மசாலா கடலை

தேதி: August 24, 2009

பரிமாறும் அளவு: 5 - 6 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

வேர்க்கடலைப்பருப்பு (வறுக்காதது) - 1 டம்ளர்
கடலை மாவு - 1/2 டம்ளர்
சீரகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
சிவப்பு மிளகாய் - 10 அல்லது 12
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் - அல்லது சுவைக்கேற்ப
பொரிக்க - ரீஃபைண்ட் எண்ணெய் - 2 டம்ளர் அளவு


 

சிவப்பு மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடலையை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதில் கடலைமாவு, அரைத்து வைத்துள்ள கலவையையும் போட்டு, இத்துடன் தண்ணீர் சேர்த்து, பக்கோடாவுக்கு பிசையும் பதத்தில் கலந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயை காய வைத்து, மிதமான தீயில் பிசைந்து வைத்துள்ள கலவையை, கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்தாற் போல போட்டு, வெந்ததும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இங்கு மழை அதிகம் பெய்வதால் இந்த மசாலகடலை செய்தேன் மழை மசாலா கடலை காம்பினேஷன் மிகவும் சூப்பர்.

மிகவும் நன்றி.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மதிப்பிற்குரிய திரு.ஹைஷ் அவர்களுக்கு

தங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.

மசாலா கடலை செய்யும்போது, காரம் அதிகமாக இருப்பதால், எண்ணெயில் கார நெடி மிகுதியாகி, வெப்பம் அதிகமாகத் தாக்கும்.எண்ணெய் சட்டியின் முன் நிற்க நேரிடும்போது இடையிடையே நிறைய குளிர்ந்த நீர் அருந்துவது நல்லது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மசாலா கடலை ரொம்ப சூப்பராக இருந்தது மிக்க நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லக்‌ஷ்மி ஷங்கர்

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி!

மசாலா கடலை மதுரையில் வடம்போக்கி வீதியில், பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும். தயிர் சாததுக்குத் தொட்டுக் கொள்ள வாங்குவோம். அதே மாதிரி அங்கே உள்ள யூனியன் கிளப்பில்(தல்லாகுளம் அருகே) சிறிய பிளேட்டில் பறிமாறுவார்கள். விலை அதிகம். சமீபத்தில்தான் இதன் ரெசிப்பி கிடைத்தது. ரொம்ப சந்தோஷம் ஆகி விட்டது. உடனே செய்து பார்த்து, அறுசுவையிலும் பதிந்து வைத்துக் கொண்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி