ஈசி காளான் குழம்பு

தேதி: August 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

காளான் - 1 பாக்கெட்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி
கறிமசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய், முந்திரி விழுது - 1/2 கப்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
பெப்பர் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்த்து லேசாக வதக்கவும்.
அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட்டு மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கறிமசாலாத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தேங்காய், முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
அதில் தேங்காய் துருவல், பெப்பர் சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.
கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


தக்காளி, வெங்காயம் இல்லாத குழம்பு... அனைத்து உணவுகளுக்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாவ் சூப்பர்'' இன்னைக்கெ TRY ப் பன்னிடுரேன்.....நல்லா இருக்கிரது உங்கள் குறிப்பு

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

காந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் ஈசி காளான் குழம்பு மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மிக்க நன்றி தோழி...

Be Happy