கோழி உருளைக்கிழங்கு குழம்பு

image

வழங்கியவர் : Mrs vathsala Na...

தேதி : புதன், 09/09/2009 - 01:44

ஆயத்த நேரம் : 20 நிமிடம்

சமைக்கும் நேரம் : 30 நிமிடம்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு

3
2 votes
Your rating: None
 

 

  • கோழி - 1 கிலோ
  • உருளைக் கிழங்கு - 2(பெரியது)
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 1 அல்லது 2
  • பூண்டு - 4 பல்
  • பச்சை மிளகாய் - 4
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  • கறுவா - 1 துண்டு
  • கராம்பு - 4
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • இறைச்சி சரக்கு தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • எலுமிச்சம் பழப்புளி - 1/2 (விரும்பினால்)

 

  • கோழியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும். உருளைக்கிழங்கின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கறுவா, கராம்பு, பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டைப் போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் கோழியைச் சேர்த்து வதக்கவும்.
  • கோழி சிறிதளவு வதங்கியதும் உப்பு, தக்காளிச் சேர்த்து ஒரு முறை கிளறி மூடி வேக விடவும்.
  • 5 நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மிளகாய்த்தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும்.
  • பின்பு பச்சை மிளகாய், உருளைக்கிழங்கை சேர்த்து மூடி வேகவிடவும்.
  • கோழி, உருளைக்கிழங்கு வெந்து, குழம்பு தடிப்பாக வந்ததும் இறைச்சி சரக்குத்தூளை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
  • பின்பு விரும்பினால் எலுமிச்சம்பழ புளியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சுவையான கோழி உருளைக் கிழங்கு குழம்பு தயார். இது சோறு, புட்டு, இடியப்பம், பாண், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.