ஈசி மீன் பிரியானி

தேதி: August 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

வஞ்சர மீன் - 1 கிலோ(முள் இல்லாத எந்த மீனும் போடலாம்)
பாஸ்மதி அரிசி - 2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி,பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தக்காளி - 3
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 5
கறிமசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் விழுது - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது


 

மீனில் லேசாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், லெமன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் குக்கரில் எண்ணெய், வெண்ணெய், நெய் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் பொடி, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்க்கவும். வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
அதனுடன் கறிமசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வேண்டுமெனில் சிறிது நெய் விட்டு வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
கடைசியில் ஊற வைத்த மீனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரிசியை சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
பின் 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறிய பின் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.


தண்ணீர் சேர்க்கும் போது அரிசியின் அளவை விட ஒரு துளி கூட அதிகமோ, குறைவோ இருக்க கூடாது. நன்கு வதக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஈசி மீன் பிரியானி உண்மையிலேயே ஈசிதான். நன்றி உங்கள் குறிப்புக்கு.

வாழ்க வளமுடன்

ஹாய் மிஸிஸ் காந்தி ஈசி மீன் பிறியாணி செய்வது மிகவும் சுலபம்
உங்கள் முறைப்படி செய்தேன். வித்தியாசமான ரேஸ்ட், நன்றாக இருந்தது
நல்ல ரேசப்பி கொடுத்துள்ளிர்கள் நன்றி, அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மிக்க நன்றி தோழி. செய்து பார்த்தமைக்கும் மிக்க நன்றி.Be Happy

Be Happy