சில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகள்

தலை முடிக்கு ஹென்னா போடுவதாக இருந்தால், தலைக்கு குளித்த அடுத்த நாளோ அல்லது தலைக்கு குளிக்க வேண்டிய நாளுக்கு முன்னாடி நாளோ தலையில் ஹென்னா பேக்கை போட்டு ஊறவைத்து அலசி நன்றாகக் காய வைத்தப் பிறகு தலையில் எண்ணெய் தடவி விடுங்கள். மறுநாள் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். இப்படி ஹென்னா பேக் போட்ட முடியில் எண்ணெய் தடவி ஒரு நாள் இருப்பதால் ஹென்னா பேக் கலர் நன்றாக பிடித்துக் கொள்ளும். மேலும் நீண்ட நாட்களுக்கு நிறமும் மங்காது. எனவே, ஹென்னா பேக் போடுபவர்கள் ஹென்னாவை அலசும்பொது ஷாம்பூ உபயோக்கிக்காமல் வெறும் தண்ணீரைக் கொண்டு மட்டும் அலசினால் நல்லது. வேலைக்கு செல்பவர்கள் சனிக்கிழமை ஹென்னா பேக் போட்டால், அன்று அலசி, காய வைத்து எண்ணெய் தடவிக் கொண்டால் ஞாயிறு அன்று ஷாம்பூ போட்டு அலசலாம். ஆனால் அந்த வாரம் மட்டும் மைல்டான ஷாம்பூ கொண்டு அலசினால்( ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்கள் போன்று வீரியமுள்ளவற்றை தவிருங்கள்) ஹென்னா கண்டிஷனிங் செய்த கூந்தல் அதன் பளப்பளப்பை இழக்காது.

அந்தரங்க இடங்களுக்கு ரேசர் மட்டும் உபயோகிப்பவர்கள் அதனை குளிக்கும் முன்பு உபயோகித்தால் நல்லது. ஆண்கள் முகத்திற்கு ரேசர் உபயோகிப்பது போல் ஒரே டைரக்ஷனில் உபயோகிக்காமல், முதலில் ஷேவிங் ஜெல் தடவி, மேலிருந்து கீழாக ரேசரை உபயோகித்து ஷேவ் செய்து, மீண்டும் ஒரு முறை ஷேவிங் ஜெல் தடவி கீழிருந்து மேலாக ஹேர் ரிமூவ் செய்தால் மென்மையாகவும், வழ வழப்பாகவும் இருக்கும். குளித்தப் பின்பு லேசாக டால்கம் பௌடர் உபயோகிக்கலாம். எரிச்சலை தாங்க முடிபவர்கள் ஆப்டர் ஷேவ் உபயோகிக்கலாம். எபிலேட்டர் கொண்டு அந்தரங்க இடங்களில் ஹேர் ரிமூவ் செய்யலாம். ஆனால் வலி மிகவும் அதிகமாக இருக்கும். வேக்சிங்கும் அப்படியே. ஆனால் பலனோ மிகவும் நன்றாக இருக்கும். வளர்ச்சியும் அதிகம் இருக்காது. இப்படி அந்தரங்க இடங்களுக்கும் எபிலேட்டர் உபயோகப்படுத்த நினைப்பவர்கள், ஸ்மூத்தாக ஹேரை ரிமூவ் செய்ய எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள எபிலேட்டரை தேர்ந்தெடுங்கள். Braun Silk Epil போன்ற பிராண்டுகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அந்தரங்க இடங்களில் ஹேர் ரிமூவிங் என்பது பல வித தொற்றுவியாதிகளைத் தவிர்க்கும். தோல் மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இதையே. ஆனால் அதற்கென்று உபயோகப்படுத்தும் பொருட்கள் மிகவும் சுத்தமாக இருப்பதும் அவசியம். யூஸ் அட் த்ரோ ரேசராக இல்லாமல் இருந்தால் சுடு தண்ணீரில் ஸ்டெரிலைஸ் செய்வது அவசியம். எபிலேட்டர் ஹெட்டை தனியாக கழற்றி சோப் வாட்டரில் கழுவி, அதனை ஆப்டர் ஷேவ் லோஷன் கொண்டு துடைத்து வைக்கலாம். இப்படி செய்வதால் கிருமி தொற்றுதலை தவிர்க்கலாம். பிரசவத்திற்கு செல்பவர்கள் ( இந்திய மருத்துவமனைகள் பலவற்றில் யூஸ் அண்ட் த்ரோ ரேசர் உபயோகிப்பதில்லை) தாங்களே முன்கூட்டியே அவ்வாறு ஹேர் ரிமூவ் செய்து விட்டு சென்றால் அங்கே எல்லோருக்கும் உபயோகப்படுத்தும் ரேசரை நமக்கும் உபயோகப்படுத்துவதை தவிர்க்கலாம்.

இரவு உறங்கும் முன்பு பற்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். பற்களை சுத்தம் செய்ய பேஸ்ட், பிரஷ் பயன் படுத்துவதோடு, பற்களின் இடையே உள்ள உணவுத் துகள்களை நீக்க Floss உபயோகிப்பது மிகவும் அவசியம். Johnson & Johnsons Reach, Colgate போன்றவற்றில் Floss கிடைக்கிறது. நூல் போன்ற இதை தேவையான அளவு இழுத்து கட் செய்துக் கொண்டு ( சுமார் 20 செமீ அளவு) அதனைக் கொண்டு பற்களில் இடையே உள்ள உணவுகளை நீக்கலாம். நூலை ரம்பம் (Saw) கொண்டு அறுப்பதைப் போன்று உபயோகிக்க வேண்டும் என்று பேக்கிங்கில் போட்டிருப்பார்கள். ஆனால் பல் மருத்துவர்கள் மேலும் கீழுமாக உபயோகித்தால் சிறந்த பலனைத் தரும் என்று சொல்கிறார்கள். சில பிராண்டுகளில் இந்த நூல் சிறிது தடிமனாக இருக்கும். பல் இடைவெளி மிகவும் சின்னதாக இருக்கும் பட்சத்தில் பிரிந்தாற்போன்றும் ஆகிவிடும். ஆனால் Colgatel Total Clean Floss இப்படி சின்னதாக பல் இடைவெளி ( நெருக்கமான பல் வரிசை) கொண்டவர்களுக்கு உபயோகிக்க எளிதாக இருக்கும். உறுதியாக நூல் பிய்ந்துவிடாமலும் இருக்கும். குழந்தைக்காக பிளானிங் செய்பவர்கள், அதற்கு முன்பு தங்களது பற்களை டெண்டிஸ்டுகளிடம் சென்று செக்கப் செய்து கொள்வதும், பல் சொத்தை, ரூட் கெனால், பல் எடுக்கும் விஷயங்களை முன் கூட்டியே செய்து விடுதல் நலம்.

அதிகமான சூடுள்ள நீரைக் கொண்டு முகம் கழுவக்கூடாது. இதனால கண்ணில் கருவளையம் உண்டாக நேரிடும். மிதமான அல்லது குளிர்ச்சியான நீரையே உபயோகிக்க வேண்டும். குளிர் காலங்களில் கூட உடம்புக்கு மட்டும் சுடு நீரை உபயோகித்து முகத்துக்கு மிதமான சூட்டினை உபயோகித்தால் முகம் என்றும் இளமையாகவும், கருவளையம் இன்றியும் இருக்கும். அதே போல் தினமும் 5 பாதாம்பருப்புகள் வீதம் சாப்பிட்டு வருவதும் சருமத்திற்கு அழகைக் கொடுக்கும். ஒரே நேரத்தில் கண்ணிற்கும், உதட்டிற்கும் அதிகமான மேக்கப்பினை உபயோகித்தால் நன்றாக இருக்காது. கண்ணிற்கு அதிக மேக்கப் இடும்போது உதட்டிற்கு லைட்டாக லிப்ஸ்டிக்கும், உதட்டில் ரிச்சாக மேக்கப் போடும்போது கண்ணிற்கு குறைவான மேக்கப்பும் போடுவது அழகாக, ஹைலைட் செய்தது போல் இருக்கும். கைகளை அடிக்கடி கழுவும் பழக்கமுள்ளவர்கள் தங்களது கைப்பையில் சின்னதான ட்யூபில் கிடைக்கும் ஆலிவ் பட்டர், பேபி லோஷன்களை எப்போதும் வைத்திருந்தால் ஒவ்வொரு முறை கை கழுவிய பிறகும் போட்டுக் கொள்ளலாம். இதனால் கைகள் எப்போதும் சாப்டாக இருக்கும். மேலும் பாடி லோஷன், கோக்கோ பட்டர் போன்றவை குளித்தவுடனேயே உபயோகித்தால் சருமத்தில் எளிதாக ஊடுருவி நல்ல பலனைத் தரும்.

அறுசுவை உறுப்பினர்களுக்கு ஒரு ஹாய். இந்தப் பதிவு தவறுதலாக இரண்டு முறை பதிவாகி விட்டபடியால் ,இதில் இன்னும் கொஞ்சம் குறிப்புகளை எழுத வேண்டும் என்று எழுதி வைத்து பல வாரங்களாகி விட்டது. இன்றுதான் பதிவு செய்ய நேரம் கிடைத்தது. இப்படி அவங்கவங்க வீட்டில் செய்யும் சமையல் ட்ரிக்ஸ், டிப்ஸை கொஞ்சம் இங்கே சொன்னால் எல்லோருக்கும் பயன்படும். இதோட என்னோட இந்த வார டிப்ஸ்.

சிக்கன், வெளிநாடுகளில் கிடைக்கும் மட்டன் ( இதை எத்தனை முறை கழுவினாலும் நம்ம ஊர் மட்டன் போல் இல்லை என்று சொல்பவர்கள் இப்படி கழுவினால் அதிக வித்தியாசமிருக்காது), இறால் போன்றவற்றை க்ளீன் செய்து தண்ணீரில் அலசிய பிறகு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது வினிகர், மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு பிறகு கடைசியாக ஒரு முறை தண்ணீர் கொண்டு கழுவினால் எந்த வித ஸ்மெல்லும் இன்றி நன்றாக இருக்கும். மேலும் வினிகரால் கழுவும்போது நல்ல வெண்மை நிறமாகவும், சாப்டாகவும் ஆகிவிடும். சைனீஸ், தாய் வகை உணவுகள் சமைக்கும்போது இப்படி வினிகரைக் கொண்டு கழுவி உபயோகித்தால் (அந்த வகை சமையல்களுக்கு அதிகம் மசாலா பொருட்கள் சேர்க்காதிருப்பதால்) எந்த வித ஸ்மெல்லும் இன்றி இருக்கும்.

எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக கிடைக்கும் சமயங்களில், நிறைய பழங்கள் வாங்கி அதனை சாறு எடுத்து ஐஸ் ட்ரேக்களில் ஊற்றி ஐசாக மாற்றிவிடுங்கள். இந்த ஐஸ் க்யூப்புக்களை பிறகு ஒரு ப்ரீசர் பேக்கில் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரு எலுமிச்சைப் பழம் = ஒரு பெரிய க்யூப் என்ற அளவில் உபயோகிக்கலாம். ட்ரே அளவு சின்னதாக இருந்தால் பாதி அளவு என்று கொள்ளலாம். அவசரத்துக்கு இந்த எலுமிச்சை ஐஸ் க்யூப், சுகர், தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து ஜூசரில் அடித்து ஜூஸ் தயாரிக்கலாம். எலுமிச்சை சாதம், பிரியாணி என்று அனைத்து சமையல்களுக்கும் வருடம் முழுக்க உபயோகிக்கலாம். கடைகளில் இன்ஸ்டண்டாக விற்கும் லெமன் ஜூஸ் எக்ஸ்ட்ராக்டைக் காட்டிலும் இது மிகவும் பிரெஷ்ஷாக இருக்கும். மேலும், காயாக எலுமிச்சைப் பழம் வாங்கி அவசரத்துக்கு உபயோகிக்க வேண்டுமென்றால், பழத்தினை லேசாக தீயில் காண்பித்து சூடாக்கிவிட்டு, பிழிந்தால் பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

வாழைப்பூ, சில வகை செள செள போன்ற கைகளில் கறை படிய வைக்கும் காய்கறிகளை நறுக்கும்போது கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இதனால் கறை படுவதை தடுக்கலாம். சிறிய வெங்காயத்தின் தோலை, எளிதாகக் கண்ணீர் வராமல் உரிக்க சின்ன வெங்காயத்தில், மேல் பகுதியையும், அடிப்பகுதியையும் வெட்டி விட்டு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு எடுத்தால் மிகவும் எளிதாக உரிக்கலாம்.

குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள். உணவில் அடிக்கடி முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, முள்ளங்கி, அத்திப்பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தில், கருப்பைக்கும், கருமுட்டைக்கும் நல்லது என்று சொல்லப்பட்ட உணவுப் பொருட்கள். பெண்களைவிட ஆண்களுக்கு சிறுநீரகத்தில் கல் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் உணவில் அதிக அளவு தக்காளி, காலிபிளவர் போன்ற காய்கறிகளை சேர்ப்பதை தவிர்க்கலாம். இந்தப் பிரச்சணைக்கு வாழைத்தண்டு மிகவும் நல்லது.

காய்கறிகளை சமைக்கும்போது தனியாக வேக வைத்து பிறகு பொரியலுக்கு தாளிக்காமல், கூடுமானவரை தாளித்தப் பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு காய்கறி சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து மூடி வைத்து சமைப்பதால் காய்கறியின் சத்தை வீணாக்கி விடாமல் இருக்கலாம். எல்லா வகை காய்களுக்குமே இந்த முறை பொருந்தும். உசிலி போன்ற அயிட்டங்கள் செய்யும்போது பலர் காய்கறிகளை தனியாக வேக வைத்து சேர்ப்பார்கள். அதற்கும் இந்த முறையையே பின்பற்றலாம்.

வீட்டிலேயே பனீர் செய்யும்போது, பால் கொதிக்கும்போது சிறிதளவு வினிகர் சேர்த்தால் பனீர் நல்ல ஷேப்பாக வரும். உதிர்ந்து போகாது. ஆனால் அதிக அளவில் சேர்த்தால் கடினமாகிவிடும். எனவே ஒரு லிட்டருக்கு ஒரு ஸ்பூன் வினிகர் என்ற அளவில் சேர்க்கலாம்.

குளிர் நாடுகளில் வசிப்பவர்கள், சீசனுக்கு மட்டுமே புதினா கிடைக்கும் இடங்களில் இருப்பவர்கள், அடிக்கடி சாட் அயிட்டம் செய்பவர்கள் புதினாவை நைசாக அரைக்காமல், ஒன்றும் பாதியுமா அரைத்து சிறிய ப்ரீசர் பேக்குகளில் போட்டு வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்திருந்து உபயோகிக்கலாம். தேவையானபோது சிறிதளவு வெட்டி எடுத்து சமையலில் சேர்க்கலாம். சுவை மாறாமல் இருக்கும்.கொத்தமல்லி அத்தனை பிரெஷ்ஷாக இருக்காது. வேண்டுமானால் புதினாவையும், கொத்தமல்லியையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாட்டுக்கு மட்டுமே உபயோகிக்கிறீர்கள் என்றால் சிறிது புளித் தண்ணீர் சேர்த்தும் அரைத்து வைத்துக் கொள்ளலாம். மிண்ட் பேஸ்ட், மிண்ட் பவுடரை விட நன்றாக இருக்கும்.

தேங்காயை ப்ரீசரில் ஸ்டோர் செய்யும்போது, தேங்காயைப் பல்லாக வெட்டி ஸ்டோர் செய்வதைக் காட்டிலும், துருவி கொண்டு துருவியோ அல்லது மிக்சியில் துருவியோ வைத்தால் எப்பொதும் பிரெஷ்ஷாக இருக்கும். தேங்காய்ப் பல்லாக ப்ரீசரில் வைத்து உபயோகப்படுத்தும்போது அதன் வெளிப்புறம் சீக்கிரமே ஒரு பிசின் போன்று வழ வழப்பாக Sticky யாகிவிடும். துருவி வைக்கும்போது அப்படி ஆகாது. மேலும் பொரியல், சட்னி என்று உடனடியாக உபயோகப்படுத்தவும் எளிதாக இருக்கும். எப்போதும் வெண்மை நிறமாகவும் இருக்கும்.

பச்சை மிளகாயை வாங்கியதுமே அதன் காம்புகளை நீக்கிவிட்டு ஒரு ப்ரீசர் பேக்கில் போட்டு ப்ரீசரில் வைத்துவிட்டால் எத்தனை நாட்களானாலும் பிரெஷ்ஷாகவே இருக்கும். கழுவியவுடனேயே அதன் ஐஸ்தன்மையும் போய் மிக்சியில் அரைக்க எளிதாகவும் இருக்கும். டீப்ராஸ்ட் செய்ய தேவையில்லை. இதே போல் சீசன் சமயங்களில் கிடைக்கும் மாம்பழம், மாங்காய் போன்றவற்றையும் ப்ரீசரில் ஸ்டோர் செய்துக் கொள்ளலாம். சாப்பிடும்போது நிச்சயம் வித்தியாசம் தெரியாது.

சாலட் செய்யும்போது, காய்கறியின் தோலை நீக்குவதாக இருந்தால் முதலில் காய்கறியை சுடு நீரில் ஒரு முறை நன்றாக கழுவிவிட்டுப் பிறகு தோலை நீக்கி, மீண்டும் ஒரு முறை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு துருவினால் மூளையைத் தாக்கும் புழுக்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். கழுவாமல் தோலை நீக்கினால் தோலின் மீது படிந்திருக்கும் கிருமிகள் காய்கறியினுள் செல்ல வாய்ப்பிருக்கிறது. சாலட் என்பதால் நாம் சமைக்காமல் பச்சையாக சேர்க்கையில் இவை கொல்லப்படுவதில்லை. இது முக்கியமாக மண்ணுக்கு அடியில் விளையும் காரட், பீட்ரூட் காய்கறிகளுக்கு செய்ய வேண்டும்.

இயற்கையான அழகுடன் முகம் எப்போதும் பளப்பளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவில் பாதாம், பப்பாளி சேர்த்துக் கொள்ளலாம். மேலும் குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலே பருத்தொல்லை அதிகம் இருக்காது. அசைவம் சாப்பிடுபவர்கள் மீனை அதிகம் சேர்த்துக் கொண்டால் எப்போதும் தெளிவான சருமத்துடன் இருக்கலாம்.

செரிமான சக்தி குறைவாக உள்ளவர்கள் ஒவ்வொரு உணவிற்கு பின்பும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் உணவு எளிதாக ஜீரணமாகி, செரிமான கோளாறுகள் நீங்கிவிடும். பிளாக் டீயில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது வயிற்றுப் போக்கையும், அதனால் ஏற்படும் வயிற்று வலியையும் உடனே சரி செய்து விடும். மேலும் டீயை இப்படி பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மிகவும் நல்லது. அதே சமயம் வயிற்றில் புண், அல்சர் தொந்தரவு உள்ளவர்கள் காபி, டீயை தவிர்ப்பது அவசியம். மணத்தக்காளி கீரை, மோர், பாசிப்பருப்பு முதலியவை அவர்களுக்கு ஏற்ற உணவு பொருட்கள். விட்டுப் போனவற்றை அடுத்த வாரம் பதிவு செய்கிறேன்.

தேவா எப்படி இருக்கீங்க? உங்க பையன் எப்படி இருக்கார்? தேவா நீங்க சொன்னதில ஒன்னு மட்டும் நல்லா புரியுது, ஃப்ரிஜ்னு ஒன்னு வாங்கினா, நல்லா பெரிய ஃப்ரீசர் வெச்சதா வாங்கணும்:)

ரொம்ப பயனுள்ள டிப்ஸ்,அதுவும் எலுமிச்சை பழச்சாறை ஐஸ் க்யூபில் போட்டு வைக்கறது,தேங்காய்,போன்ற‌ டிப்ஸ் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். உங்க டிப்ஸ் எங்ககூட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி.

lathakumar
ஹாய் தேவா மேடம்,
குறிப்பினை வழங்கியதற்கு மிக்க நன்றி.நானும் தேங்காயை துறுவிதான் fridge வைக்கிறேன் ஆணால் பூ மஞ்சள் நிறமாக மாறுவிடுகிறது.ப்ரிசரில் வைத்தால் மாறாத மேடம்

lathakumar

தேவா, நீங்கள் சொல்லி இருக்கும் கைப்பையில் குட்டி ஹான்ட் க்ரீம் ட்யூப், ஃப்ரீசரில் லெமன் க்யூப்ஸ், மிளகாய் இவை நான் எப்பொழுதும் வைத்திருப்பேன். பல வருடப் பழக்கம். உபயோகமாக இருக்கிறது இல்லையா?

எனக்குத் தெரியாத சில தகவல்களும் கொடுத்திருக்கிறீர்கள். பிடித்திருக்கிறது. நன்றி. உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். (இது இமாவின் புக் மார்க் ;D )

இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் தேவா உங்க குறிப்புகள் ரொம்ப நல்லா இருந்தது.நிறைய விஷயங்கள் தெரிஞ்சு கிட்டேன்,
1 சின்ன உதவி வேணும் தேவா,எனக்கு இந்தியா போனால் முகம் ஆயிலியாகவும்,பருதொல்லையும் இருக்கும்,பொடுகும் அதிகம் வரும்,எண்ணெய் அதிகம் தேய்க்காமல் இருந்தால் முடி உடைந்து போகும் நான் இன்னும் 2 வாரங்களில் இந்தியா போக உள்ளேன்,மேலும் பொடுகு முகத்திற்கு வருவதால் தான் எனக்கு பரு வருகிறது,பொடுகு முகத்திற்கு வராமல் தடுக்க ஹெல்ப் பண்ணுங்க,முகத்தையும்,தலையையும் பாதுகாக்க சீக்கிரம் வழி சொல்ல முடியுமா தேவா.

ஹாய் தேவா,
நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌கு உங்க‌ளை/உங்க‌ ப‌திவை பார்ப்ப‌தில் சந்தோஷ‌மா இருக்கு. இப்போ உங்க உடம்பு பரவாயில்லையா? உங்க‌ ம‌க‌ன் நலமா இருக்கிறாரா? டேக் கேர்.

எப்போதும்போல நிறைய‌ ந‌ல்ல பல த‌க‌வ‌ல்க‌ள் சொல்லி இருக்கிங்க‌ தேவா. சில‌து நான் ஃபாலோ ப‌ண்ணுவ‌து, ப‌ல‌து புதுசா இருக்கு. நிச்ச‌ய‌ம் உப‌யோக‌மாகும் தேவா. நன்றி!

ப.மிள‌காய், பொதினா, கொத்த‌ம‌ல்லி எல்லாமே நான் ஃபிரிஸ் ப‌ண்ணுவேன். சமயத்துக்கு ரொம்ப‌வே ஹெல்ப்பா இருக்கும். எலுமிச்சை ஜூஸ் ஐஸ் ட்ரேயில் வைப்ப‌து இதுவரை செய்த‌தில்லை. ஆனால் அந்த‌‌ ஐடியாவில் வேற‌ செய்திருக்கேன்! :) அப்புற‌ம் சிக்க‌ன்/மீன் க‌ழுவும் டிப்ஸ் ந‌ல்லாயிருக்கு. நான் உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி போடுவேன். இனி வினிக‌ரையும் சேர்த்துக்கிறேன். அப்புறம் இந்த கறிவேப்பிலையை காப்பாத்தறதுதான் ரொம்ப பெரிய பாடா இருக்கு எனக்கு. எனி டிப் ஃபார் தட்?!

தேவா,
நீங்க சொன்ன மாதிரி தோழிகள் அனைவரும் அவரவர் ஃபாலோ பண்ணும் டிப்ஸ்/ட்ரிக்ஸ் இங்கே ஷேர் பண்ணிக்கொண்டால் எல்லாருக்குமே உபயோகமா இருக்கும். (என்னோடது, அடுத்த பதிவில்... :‍‍‍))

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹலோ பிர‌ண்ட்ஸ்,
இதோ எனக்கு தெரிஞ்சதை, நான் ஃபாலோ செய்வதை ஷேர் ப‌ண்ணிக்கிறேன்.

நான் எப்ப‌வும் இந்தியா சென்று வந்தால், அம்மா & மாமியார் கொடுக்கும் வீட்டு தயாரிப்பு சாம்பார் பொடி, ப‌ருப்பு பொடி, இட்லி பொடி என்று நிறைய‌ கொண்டு வ‌ருவேன். எல்லாவ‌ற்றையும் த‌னி த‌னி சிப்லாக் பேக்ஸ்சில் போட்டு, அப்புற‌ம் அதை ஃப்ரிஸ‌ர் சிப்லாக் க‌வ‌ரில் போட்டு, காற்றுப்போகாத‌ மாதிரி ஃபிரிஸ‌ரில் வைத்துவிடுவேன். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்க ஃப்ரஷா ந‌ல்லாவே இருக்கும்.
அப்புறம் தேங்காய்பால், நான் இங்கு உப‌யோகிப்பது டின் பால்தான். சில‌ ச‌ம‌ய‌ம், பாதி எடுத்துக்கொண்டு மீதி இருக்கும் பாலை, ஐஸ் ட்ரேயில் போட்டு ஃபிரிஸ் ப‌ண்ணி, ஒரு சின்ன‌ பேக்கில் போட்டு வைத்துக்கொண்டால், குருமா செய்யும்போது, ஒன்னு, இரண்டு க்யூப்ஸ் எடுத்துப்போட்டால் போதும், ரொம்ப‌ ஈஸி. பொருளும் வேஸ்ட் ஆகாது.
மிக்ஸி வைத்து தேங்காயை அரைக்கும் வேலை, நேர‌மும் மிச்ச‌ம்.
தேவா, நீங்க‌ சொன்ன‌துப்போலவே இன்னுமொன்று: எலுமிச்சை பழத்தை க‌ட் செய்வ‌த‌ற்குமுன், மைக்ரோ வேவ் அவ‌னில், ஒரு 15 செக‌ண்ட்ஸ் வைத்து எடுத்து பிழிந்தால் நிறைய‌ ஜூஸ் கிடைக்கும். ஓக்கே, மற்றவை, பிறகு நியாப‌க‌ம் வ‌ரும்போது. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ சொன்னது போல் லெமனை மைக்ரோவேவில் வைத்து எடுத்து பிறகு கட் செய்து ஒரு ஃபோர்க்கால் பழத்தை சுரண்டினாலே நிறைய ஜூஸ் வந்துவிடும்.

பித்தளை பாத்திரங்கள் பள பளக்க சிறிதளவு தக்காளி கெட்சப்பை ஸ்பாஞ்சினால் தேய்த்து விட்டு பிறகு வழக்கம்போல் நீங்கள் பயன்படுத்தும் சோப் கொண்டு தேய்த்து கழுவவும்.

டிப்ஸ்
கறிவேப்பிலையை கண்ணாடி பாலிதின் கவரில் வைத்து நன்றாக மடித்து வைத்தால் ஒரு வாரம் வரைக்கும் பிரஷ்ஷாக இருக்கும்.
சிலசமயம் தேங்காய் உடைக்கும் பேது தேடு தனியாக வந்துவிடும் அதை துருவலில் துருவுவது கடினம் அதை கேரட் துருவலிலில் துருவினால் எளிதாக இருக்கும்.அதன் பின்புறத்தைய்ம்(ப்ர்வுன் நிறட்தில் இருக்கும் பாகம்)கேரட் துருவலில் துருவினால் சீக்கிரம் எளிதாக நீக்கிவிடமுடியும்.

ஹாய் தேவா உங்க குறிப்புகள் ரொம்ப நல்லா இருந்தது.நிறைய விஷயங்கள் தெரிஞ்சு கிட்டேன்,
1 சின்ன உதவி வேணும் தேவா,எனக்கு இந்தியா போனால் முகம் ஆயிலியாகவும்,பருதொல்லையும் இருக்கும்,பொடுகும் அதிகம் வரும்,எண்ணெய் அதிகம் தேய்க்காமல் இருந்தால் முடி உடைந்து போகும் நான் இன்னும் 2 வாரங்களில் இந்தியா போக உள்ளேன்,மேலும் பொடுகு முகத்திற்கு வருவதால் தான் எனக்கு பரு வருகிறது,பொடுகு முகத்திற்கு வராமல் தடுக்க ஹெல்ப் பண்ணுங்க,முகத்தையும்,தலையையும் பாதுகாக்க சீக்கிரம் வழி சொல்ல முடியுமா தேவா.
இந்த வருடம் வெயில் இந்தியாவில் கொளுத்துகிறதாம்,ஸ்கின்னை பாதுகாக்க சம்மர் டிப்ஸ்ஸும் குடுக்க முடியுமா பிளீஸ்

மேலும் சில பதிவுகள்