உருளை வறுவல்

தேதி: August 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

உருளைக்கிழங்கு - 3
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைவட்ட துண்டுகளாக மிகவும் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக வெட்டி கொள்ளவும்,
உருளை, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.
அரைத்த கலவையில் உருளையை பிரட்டி 1/2 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்
ஒரு தவாவில் சிறிது எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கை பரவினால் போல் போட்டு வேகவிடவும்.
அடிக்கடி திருப்பி போட்டு மொறுகவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணுகா, மசாலாக்கள் எல்லாம் சூப்பராக கலந்து ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள்.

உருளை வறுவல் நன்றாக இருந்தது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இப்போதான் உங்க குறிப்பு பார்த்தேன். செய்து பார்த்து
விட்டு சொல்கிரேனே.

உங்கள் உருளை வறுவல் செய்தேன் மொறு மொறுன்னு டேஸ்ட்டாக இருந்தது..மசாலாவை அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்தால்தான் நல்லது இல்லையெனில் கிழங்கில் பிரட்டி வைத்தவுடன் தண்ணீர் விட்டுவிடுகிறது நன்றி ரேணுகா..

வாழு, வாழவிடு..

உருளை வறுவல் என் பையனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு சாத உருண்டைக்கும் ஒரு வறுவல்னு சாப்பிட்டான்;-)

Don't Worry Be Happy.

ellorum eppdi irukinga.. nan pudu member indha arsuvai ku.. en kooda yum konjam chat pannugalen .. tholigaley

ரேணு... தக்காளி சாதத்துக்கு நல்ல பொருத்தம். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? உருளைவறுவல் சோம்பு,பூண்டு சேர்த்து செய்தது வித்தியாசமாக இருந்தது.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இம்முறை பேபி போடேடோஸ் வாங்கி வந்தேன், இதற்காகவே.. சுவையாக இருந்தது வறுவல்.. நன்றி.. நாங்களும் அதே காம்பினேஷன் - தக்காளி சாதத்துடன் சாப்பிட்டோம்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா உருளை வறுவலுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான்
நான் எப்படியெல்லாமோ உருளை வறுப்பேன்,ஒன்னும் சரிவலை,இந்த முறை என்னவோ வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்,அடிக்கடி செய்வேன்
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி,மிக்க நன்றி

ஆசியா அக்கா நான் நலம்,நீங்கள் நலமா?பிள்ளைகள் நலமா?
ஊரில் அனைவரும் நலமா?
இதில் சோம்பு வாசமும் பூண்டு வாசமும் தான் ரெம்ப நல்லா இருக்கும்,பின்னுட்டத்திற்க்கு நன்றி அக்கா

சந்தனா பேபி பொட்டேட்டோவில் நான் செய்ததில்லை,அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்,உங்களுக்கு பிடித்ததில் சந்தோஷம்,,நன்றி சந்தனா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு நலமா? உருளை வறுவல் நன்றாக இருந்தது. நான் பீட்ரூட் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டேன். நன்றி.

ப்ரிட்ஜ் இல்லாதவர்கள் என்ன செய்வது சொல்லுங்களேன்

வளர்மதி டிப்ஸ் டிப்ஸ் அப்படின்னு ஒரு த்ரெட் ஓபன் பண்ணினாங்க. அதுல போய் பாருங்க

http://www.arusuvai.com/tamil/node/15722

இதை ஓபன் பண்ணி பாருங்க. அதுல இருக்கு. page 4 னு நினைக்கிறேன்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி