பீர்க்கங்காய் குழம்பு

தேதி: August 19, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பீர்க்கங்காய் - 1 கப்(பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது.


 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், பீர்க்கங்காய் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பீர்க்கங்காய் வெந்த பின் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி விட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்