கால்களுக்கு போடக்கூடிய சுலபமான மெகந்தி டிசைன்

தேதி: August 29, 2009

3
Average: 3 (1 vote)

 

மெகந்தி கோன்

 

கால் பாதங்களின் ஒரத்திலிருந்து படத்தில் உள்ளது போல் வளைவுகள் வரைந்துக் கொள்ளவும். சிறிது இடைவெளிவிட்டு அதன்கீழ் மற்றொரு வளைவுகளை வரைந்துக் கொள்ளவும். இதுப்போல் பாதத்தின் ஓரங்கள் முழுவதும் வரைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு வளைவின் நடுவிலும் சின்ன பூக்கள் வரையவும்.
பூக்கள் வரைந்து முடித்ததும் ஒவ்வொரு வளைவிற்கு கீழும் தனித்தனி முத்துக்கள் போன்று இருப்பதற்காக சிறிது இடைவெளிவிட்டு மூன்று முத்துக்கள் வரைந்துக் கொள்ளவும். இது கால் ஓரங்களில் எளிமையாக போட்டுக்கொள்ளக் கூடிய ஒரு டிசைன்.
இதேப் போல் காலில் போடக்கூடிய மற்றொரு டிசைன். கால்பாதத்தின் ஒரங்களில் சிறிய இடைவெளி விட்டு விட்டு பூக்களை வரைந்துக் கொள்ளவும். பூக்கள் வரைந்து முடித்ததும் அவற்றை இணைப்பது போல் கொடி வரையவும்.
வரைந்த கொடிகள் எல்லாவற்றிலும் சிறிய இலைகள் போல் போட்டுக் கொள்ளவும். இதுப்போன்று பாதத்தின் ஓரங்கள் முழுவதும் போட்டுக் கொள்ளவும்.
அடுத்து இந்த வகை டிசைன் கால்பாதத்தின் மேலே போடக்கூடியவை. முதலில் கால்பாதத்தின் நடுவில் ஒரு வட்டம் வரைந்து அதன் உள்ளே சிறிய சிறிய கட்டம் போன்று வரைந்துக் கொள்ளவும். பிறகு வரைந்த வட்டத்திற்கு வெளியே சிறிது இடைவெளி விட்டு மீண்டும் ஒரு வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
வட்டங்களை சுற்றிலும் எட்டு இதழ்கள் கொண்ட பூக்களை வரையவும்.
பிறகு அந்த இதழ்களின் நடுவில் "v" வடிவில் சிறிய கோடுகள் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் எட்டு இதழ்களிலும் வரைந்துக் கொள்ளவும்.
கடைசியாக தோரணம் போன்ற இந்த வகை டிசைனை விரல்களின் நடுவில் போட்டுக் கொள்வதற்கு பொருந்தும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய சுலமபான இந்த மெகந்தி டிசைன் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா பார்த்தவுடன் இது கழுத்தென நினைத்திட்டேன். என்ன ஊருக்குப் போய் ஆசைக்கு நல்லா மருதாணி போடுறீங்களோ? அழகாக வரைகிறீங்கள் பற்றன் எல்லாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அனிதா மருதானி ரொம்ப அழகா போட்டுயிருக்கிங்க சூப்பர்ர்ர்ர்ர்
சதாலட்சுமி

சதாலட்சுமி

மெத்தென்ற காலில் போட்டதால் மருதாணிக்கு பெருமையா?மருதாணியால் காலுக்கு பெருமையா?சூப்பர் மாடல்.டிசைனும் அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அழகாக இருக்கிறது வனி. பொறுமையாகப் போட்டிருக்கிறீர்கள். எனக்கும் போட்டுக் கொள்ள ஆசையாக இருக்கிறது, விடுமுறை வரட்டும் என்று இருக்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

ஆஹா.... இது என்று வந்தது??? இப்போது தான் கண்ணில் படுது. அட்மின் நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

அதிரா... என் கால் அத்தனை மட்டமாகவா இருக்கு???!!! :( கழுத்துன்னு நினைக்கிற மாதிரி.... "பற்றன்" ... அப்படின்னா என்ன அதிரா?? நிஜமாவே தெரியல அதான் கேட்டேன்.

சதாலட்சுமி.... மிக்க நன்றி. இப்போதே முதன் முதலில் பேசுகிறோம் என்று நினைக்கிறேன். :)

ஆசியா ஆசியா.... ஒவ்வொரு தலைப்பிலும் உங்களை கண்டால் தான் அந்த தலைப்பே பார்த்தது போல் இருக்கு. :) மிக்க நன்றி.

இமா.... மிக்க நன்றி. லீவ் கிடைச்சதும் ஆன்ட்டியிடம் சொல்லி போட சொல்லுங்கோ. முடிந்தால் படம் எடுத்து எனக்கும் அனுப்புங்கோ. பார்க்க ஆசையா இருக்கு. :)

போடவே தெரியாதவங்க கூட சுலபமா போட முடியணும்'னு தான் சுலபமான டிசைன் அனுப்பறேன். அதனால் கண்டிப்பா போட்டு பார்த்து சொல்லுங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா சொல்வது வேறொன்றும் இல்லை.pattern -தான் பற்றன் என்று குரிப்பிட்டுள்ளார்,என்று நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டிசைன் மிகமிக அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
அன்புடன்,
செபா.

ஓஹோ.... ஆசியா பரவயில்லை நீங்க அதிரா பேச்சை நல்லாவே புரிஞ்சு வெச்சுருக்கீங்க. ;) மிக்க நன்றி.

மிக்க நன்றி செபா ஆன்ட்டி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்று தான் இந்த வலைப் பக்கத்திற்கு வருகிறேன். முதலில் உங்கள் மெகந்தி டிசைனைத்தான் பார்த்தேன். மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Mericlon,
Pearl City,
Tamil Nadu,
India.

Mericlon,
Pearl City,
Tamil Nadu,
India.

மிக்க நன்றி மரியா சாம். :) தொடர்ந்து அறுசுவையில் பங்கு பெருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா டிசைன் நல்லாருக்கு... வாழ்த்துக்கள்..

Kalai

மிக்க நன்றி கலா. போட்டு பாருங்க நீங்களும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta