அழகிய பூங்கொத்து (பொக்ஃகே) செய்வது எப்படி?

தேதி: September 2, 2009

5
Average: 5 (7 votes)

 

சாட் அட்டை - ஒன்று
ப்ரெஷான பூக்கள்
சிவப்புநிற ரிப்பன் லேஸ்
கம் டேப்
கிப்ட் பேப்பர்
பொக்ஃகே பேப்பர்
செயற்கை மொட்டுகள்
செயற்கை இலைகள்
செயற்கை புற்கள்
ஸ்டராஃப்ளர்
பென்சில்
கத்தரிக்கோல்

 

பொக்ஃகே செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தேவையானப் பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் அட்டையில் படத்தில் உள்ளது போல் பொக்ஃகேயின் வடிவத்தை பென்சிலால் வரைந்து கொள்ளவும். வரைந்த படத்தை கத்தரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
கிப்ட் பேப்பரை நறுக்கிய சாட் அட்டையின் அளவிற்கு வரைந்து தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சாட் அட்டையின் பின்பக்கத்தில் முழுவதும் கம் தடவி அதில் இந்த கிப்ட் பேப்பரை ஒட்டவும்.
படத்தில் காட்டியுள்ளபடி கிப்ட் பேப்பரை ஒட்டி நன்கு காயவிடவும்.
ஒட்டிய சாட் அட்டையின் வழவழப்பான பகுதியில் மூன்று செயற்கை புற்களை 2 செ.மீ இடைவெளி விட்டு வைக்கவும். புற்கள் விலகாமல் இருப்பதற்கு அதன் அடியில் வெள்ளை நிற கம் டேப் கொண்டு ஒட்டவும். பிறகு இடைவெளிவிட்டிருக்கும் பகுதியிலும் புற்களை வைத்து இதை போல் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
அட்டையில் ஒட்டி வைத்திருக்கும் புற்களின் இடைவெளியில் செயற்கை இலைகளை வைக்கவும். இழைகள் விழாமல் இருப்பதற்கு ஸ்டராஃப்ளர் கொண்டு பின் பண்ணவும். மேலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இதில் செயற்கை மொட்டுகளை வைத்து அலங்கரித்து கொள்ளலாம். செயற்கை மொட்டுகளை வைக்கும்போது அதன் அடியில் கம் டேப் கொண்டு ஒட்டி விடவும்.
சாட் அட்டையின் அடியில் இரண்டு இலைகளுக்கு நடுவில் ஒரு ரோஜா பூவை வைத்து அதன் காம்பு பகுதியில் கம் டேப்பை ஒட்டவும். அதற்கு மேல் மூன்று பெரிய பூக்களை சொருகவும்.
இதைப் போல் சாட் அட்டையின் மேல் பகுதி வரை இடைவெளியில்லாமல் பெரிய பூக்கள் மற்றும் ரோஜா பூக்களை கொண்டு அலங்கரிக்கவும். ஒவ்வொரு பூக்களையும் வைக்கும்போது அதன் காம்பு பகுதியை கம் டேப்பால் ஒட்டி விடவும்.
பிறகு பொக்ஃகே பேப்பரை அதன் மேல் வைத்து பின்பக்கமாக மடக்கி அதனை கம் டேப் கொண்டு ஒட்டி விடவும்.
பொக்ஃகே செய்தப் பிறகு அதன் அடியில் சிவப்பு நிற ரிப்பன் லேஸை கொண்டு போவ் போல செய்து கம் டேப் வைத்து ஒட்டி விடவும். இப்பொழுது செயற்கை மொட்டு, இலைகள், புற்கள் மற்றும் ப்ரெஷான பூக்களை கொண்டு எளிதாக செய்யக்கூடிய அழகிய பொக்ஃகே ரெடி.
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த பொக்ஃகே செய்முறையை வடிவமைத்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் பாப்பி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெகு அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள். @}->--

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகாயிருக்கிறது உங்கள் பூங்கொத்து. வாழ்த்துக்கள்.
செபா.

செண்பகா..... கலக்கறீங்க போங்க. :) ரொம்ப ப்ரொஃபஷனலா இருக்கு. பேசாம அண்ணா'ட சொல்லி ஒரு பொக்கே ஷாப் ஓப்பன் பண்ணிடுங்க. வாழ்த்துக்கள். ரொம்ப அழகா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சொண்பாகா அண்ணி சூப்பரா இருக்கு... கலக்குரிங்க... வாழ்த்துக்கள்....

"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அழகான பூங்கொத்தை எளிமையாக செய்து விளக்கிய செண்பகா அண்ணிக்கு மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

பாப்பி எல்லோரும் பொய் சொல்லீனம்... நான் மட்டும்தான் உண்மையைச் சொல்கிறேன்...
"மிகவும் அழகாக இருக்குது பாப்பி"... உங்கள் பொக்கே..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்த அழகிய பூங்கொத்தின் படம்

<img src="files/pictures/bouquet-1.jpg" alt="picture" />

மலர்க்கொத்து அழகாக இருக்கிறது தாஹிராபானு.

‍- இமா க்றிஸ்

ஆங்...நான் அனுப்பிய படமா இது ?ஏன் ஒரு மாதிரி என்லார்ஜ்டாக இருக்கிறது? landscape-ல் தானே அனுப்பினேன்.

இமா,நிஜமாவே நல்லா இருக்கா..நன்றி.

With Best Wishes,
Thahira Banu.

With Best Wishes,
Thahira Banu.

hi mam
nengal seitha poongothu migavum arumai.

nenaivay nejam
nenaivugaludan.
my e-mail add-(ashasg83@gmail.com)
pls reply me

arumaiyaaga ulladhu....

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta