அரைத்து வைத்த பாயசம்

தேதி: August 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பச்சரிசி - 100 கிராம்
அச்சு வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி


 

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். அச்சு வெல்லத்தை நுணுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேங்காய் துருவலும் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
அரைத்து வைத்திருக்கும் அரிசி தேங்காய் விழுதுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
அதன் பின்னர் 5 நிமிடம் கழித்து நுணுக்கி வைத்திருக்கும் வெல்லத்தை போடவும்.
வெல்லத்தை போட்ட பிறகு நன்கு 15 நிமிடம் கிளறி விடவும். பாயசம் திக்கான பதம் வந்ததும் மேலே ஏலக்காய் தூவி இறக்கி விடவும்.
சுவையான அரைத்து வைத்த பாயசம் ரெடி. விருப்பப்பட்டால் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்க்கவும். விசேஷ நாட்களின் போது செய்ய ஏற்ற ஒரு பாயசம். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் <b> திருமதி. சீதா </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அரைத்து வைத்த பாயசம் இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. லக்ஷ்மிஷங்கர் அவர்கள் தயாரித்த அரைத்து வைத்த பாயசத்தின் படம்

<img src="files/pictures/aa325.jpg" alt="picture" />

படம் வெளிஇட்டமைக்கு அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்