எளியமுறையில் அழகாக போட்டுக் கொள்ளக்கூடிய மெகந்தி டிசைன்கள்

தேதி: August 20, 2009

4
Average: 3.6 (26 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், அறுசுவை நேயர்களுக்காக நீங்களும் செய்யலாம் பகுதிக்கு வழங்கியுள்ள மெகந்தி டிசைன்ஸ் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எளிதாக போடக்கூடியவை இந்த மெகந்தி டிசைன். மேலும் திருமணம் போன்ற விசேஷ தினங்களில் போடக்கூடிய மெகந்தி டிசைனையும் நம்முடன் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார்.

 

மெகந்தி கோன்

 

இந்த படத்தில் உள்ள டிசைன் சிறிய குழந்தைகளின் கையில் சுலபமாக வரையக் கூடிய மெகந்தி டிசைன்.
சிறிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கைகளில் டாடூ போன்று போடக்கூடிய மற்றொரு சுலபமான டிசைன் இது.
கையில் மேடான பகுதிகளில் சிறிய பூக்கள் போன்று வரையவும். வரைந்த பூக்களுக்கு மேலே இன்னும் இரண்டு பூக்கள் வரைந்துக் கொள்ளவும். பிறகு மூன்று பூக்களின் இதழ்கள் அல்லது இடைவெளி பகுதிகளிலிருந்து காம்பு போன்று வரைந்து அதன் ஒரங்களில் இலைகள் தொடர்வது போல் வரைந்துக் கொள்ளவும். குழந்தைகளின் கைக்கு பொருத்தமான டிசைகளில் இதுவும் ஒன்று.
இந்த படத்தில் உள்ளது போல் கை, கால் இரண்டிலும் போட்டுக் கொள்ளக்கூடிய மற்றொரு டிசைன்.
இதுப்போன்ற மெகந்தி டிசைன் கைவிரல்களின் முன்பக்கத்தில் முழுவதும் போடாமல் மணிக்கட்டு பகுதிகளிலிருந்து வரைய ஆரம்பித்து ஆள்காட்டிவிரல் முழுவதும் போடக்கூடிய மிகவும் சுலமபான டிசைனாகும்.
இது பெரியவர்களின் உள்ளங்கை மற்றும் விரல்கள் முழுவதும் எளிதாக வரையக்கூடிய மெகந்தி டிசைன்.
அடுத்து காலுக்கு போடக்கூடிய இந்த டிசைன் கால் கட்டைவிரலின் ஒரங்களிலிருந்து வரைய ஆரம்பிக்கவும். மருதாணி கோனைக் கொண்டு வளைவு வளைவாக கால் ஒரங்கள் முழுவதும் வரைந்து, படத்தில் உள்ளது போல் வளைவிற்கு கீழுள்ள டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
பிறகு வளைவில் உள்ள இடைவெளி முழுவதும் முக்கோணம் போன்று டிசைன் வரைந்துக் கொள்ளவும்.
அந்த முக்கோணத்திற்கு உள்ளே இடைவெளிவிட்டு சிறிய கோடுகள் வரைந்துக் கொள்ளவும். இதுப்போன்று கால்களுக்கு மிகவும் அழகாகவும், எளிதாகவும் போட்டுக் கொள்ளக்கூடிய மற்றொரு டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

hi,
எப்படி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு மருதாணி டிசைன்ஸ்.

indira

ஹாய் வனிதா சூப்பரா இருக்குப்பா...... டிசைன் நல்லா போட்டு இருக்கிங்கபா...... பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு......

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அட்மின் நண்பர்களே..... மிக்க நன்றி. எப்படி அனுப்பவதுன்னு தெரியாம அனுப்பி இருந்தேன்.... அதுக்கு ஒரு ஷேப் குடுத்து நல்லா வெளியிட்டு இருக்கீங்க. உங்க உழைப்புக்கு எனது நன்றிகள் பல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி இந்திரா, மிக்க நன்றி பிரபா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனீ...,
சொல்ல முடியாத அழகு உங்கள் மெஹந்தி டிசைன்கள். சுபர்ப்.. சுபர்ப் ..சுபர்ப். :)
தொடர்ந்து நிறைய டிசைன்கள் கொடுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இன்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் இன்னும் கொஞ்சம் simple design இருந்தா நானும் ட்ரை பன்னலமேனு. நீங்கள் simple disign கொடுத்து கலகிடீங்க.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் வனிதா அக்கா,

உங்க மெகந்தி டிசைன் சூப்பரா இருக்கு. ரொம்ப எளிமையாவும் அழகாவும் இருக்கு. தொடர்ந்து அனுப்புங்கள்.

வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

வனிதா! சூப்பர்... இப்படி சிம்பிள் டிசைன் எல்லாம் முன்னாடியே கொடுக்கறது.. இப்ப என் பிரெண்ட் கையில மயில் போட்டு இருக்கேன்.. அதுக்கு வந்த கமென்ட்ஸ்.
"இது வான்கோழியா இல்லை கோழியா??!!!"" கெஸ் பன்னுங்க :((

"நீ குழந்தைகிட்ட பவ் பவ் ந்னு சொல்லி டாக்கி (doggy)சொல்லுமா... "

"பாதி மட்டும் போட்டா மீதி பாதி யாரு போடுவாங்க"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இமா.... மிக்க நன்றி. உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. :)

ஸ்வர்ணா... நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்கோ. கஷ்டமா இருக்காது போட.... மிக்க நன்றி.

சுபா... மிக்க நன்றி. நிச்சயம் இனி தொடர்ந்து அனுப்பறேன்.

இலா.... மிக்க நன்றி. இதுக்கு முன் நான் எப்பவும் மெகன்தி டிசைன்ஸ் அறுசுவையில் பார்த்ததில்லை. உமா அனுப்பிய பிறகே இது அனுப்பலாம் என்று தெரிந்தது. உங்களுக்கு வந்த கமன்ட்ஸ் பார்த்து சிரிச்சுட்டேன்... ஏன்னா காலேஜ் படிக்கும்போது முதன் முதலில் நான் இந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன்.... அப்போ எனக்கு கிடைத்த கமட்ஸ் நினைவுக்கு வந்தது. உங்களை விட மோசமா வாங்கினேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,
சூப்பரோ சூப்பர் டிஸைன்ஸ்!. ரொம்ப சிம்பிளா, தெளிவா, ரொம்ப அழகா கொடுத்து இருக்கிங்க. பாராட்டுக்கள்! :)
உமா குறிப்பு பார்த்ததுமே எனக்கு மலரும் நினைவுகள் (நான் போட்டுக்கொண்ட, என் பொண்ணுக்கு போட்டுவிட்ட நினைவுகளெல்லாம்..) வந்து உடனே போட விருப்பம் எழுந்தது, நேரம் கிடைக்காமல் தட்டிக்கொண்டு போகிறது. இப்போ உங்க டிசைன்ஸ் பார்க்கவும், ரொம்பவே ஆசையா இருக்கு...கூடிய சீக்கிரம் போட்டுப் பார்த்திடறேன். இன்னும் இதுபோல நிறைய எங்களுடன் ஷேர் செய்துக்கொள்ளுங்கள் வனி. நன்றி!

ஹலோ இலா,
நலமா? அம்மா இப்ப எப்படி இருக்காங்க?
உங்க கமெண்ட்ஸ் வரிகள் படிக்கவும் சிரித்துவிட்டேன்! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

முகப்பில் எல்லோரும் வனிதாவைக்கூப்பிடுவதைப் பார்த்து, ஏன் கூப்பிடுகிறார்கள் என உள்ளே வந்தேன்.... ஓ.. சூப்பர்.... கலக்கலாக இருக்கு, கூடவே வயிறும் எரியுது, எனக்கு ஆசை ஆனால் போடவராது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனி, உங்க கைவண்ணம் ரொம்ப அழகா இருக்கு. ம்ம்..எனக்கு கைல போடவே வராது, நான் எந்த காலத்தில் காலில் போடறது:) டிஸைன்ஸ் பார்க்க சுலபமா தெரியுது.

வனிதா, உங்களோட ஒவ்வொரு டிசைனும் சூப்பர். ரொம்ப அழகா இருக்கு. தெளிவாவும் இருக்கு. அந்த கொலுசு போட்ட கால் அழகு அந்த மருதாணியோட பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப பொறுமை உங்களுக்கு. என்னோட மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் எத்தனை திறமை கைவசம் இருக்கு? எழுத்திலும், சமையலிலும், இப்படி மெஹந்தி டிசைன்னு பல விஷயங்களில் அசத்தறீங்க. வாழ்த்துக்கள்.

சுஸ்ரீ... மிக்க நன்றி. கையில் இப்போ போட்ட மெகந்தி போகட்டும், அடுத்த டிசைனோடு மீண்டும் வருகிறேன். ;) நீங்க கண்டிப்ப ட்ரை பண்ணி பாருங்கோ மீண்டும்.

அதிரா..... வனிதாவை கூப்பிடுறாங்களே என்ன விஷயம்'னு ஓடிவந்து பார்த்த உங்க அன்பை நான் என்னன்னு சொல்ல.... :) ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி. [மறக்காம ஒரு ஜூஸ் சில்லுன்னு குடிங்கோ..... வயிற்று எரிச்சலுக்கு அதுதான் நல்லது] ;) ஹிஹிஹீ.

வின்னீ... நிஜம்மாவே ரொம்ப ஈஸி தான்... போட்டு பாருங்கோ சுலபமா வந்துடும். மெகந்தி போடும்போது எங்க ஆரம்பிக்கிறோம்'ன்றது தான் முக்கியம்.... சரியா ஆரம்பிச்சு கோனை சரியாக பிடிக்க வந்துட்டா எல்லா டிசைனும் ஈஸியா போட்டுடலாம்.

தேவா மேடம்.... உங்க திறமை எல்லாம் நாங்க பார்த்து ஆச்சர்யபடறோம்.... நான் வெறும் கத்துகுட்டி தான், நீங்க இது போன்ற விஷயங்களில் ப்ரொபஷனல். உங்க பாராட்டு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி. உங்க நேரத்தை செலவு செய்து பதிவு போட்டிருக்கீங்க.... அது இன்னும் சந்தோஷம். உங்க உடம்பு இப்போ சரி ஆயிடுச்சா? முன் போல் அறுசுவைக்கு வர ஆரம்பிச்சுட்டீங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எவ்வளவு சிம்பிள் டிசைன். ரம்ஜானுக்கு கோன் வைக்க ஆசை ஆனால் டிசைன் போட தெரியாதேனு யோசனை. ஆனால் இதை பார்க்கும் போது நாமும் போட முடியும்னு ஒரு நம்பிக்கை வர வச்சுருக்கீங்க. இந்த பக்கத்தை காப்பி பண்ணி மெயிலில் போட்டு வச்சுருக்கேன். ரொம்ப நன்றி வனி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிக்க நன்றி தனிஷா.... கண்டிப்பா போட்டு பார்த்து சரியா வந்துச்சானு சொல்லுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெஹந்தி டிசைன் வெகு அழகாக இருக்கின்றது. படங்களும் விளக்கமும் நல்ல தெளிவாக இருக்கின்றன. பாராட்டுக்கள்
அன்புடன்,
செபா.

செபா ஆன்ட்டி.... மிக்க நன்றி. நலம் தானே? :) நீங்க இமா அம்மா என்று சில தினம் முன் தான் தெரிந்தது. படம் மட்டுமே நான் அனுப்பியது... விளக்கம் நம்ம அட்மின் நண்பர்கள் போட்டிருக்காங்க. அவர்களுக்கு தான் பாராட்டுக்கள் சேர வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி :(
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டீர்களே. 'போட்டுப் பார்த்துப் பின்னூட்டம் கொடுங்கள்,' என்று சொல்லியிருக்கலாம். எனக்கும் கிறுக்கிப் பார்க்க ஒரு ஆள் கிடைத்த மாதிரி இருந்திருக்கும். :)
இமா

‍- இமா க்றிஸ்

இப்போ சொன்னா கூட மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க ஆன்டி. செபா ஆன்டி, இமா'கு கையில் நீங்க போட்டு விடுங்கோ..... ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிறகு அந்தப் படமும் இங்கு வெளியாகுமே, பரவாயில்லையா? :))

‍- இமா க்றிஸ்

ஓஹ்..... தாரலமா.... எப்படியோ போட்டா சரி. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து திருமதி. ஸ்வர்ணலக்ஷ்மி அவர்கள் போட்டு காண்பித்த மெஹந்தி டிசைனின் படம்

<img src="files/pictures/swarna-mehendi.jpg" alt="picture" />

அட்மின்

உடனே போட்டுவிடீர்கள். மிகவும் நன்றி.

வனிதா பார்த்திர்களா?? சிரிக்காதேங்கோ :) முதல் முறை ட்ரை பன்னிஇருக்கேன்.

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஸ்வர்ணா.... ரொம்ப அழகா இருக்கு. பார்த்ததும் சந்தோஷம் தாங்கல. :) முதல் முறை இத்தனை அழகா போட்டிருக்கீங்க.... இன்னும் 4 முறை போட்டு பார்த்தா என்னை மிஞ்சிடுவீங்க போலிருக்கே..... ;) முதன் முதல்ல போட்டு பார்த்து சொன்னது நீங்க தான்..... ரொம்ப சந்தோஷமா இருக்கு, மிக்க நன்றி ஸ்வர்ணா.

படத்தை வெளியிட்டு என்னை மகிழ்ச்சிகுள்ளாக்கிய அட்மினுக்கு எனது விஷேஷ நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஸ்வர்ணா.... ரொம்ப அழகா இருக்கு// மிகவும் நன்றி
//பார்த்ததும் சந்தோஷம் தாங்கல. :)// எனக்கும் தான்
//முதல் முறை இத்தனை அழகா போட்டிருக்கீங்க.... இன்னும் 4 முறை போட்டு பார்த்தா என்னை மிஞ்சிடுவீங்க போலிருக்கே..... ;) // இதெல்லாம் டூ ஊஊஊஉ மச்

நான் போட்டு பார்த்தவுடன் பரவால்லே அனுபலாம்ன்னு தோணினது ஆனா எனோட hus ரொம்ப கிண்டல் பண்ணிட்டார் :( கையில் கிழ இருக்குற டிசைன் ok ஆனா மேல ஆமை ஓடு மாதிரி அது என்னனு கேட்டு.

அதனால் தான் நம்ப அட்மின் கிட்ட கூட நல்லா இருந்த போடுங்கோ இல்லென அடுத்ததரவ போட்டு அனுப்பறேன் சொல்லி இருந்தேன் :)

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

இல்லை ஸ்வர்ணா.... உங்க கணவர் விளையாட்டா சொல்லி இருப்பார்.... :) உண்மையில் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. உங்களுக்கு டிசைன் எடுத்ததும் போட வரலன்னா முதல்ல ஒரு பேப்பரில் போட்டு பாருங்க, பழக்கம் வந்துடும், கையில் போடும்போது இன்னும் சுலபமா போட்டுடுவீங்க. இது ஒரு சின்ன டிப்ஸ் தான்.... ட்ரை பண்ணி பாருங்க, எவ்வளவு கஷ்டமான டிசைனும் ஜுஜுபி தான் உங்களுக்கு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் போட்ட மெஹந்தி டிசைனின் படம்

<img src="files/pictures/imma's-mehendi.jpg" alt="picture" />

மிக்க நன்றி பாப்பி & அட்மின். :)

சிரிக்காதிங்க வனி. இதற்கே நிறையக் கஷ்டப்பட்டு விட்டேன். :)

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி அட்மின். :)

இமா.... இத்தனை அழகா இந்த டிசைனை போட முடியும்'னு காட்டிட்டீங்க.... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு. மிக்க நன்றி இமா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்வர்ணா!!! நானும் கண்ணுல விளக்கெண்ணை விட்டு பார்த்தேன்... சில நேரம் ஒன்னும் தோனலை.. ஆனா சிலனேரம் ஆமை தான் :DDDDDD

இமா!!! சுப்பரா அதே டிசைன் எப்படி வரைந்தீங்க?? கொஞ்சம் ஆம்ப்ளிபை ஆயிடுச்சு போல... :DDDDDDDDDDDDD

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

//இத்தனை அழகா இந்த டிசைனை போட முடியும்'னு காட்டிட்டீங்க.... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.// எ.கோ.ச.இ?

இதற்கு இலா பரவாயில்லை. //சுப்பரா அதே டிசைன் எப்படி வரைந்தீங்க??// கேட்டு விட்டு //கொஞ்சம் ஆம்ப்ளிபை ஆயிடுச்சு போல...//என்று உண்மையையும் சேர்த்துச் சொல்லி இருக்கிறாங்க. நன்றி இலா, மிக்க நன்றி.

இது ஒரே நாளில் மூன்றாவது முயற்சி. :) முதலாவது கோன் அழகாய் மெல்லிய கோடாய் அழகாக வந்தது. கழுவியதும் காணாமல் போய் விட்டது. அடுத்த ப்ராண்ட் கோனை எடுத்து மெலிதாகத் தெரிந்த கோடுகளின் மேல் போட ஆரம்பித்தேன். இரண்டு சுருள் போட்டதும் கோன் அடைத்துக் கொண்டது. துளையைப் பெரிதாக்க 'ஆம்ப்ளிஃபை' ஆச்சு இலா. பரவாயில்லை, பூசணிக்காய்க்குப் பிரதி உபகாரமாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்தேன். :)

இமா

‍- இமா க்றிஸ்

இலா

உங்களுகவது சில நேரம் சில நேரம் ஒன்னும் தோனலை!!!! என் கணவர் அது அழயும் வரை எனை ஒரு வழி பண்ணிட்டார்:(((.

அந்த ஆமை கையாள காபி கொண்டுவா, அந்த ஆமை கையாள தோசை பண்ணி கொடுன்னு. மனுஷன் அது அஜிஞ்சது அப்பறம் தான் விட்டார்.:)))

இனி மெஹந்தி போடும் ஆசை போய்விட்டது :((

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஆமை கை!!! அஹ் அஹ ஹ ஹாஹ ஹ.... உங்க ஹஸ் ரொம்ப ஜாலி பேர்வழி போல... கவலை படாதீங்க சீக்கிரம் இம்ரூவ் ஆகிடுவிங்க...

இமா!!! அதனால என்ன... நான் முடிந்தவரை உண்மை சொல்வேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஐயோ ஸ்வர்ணா உங்க கணவரோட "ஆமை கை" விமர்சனம் ரொம்ப நேரம் சிரிக்க வெச்சது.

இமா இதிலிருந்தும் வனிதாவின் வஞ்ச புகழ்ச்சி அணியின் மேல் உள்ள பிரியம் புலப்பட்டிருக்குமே!!

Patience is the most beautiful prayer!!

இந்த செய்முறையை பார்த்து திருமதி. இமா அவர்கள் போட்ட மெஹந்தி டிசைனின் படங்கள்

<img src="files/pictures/imma's-mehendi-1.jpg" alt="picture" />

<img src="files/pictures/imma's-mehendi-2.jpg" alt="picture" />

அச்சச்சோ.... அறுசுவையில் திருட்டு போயிட்டுது'னு நினைச்சேன்.... நிஜமா தான்.... நானும் பலமுறை முயற்சித்தும் படம் வரவே இல்லை... என்னடா அதிரா இமா கையை தூக்கிட்டு போயிட்டாங்களோன்னு கேட்க நினைச்சா, படம் வந்து அதிரா தலை தப்பியது. ;) இமா சூப்பர். இன்ப அதிர்ச்சியா குடுத்துகிட்டே இருக்கீங்க..... மிக்க நன்றி. நீங்க இப்படி செய்துட்டே இருந்தா நான் இன்னொரு பூசணிக்காய் தான் தேட வேணும். ஹிஹிஹீ. ரொம்ப சந்தோஷமா இருக்கு இமா.

வெளியிட்ட அட்மின் நண்பர்கள் / அண்ணா..... ரொம்ப நன்றிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் சோகக் கதை கேளுங்கள்...:(
நேற்று இரவு எப்படியாவது நானும் கையிற்கு மெகந்தி போட்டிட வேணும் என கரைத்துவிட்டேன். இன்னும் போடவில்லை. இது சத்தியம். என்னிடம் கோன் இல்லை. கையில் பற்றன் வரைய கஸ்டமாக இருக்கு, கணவரைக் கேட்டேன் வரையமுடியுமோ ஏதாவது ஒன்று என, இப்ப கையில் போட்டுக்கொண்டு எப்படி வெளியில போகப்போறீங்கள் எனக் கேட்டுவிட்டார்...:(, இன்று இரவு எப்படியாவது போட்டுவிடுவேன்...

இமா கலக்கிறீங்கள்... எனக்கொரு சந்தேகம்... இப்ப கொஞ்ச நாட்களாக உங்க வீட்டில ஹோட்டல் சாப்பாடோ?:) சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு...:)

வனிதா... அதென்ன அது?:) அதிராவைப்பற்றி இங்கேயும் கதை அடிபடுகுதாமே...?:). கையோடு:) வருகிறேன் விரைவில்...:) நான் என் வெள்ளைக் கையில்தான்:) போடப்போகிறேன்... பின், எங்கள் அட்மின் அதை மொட்டை மாடியில் காயவைத்து கறுப்பாக்கி:) அனுப்பினால் அதுக்கு நான் பொறுப்பல்ல:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா, பாராட்டுக்கு //நன்றி !!! நன்றி !!! நன்றி !!! :) // கையை நீட்டின ரெண்டாவது ஆளுக்கும் நீங்கள் நன்றி சொல்ல வேணும். அவ 'ப்ளட் லாப்'ல கையை நீட்டின மாதிரி நடுங்கிக் கொண்டு இருந்தவ, கோடு எல்லாம் பார்த்தாலே தெரியும். :)

படங்களை வெளியிட்டமைக்காக அட்மின் குழுவினர்க்கு என் நன்றிகள்.

அதிராவுக்கு ஐடியா சொல்கிறேன்:..

அன்பு அதிரா,

ஒரு குட்டி 'பொலிதீன்' பையில நிரப்பிக் கட்டிப் போட்டு, சின்னதாகத் துளை போட்டுக் கொள்ளுங்கோ. பிறகு தேவைக்குப் பெருசாக்கலாம்.
//கையில் பற்றன்// ஒரு சிவப்பு பேனாவால் கீறிப்போட்டு, அதுக்கு மேலால போட்டீங்கள் எண்டால் லேசு, பிறகு உள்க்கோடு தெரியாது. ஆனால் நீங்களே போடுங்கோ, 'ஸ்டெத், ஸ்ரிஞ்' எல்லாம் மெஹெந்திக்குச் சரிவராது. மறதியில Rx பற்றன் போட்டுவிட்டால் இன்னும் மோசமாப் போயிரும்.

பிறகு 'குளிருது, குளிருது' எண்டு பற்றன் அழிய மட்டும் முழுக் கைச் சட்டையோட திரியுங்கோ, (கோட் போடுற ஆளுக்கு இது என்ன புதுசோ!!) டொக்டருக்கே தெரியாது.

நீங்கள் என்ட சோகக் கதையையும் கேளுங்கோ, ஒரு நாள் நான் வெக்கையாக் கிடக்குதெண்டு பள்ளியில 'ஜம்பரைக்' கழற்றிப் போட்டன். என் தோழி பார்த்துப் போட்டு 'மாக்கர் வைட் போர்டுக்குத் தான் வாங்கி வைக்கிறனாங்கள், இப்பிடி வீணாக்கினால் பிள்ளைகளை நாங்கள் எப்பிடி மறிக்கிறது' எண்டு கேட்டு விட்டா. ;(

அது சரி, நீங்கள் என்ன நாள் முழுக்க சமைச்சுக் கொண்டே நிக்கிறனீங்கள்!!?? இங்க ஹோட்டல் சாப்பாடு ஒருவரும் எடுக்கிறது இல்ல. நான் இந்தக் கிழமை எவ்வளவு சமைத்து அசத்தி இருக்கிறன் எண்டு எண்ணிப் பாருங்கோ தெரியும். பள்ளி இல்ல, மழை ஒரு பக்கம், பொழுது போகேல்ல. :(

ஓடித் திரிகிற வேலை எல்லாம் முடிச்சு, டீ.வீ, பீ.சீ எண்டு இருக்க முதல் எல்லாம் செட் பண்ணிக் கொண்டு இருந்தால் ஒரே நேரம் ரெண்டு வேலை முடிஞ்சு போயிரும் அதிரா. முக்கியமான விஷயம், மொப்பியரை முதலே அடைச்சு விட்டுருங்கோ. இல்லாட்டில் நிலம் எல்லாம் பூசி வைப்பார்.

நீங்கள் 'வண்டு' அனுப்பினால், காய வைத்து மெலிய வைக்கிறாங்கள் என்டுறீங்கள். இப்ப //வெள்ளைக் கை.... மொட்டை மாடியில் காயவைத்து கறுப்பாக்கி// !!!!???? எனக்கு ஒண்டு நல்லா விளங்குது, நீங்கள் வருங்காலத்தில நல்...லாக் கஷ்டப் படப் போறீங்கள். :)))))))))))

இமா

‍- இமா க்றிஸ்

இமா ஓடிவந்து உதவியமைக்கு மிக்க நன்றி.

நீங்கள் கூப்பிடுவீங்கள் இமா, பின்பு நம்பிக் கிட்ட வந்தால் கலைக்கிறீங்கள்?:). உங்களைப்புரிஞ்சுகொள்ள முடியேல்லை இமா!!!! நானும் இழிச்சவாயாக இருக்கிறதாலேயோ என்னவோ தெரியேல்லை:), கூப்பிட்டவுடன் ஓடிவாறன், அடிச்சுக்கலைச்சால் ஓடிவிடுறன் இதுவே தொழிலாக்கிடக்கு.:). சரி சரி ஊர்வம்பு எனக்கெதுக்கு:).

எனக்கு கேக் ஐசிங் போடத் தெரியும்(சுமாராகத்தான்) அந்த அறிவைப்பயன்படுத்தியே... நீங்கள் சொன்னதுபோலவே, ரிசு பாக்கில் சிறு துவாரம் இட்டு, மெகந்தி போட்டுவிட்டேன். பற்றன் ஒன்றும் கீறவில்லை, நேரடியாகவே களம் இறங்கினேன், பறவாயில்லை, பார்க்கக்கூடியதாக இருக்கு. கழுவியபின் படம் எடுக்காமல் இப்பவே எடுத்திட்டன் அனுப்பப்போறேன்... அட்மின் & குழுவினருக்கு எங்கட கைகளைப் பார்த்தே அலுக்கப்போகுது:) என்ன செய்வது:).

சின்ன ஸ்ரிஞ் நல்ல ஐடியாவாக இருக்குமென்றுதான் நானும் நினைத்தேன், விட்டுவிட்டேன்:).

என்னுடன் வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண் சொன்னா, தனக்கு மெகந்தி போட்டவர்களைப் பார்க்க ஆசை, நல்ல அழகாக இருக்குமென்று.

///எனக்கு ஒண்டு நல்லா விளங்குது, நீங்கள் வருங்காலத்தில நல்...லாக் கஷ்டப் படப் போறீங்கள். :)))))))))))/// நான் கஸ்டப்படமாட்டேன் இமா:), ஏன் தெரியுமோ? துன்பம் வரும்போது சிரி.... எனும் வாக்கியம் எப்பவும் என் மனதில் பதிந்திருக்கு. முன்பு சொன்ன கதைதான், ஸ்கூல் பஸ்ஸில் ஒரு தடவை மிக்ஸ்ட் ஆக்கிப்போட்டினம்(boys & girls), அப்போ நெரிசல் சொல்ல முடியாது, ஒருவர் சப்பாத்துக்காலால என் சப்பாத்தை உளக்க உளக்க எனக்கு(வேணுமெண்டில்லைத்தான்), அழுகை அழுகையாக வரத் தொடங்கிவிட்டது, கொஞ்ச நேரம்தான் பிறகு சிரிக்கத் தொடங்கினன்.. சிரித்தபடியே இருந்தன், நோ தெரியவில்லை:):).

எனக்காக, நீண்ட பதில் விளக்கமாகப் போட்டமைக்கு நன்றி இமா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மெஹந்தி

இமா மெஹந்தி டிசைன் நன்றாக இருக்கிறது. அறுசுவையில் மெஹந்தி போட்டி நடக்கிறதோ!!! வனிதாவின் புண்ணியத்தில்:)))

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

இந்த செய்முறையை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் போட்ட மெஹந்தி டிசைனின் படம்

<img src="files/pictures/mehendii-athira.jpg" alt="picture" />

அதிராக்கா,
மெய்யாலுமே மிக எளிய முறையில் மிக அழகா வரைந்திருக்கீங்கள்! பாராட்டுக்கள்! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஆகா வந்திடிச்சி..:)
அப்பாடா நாள் பட்டாலும் பழுதாகவில்லை:)... மிக்க நன்றி, கையோடு கையை இணைத்தமைக்கு:).வாழ்க்கையில் நான் போட்ட முதல் மெகந்தி.....

ஜீனோ!!! நீங்களா வாழ்த்துச் சொல்வது.... மிக்க நன்றி. பறவாயில்லையே மெகந்தி பற்றியும் தெரிந்துவைத்திருக்கிறீங்கள்... டோறாக்குப் போட்டால் இன்னும் அழகாக இருக்கும்:)..., இருந்தாலும் கோப்பி ஊற்றுப்பட்ட ஜீனோதான் கொள்ளை அழகு:):) திருஷ்டி படப்போகுது:) பெரிய பூசணிக்காயோடு அங்கு வருகிறேன்:)(இமா ஆன்டி வீட்டுக்கு:)).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா அன்றே நீங்க சொன்னதை பார்த்தேன்.... என்னடா இன்னும் வரலன்னு கேட்க நினைச்சேன்.... வந்துடுச்சு. நாகையில் காயபோட்டு மறந்துட்டாங்களோ மொட்டை மாடியிலேயே என்று நினைச்சேன். ;)

உண்மையில் முதன் முதலாக போட்டது போல் தெரியல.... அத்தனை அழகா ஹென்னா போட்டு இருக்கீங்க. நீங்க இன்னும் 2 முறை போட்டாலே எந்த டிசைனும் சுலபமா போட்டுடுவீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு பார்க்க. எனக்காக போட்டு பழக்கமே இல்லாத ஒருத்தர் போட்டு படம் எடுத்து அனுப்பி இருக்கீங்கன்னு நினைக்கும்போது இன்னும் சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி அதிரா. :)

வெளியிட்டு சந்தோஷபடுத்திய அட்மினுக்கு நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி ஸ்வர்ணா.

அதிரா, முதல் முயற்சி என்கிறீங்கள், வடிவாகப் போட்டிருக்கிறீங்கள். நிரம்பின மாதிரி இல்லாமல் இருக்கிறது பார்க்க நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
//பூசணிக்காயோடு அங்கு வருகிறேன்:)(இமா ஆன்டி வீட்டுக்கு// ???????? :))))))))))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எனக்கு வெட்கமாக இருக்கு:):):)
நான் மெகந்திபோட்டு அனுப்பிவிட்டேன், ஆனால் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் சரியான வெட்கமாக இருந்தது:):), இப்போ வனிதா, இமா அதிலும் ஜீனோவும்:) சேர்ந்து பாராட்ட சரியான சந்தோஷமாக:) இருக்கு.மிக்க நன்றி. (இமா... பதில் அங்குதான் வரும்:):)).

அப்போ சுவர்ணா, நீங்க சொன்னபடி, ஹைஷ் அண்ணனைக்கூப்பிடுவோம் .... போட்டிக்கு நடுவராக:):)(நீங்க அழிக்க முந்தி நான் பார்த்திட்டனே:):):))

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. சுஸ்ரீ அவர்கள் போட்ட மெஹந்தி டிசைனின் படம்

<img src="files/pictures/susri-mehendii.jpg" alt="picture" />

திருமதி சுஸ்ரீ உங்க மெஹந்தி டிஸைன் really superb.

சுஸ்ரீ,

மிக மிக மிக அழகாக இருக்கிறது. :) வனிதா பிஸி ஆகி விட்டால்.. 'பாக்அப்' ஆக உங்களை புக் பண்ணலாம் என்று நினைக்கிறேன். ஒப்புக் கொள்வீர்களா? :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்