பயறு புட்டு

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பயறு - கால் படி
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 3
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி பருப்பு - 10
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

முழுப்பயறை உடைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பிறகு அதனை எடுத்து கழுவி சுத்தம் செய்து கிரைண்டரில் மாவு மாதிரி கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
அத்துடன் சிறிது உப்பு சேர்த்து இட்லி தட்டில் கொட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
அதை உதிர்த்து போட்டு அதில் தேங்காயை துருவி வெல்லத்தை பாகாக காய்ச்சி, ஏலப்பொடி போட்டு முந்திரியை நெய்யில் வறுத்து போட்டு கிளறிவைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்