புடலங்காய் மிளகூட்டல்

தேதி: September 3, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

புடலங்காய் - 1
பாசிபருப்பு - 1/2 கப்

அரைக்க
------------
தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1/4 தே.க
பச்சை அரிசி- 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 2
உப்பு - 1/4 தே.க

தாளிக்க

எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/4 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
பெருங்காயம் - 1/4 தே.க
கருவேப்பிலை - கொஞ்சம்


 

புடலங்காய் கழுவி சிறிய துண்டுகளாக்கவும்.
அரைக்கயுள்ளதை அரைக்கவும்.
பாசிபருப்பை மலர வேகவைக்கவும்.
புடலங்காயை உப்பு சேர்த்து வேகவைக்கவும்
பாசிபருப்பையும் சேர்த்து அரைத்துள்ள மசாலவையும்
சேர்த்து ஐந்து நிமிடம் வேடவிடவும்.
நல்ல பச்சை வாசனை போனவுடன்
தாளிக்கயுள்ளதை தாளித்து போடவும்.
கடையிசியில் பச்சை கறிவேப்பிலை போட்டு
இறக்கினால் வாசனையோடு சாப்பிட நன்றாக இருக்கும்.


இதே முறையில் கீரை மிளகூட்டல் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்