பனீர் கட்லட்

தேதி: August 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துருவிய பனீர் - 11/2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1கப்
கரம்மசாலா - 1டீஸ்பூன்
பட்டர் - 1/2டீஸ்பூன்
கார்ன்மாவு - 1டேபிள்ஸ்பூன்
மைதா - 1டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
ரவை - 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

வெண்ணெயில் துருவிய பனீரை போட்டு சிவக்காமல் மணம் வரும் வரை வதக்கிக்கொள்ளவும்.
அதே வாணலியில் 1டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய குடைமிளகாயை வதக்கிக்கொள்ளவும்.
அனைத்துப்பொருட்களையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
இதனை விருப்பமான வடிவில் கட்லட்டுகளாக செய்து ரவையில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்து, மயோனைஸ், சாஸுடன் பரிமாறவும்.


பனீரை பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்தவுடனேயே கேரட் துருவியால் துருவினால் இலகுவாக துருவ வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா எப்படி இருக்கிங்க? இன்று எங்கள் திருமண நாளுக்கு உங்கள் பனீர் கட்லெட் தான் செய்தேன். நன்றாக நல்ல ரீச்சாக இருந்தது,படம் எடுத்துள்ளேன்.
கணவருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்ப ரொம்ப பிடித்து சாப்பிட்டார்கள்.நன்றி..

பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி விஜி,குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி

arusuvai is a wonderful website