காரகுழம்பு

தேதி: August 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 1/2 கப்
தக்காளி - 3
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:-
கடுகு, உளுந்து - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1.4 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் சிறிது
வறுத்து பொடிக்க:-
மல்லி விதை - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்


 

வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி கொள்ளவும். பொடிக்க வேண்டியதை தூளாக, நைசாக பொடிக்கவும்
இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் பூண்டை வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
புளிதண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க்க விடவும், கொதிக்க ஆரம்பித்ததும் பொடித்த பொடியை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.


சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,இது கொஞ்சம் காரமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா,
மிகவும் பிரமாதம் என் மகள் விரும்பி சாப்பிட்டாள்

ஹாய் ரேணுகா.நலமாக இருக்கீங்களா. உங்க விடுமுறை நன்றாக அனுபவித்தீர்களா.என்னை நலம் விசாரித்ததற்கு நன்றி.. உங்க குறிப்பில் இருந்து இந்த காரக்குழம்பும்,சன்னா மசாலாவும் செய்திருந்தேன்.நன்றாக இருந்தது.நன்றி. அன்புடன் அம்முலு..

நான் நலம் அம்முலு.விடுமுறை எல்லாம் நன்றாக சென்றது.காரகுழம்பும் சன்னா மசாலாவும் நன்றாக இருந்தது குறித்து சந்தோசம்.மிக்க நன்றி அம்முலு

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா... நல்ல குறிப்பு. வறுத்து பொடிச்சதால நல்ல வாசம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மிக்க நன்றி.எனக்கும் இந்த குழம்பு ரெம்ப பிடிக்கும்..

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

காரக்குழம்பு சூப்பரா இருந்தது ரேணுகா நல்ல காரமாகவும் சுவையாகவும் மணமாகவும் இருந்தது நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் ரேணு,
இரண்டு நாட்களுக்கு முன் இந்த காரக்குழம்பு செய்தேன். நான் வெங்காயத்துடன் கொஞ்சம் வெண்டைக்காயும் (பிரிட்ஜ்ஜில் வெண்டைக்காய் கொஞ்சம் மீதம் இருந்தது! : )) வதக்கிப் போட்டு செய்திருந்தேன். எல்லாம் வறுத்து பொடித்து போட்டது, நல்ல மணமாக‌, சுவையாக வந்திருந்தது. சுவையான குறிப்புக்கு நன்றி ரேணு!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ராணி இது காரமாக தான் இருக்கும்,அவரவருக்கு தகுந்தது போல் போட்டால் தானெ சாப்பிடமுடியும்.
நன்றி ராணி

அனாமிகா காராமக இருக்கும்,உங்களுக்கு பிடித்தது தானே,மிகவும் சந்தோஷம்,நன்றி உங்கள் பின்னூட்டத்திற்க்கு

ஸ்ரீ நானும் அப்படி கத்திரிக்கா போடுவேன்,எப்பவாது காய் இல்லை என்றால் இப்படி செய்வேன்,பொடித்து சேர்ப்பது தான் மணமே,மிக்க நன்றி ஸ்ரீ

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு, இந்த குழம்பு மிகவும் நன்றாக உள்ளது. பொடித்து சேர்ப்பது மிகவும் மணமாக உள்ளது. நன்றி உங்களுக்கு.

உங்கள் காரகுழம்பு கொதிக்கும்போது வாசம் வீட்டை தூக்குது .. என் கணவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது காரகுழம்பு..எல்லா பாராட்டும் உங்களுக்கே..

வாழு, வாழவிடு..

ஹாய் ரேணுகா! உங்கள் முறைப்படி காரக்குழம்பு செய்தேன், ஆனால் காரம் கொஞ்சம் குறைவாக. சுவை நன்றாக இருந்தது. சாதத்துடன் சாப்பிட நன்றாக இருந்தது. நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.