விட வேண்டும். இதுப்போன்று மீதியுள்ள ஏழு தொகுதி நாடாக்களிலும் மணிகளைக் கோர்த்துக் கொள்ளவும்.
பிறகு ஏதாவது ஒரு தொகுதிகளில் கோர்த்திருக்கும் மணியிலிருந்து வரும் ஒரு நாடாவை எடுத்துக் கொள்ளவும். அதன் அருகே இருக்கும் இன்னொரு மணியில் உள்ள ஒரு நாடாவை இதனோடு சேர்த்து மணியிலிருந்து 15 செ.மீ தள்ளி ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் இரண்டாவது நாடாத் துண்டினை மூன்றாவது மணியில் இருந்து வரும் ஒரு நாடாவோடு சேர்த்து இதுப்போல் முடிச்சிட்டுக் கொள்ளவும். (முதலாவதாக முடிச்சிட்ட மணியில் மீதமுள்ள நாடாத் துண்டினை அப்படியே தனியாக விட்டு வைக்கவும்). இதுப்போன்று அடுத்தடுத்து வரும் மணிகளில் உள்ள நாடாக்களை சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். கடைசியாக மீதமுள்ள ஒரு நாடாவை முதலில் தனியாக விட்டு வைத்திருக்கும் நாடாத்துண்டோடு சேர்த்து முடிச்சிட்டுக் கொள்ளவும்.
முன்பு கோர்த்தது போன்று மீதமுள்ள எட்டு மணிகளை முடிச்சு வரும் இடங்களில் கோர்த்துக் கொள்ளவும்.
இரண்டாவதாக கோர்த்திருக்கும் மணிகளின் கீழ் உள்ள எல்லா நாடாக்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும். 5 அல்லது 6 செ.மீ தள்ளி அந்த மொத்த நாடாக்களையும் சேர்த்து இறுக்கமாக ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
அதன் கீழ் இருக்கும் ஒவ்வொரு நாடாத் துண்டுகளையும் ஒரு ஊசி முனையால் குஞ்சம் போன்று கவனமாகப் பிரித்து விடவும்.
குஞ்சத்தை ஒன்றாகப் பிடித்து ஒரே சீராக வெட்டி விட்டால் பூந்தொட்டிக்கான அழகிய உறி தயார். இதில் 'ராஃபியா' நாடா அழகாகத் தெரிந்தாலும் வெளிப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. அதிக பாரமும் தாங்காது. கனமான தொட்டிகளுக்கு இங்கு செய்து காட்டியுள்ள முறைப்படி நைலான் கயிறு கொண்டு பின்னிக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா அழகா பண்ணி இருக்கீங்களே.எப்போதாவது செய்து பார்க்கிறேன்.

Patience is the most beautiful prayer!!

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி உத்ரா.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta