புளி உப்புமா

தேதி: September 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உடைத்த புழுங்கல் அரிசி - 3 3/4 கப்
மிளகாய் வற்றல் - 12
பெருங்காயம் - சின்ன நெல்லிக்காய் அளவு
புளி - பெரிய எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு - கால் கப்
கடுகு - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - 2 1/2 மேசைக்காண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

உப்புமா செய்ய தேவையானவற்றை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டு 4 நொடி வதக்கவும்.
புளியுடன் 7 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் மற்றும் வதக்கியவற்றை சேர்க்கவும்.
அதன் பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் உடைத்த புழுங்கல் அரிசியை போட்டு கிளறி விடவும்.
நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
உப்புமா நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும். இந்த புளி உப்புமா குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சசிகலா அய்யாசாமி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே அருமயா இருக்கு.நாளை காலை டிபன் மெனு ரெடி.செய்துவிட்டு சொல்கிறேன்