ப்ளைன் ஜெல்லி

தேதி: August 29, 2009

பரிமாறும் அளவு: 4-6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

கடற்பாசி(சைனா க்ராஸ்) - 10 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்
சீனி - 6 - 8 டேபிள் ஸ்பூன்
ரோஸ்மில்க் எசன்ஸ் - 5 துளிகள்


 

முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின் அதில் கடற்பாசியை போடவும்.
கடற்பாசி நன்கு கரைந்ததும் சீனி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும்.
ஒன்று அல்லது இரு தட்டுக்களில் ரோஸ்மில்க் எசன்ஸ் விடவும்.
பின்பு அந்த தட்டில் காய்ச்சிய கடற்பாசியை விடவும். இது பார்ப்பதற்கு பின்க் கலரில் கண்ணாடி போல் இருக்கும்.
பின்பு ஃப்ரிட்ஜில் 1-2 மணி நேரம் உறைய வைத்து விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறவும். சுவையான ஜில்லென்ற ஜெல்லி ரெடி.


இதனை பால், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் சேர்த்தும் செய்யலாம். தண்ணீரில் காய்ச்சி பால் எசன்ஸ் மிக்ஸ் செய்து உறைய வைக்க வேண்டும். இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு நேரத்தில் பெரும்பாலும் விதவிதமாக செய்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்