புதினா கோப்தா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
புதினா - அரை கட்டு
மல்லித்தழை - கால் கட்டு
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - அரை துண்டு
எலுமிச்சம்பழச்சாறு - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
பிரெட்தூள் - கால் கப்
சோளமாவு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவைகேற்ப


 

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய், இஞ்சியைச் சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கினவற்றை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து, அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, சீரகத்தூள், சோளமாவு, பிரெட் தூள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைந்த மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி காயும் எண்ணெய்யில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்