புடலங்காய் கூட்டு

தேதி: September 8, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (6 votes)

 

புடலங்காய் - ஒன்று
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வேக வைத்த பயத்தம் பருப்பு - அரை கப்


 

புடலங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புடலங்காயை போட்டு அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம், வேகும் வரை கொதிக்க விடவும்.
வேக வைத்த பருப்புடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி கொள்ளவும்.
பருப்பு கலவையை புடலங்காயுடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை கூட்டுடன் சேர்த்து கிளறி விடவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் கூட்டு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. கங்கா சிவராஜ் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கங்கா! புடலங்காய் கூட்டு பார்க்க நன்றாய் இருக்கின்றது. பருப்பும் சேர்த்து சமைக்கும்போது கொம்பினேசன் நன்றாய் இருக்கும். புடலங்காய் கைவசம்
இருக்கின்ற படியால், நாளை மதியத்துக்கு கறி றெடி. செய்து பாத்திட வேண்டியதுதான்.
நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.