வடைகறி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கடலைப்பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 6
பச்சைமிளகாய் - 6
தேங்காய் - ஒரு மூடி
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
எண்ணெய் - கால் லிட்டர்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கடலைப்பருப்பை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து அம்மியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் தேவையான அளவு உப்பு கலந்து 2 வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை நைசாக அரிந்து, கடலைப்பருப்பு மாவில் கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவினை பக்கோடா போல் கிள்ளிப் போட்டு, பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்.
அதன் பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சிறிதளவு பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, அரிந்த வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாய் சேர்த்து பொன்னிறத்தில் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்த தேங்காய், இஞ்சி, பூண்டு கலவையில் 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் சிறிதளவு தேவையான உப்பு சேர்த்து தேவைக்கு ஏற்ப கரைத்து வாணலியில் ஊற்ற வேண்டும்.
குழம்பானது கொதித்து குருமா பக்குவத்திற்கு வந்ததும், பொரித்து வைத்துள்ள பக்கோடாவை அதில் சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
இந்த வடைகறி இட்லி தோசைக்கு தொட்டு கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்