பச்சை தொக்கு

வழங்கியவர் : Mrs.Mano
தேதி : வியாழன், 27/08/2009 - 10:39
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- புதினாக் கட்டு- 2
- கொத்தமல்லிக் கட்டு-1
- கறிவேப்பிலை- 4 கொத்து
- புளி -ஒரு சிறிய ஆரஞ்சு அளவு
- மிளகாய் வற்றல்- 1 கை
- கடலைப்பருப்பு- 50கிராம்
- உளுத்தம்பருப்பு- 50 கிராம்
- இஞ்சி- 50 கிராம்
- பச்சை மிளகாய்-5
- காயம்- சிறிது
- நல்லெண்ணெய்-200 கிராம்
- தேவையான உப்பு
- கடலைப்பருப்பு, வற்றல் மிளகாய், காயம், உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- ஆறியதும் சிறிது கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
- இஞ்சி, கீரைகள், பச்சை மிளகாய், புளியை நன்கு அரைக்கவும். எண்ணெயை சூடாக்கிய பின், மிதமான தீயில் அரைத்ததை வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் பொடியை சிறிது சிறிதாகத் தூவி கிளறிக்கொண்டே இருக்கவும்.
- உப்பு சேர்க்கவும்.
- லேகியப் பதம் வந்ததும் இறக்கவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
எப்படி இருக்கிங்க. இப்ப எல்லாம் வருவதே இல்லை,ரொம்ப நன்றாக இருந்தது. நான் இன்று செய்தேன், இந்த் முறையில் நான் கொத்தமல்லி மட்டும் செய்துள்ளேன். மிக்க டேஸ்டி & ஹெல்தி.
கடந்த ஒரு மாதமாக தஞ்சாவூரில் இருந்தேன். இப்போதுதான் இங்கு திரும்பி வந்தேன். உங்களின் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பச்சை தொக்கு நன்றாக வந்தது மகிழ்வாக இருந்தது. உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றிகள்!!