முட்டை உருளைக்கிழங்கு கபாப்

image

வழங்கியவர் : Mrs.Mano

தேதி : வியாழன், 27/08/2009 - 10:45

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

2
4 votes
Your rating: None
 

 

  • உருளைக்கிழங்கு [வேக வைத்தது]- 2 கப்
  • வெங்காயம்-2
  • பச்சை மிளகாய்-3
  • துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
  • சோம்புப்பொடி- அரை ஸ்பூன்
  • அரிந்த பொதினா- கால் கப்
  • அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • பூண்டு விழுது- அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • தக்காளி விழுது- அரை கப்
  • மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
  • தேவையான உப்பு
  • முட்டைகள்-4
  • பிரட் ஸ்லைஸஸ்-4
  • எண்ணெய் தேவையான அளவு

 

  • முட்டைகளை வேக வைத்து ஓடுகளை நீக்கவும்.
  • முட்டைகளை இரண்டாக வெட்டி மஞ்சள் கருக்களைப் பிரிக்கவும்.
  • வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • வெங்காயத்தைப்பொடியாக அரிந்துப் போட்டு வதக்கவும்.
  • பின் இஞ்சி, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பூண்டு விழுது, சோம்புப்பொடி, கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய விழுதில் பாதியை உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.
  • மீதமுள்ள வெங்காய விழுதில் தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் சிறிது வதக்கவும்.
  • இதில் முட்டை மஞ்சள் கருக்களைக் கலந்து ஆற வைக்கவும்.
  • மறுபடியும் இந்த பேஸ்டை பாதியாக வெட்டிய வெள்ளைக்கருக்களில் அடைக்கவும்.
  • உருலைக்கிழங்கில் போதிய உப்பு, பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ஒவ்வொரு பாதி முட்டைக்கருவைச் சுற்றிலும் கவனமாக பதிய அவித்து முட்டை போல உருட்டவும்.
  • இப்படி எல்லா முட்டை வெள்லைக்கருக்களையும் உருளைக்கிழங்கு பேஸ்டால் மூடியதும்
  • மிதமான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.






அன்பு மனோ அவர்களுக்கு

இன்று இந்த குறிப்பை கண்டேன் .போன வாரம் நானும் முட்டை கபாப் குறிப்பை கொடுத்தேன்..காப்பி அடிச்ச்த்தேன் என்று சொல்லிவிடுவார்களே. இல்லை என்று சொல்லிடலாம் என்று வந்தேன்:-)..என்னை நம்புவீங்களே.

தளிகா