நோன்பு கஞ்சி பொடி

தேதி: September 9, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சீரகம் - 50 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
சோம்பு - 25 கிராம்
பட்டை -10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்


 

மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் சுத்தம் செய்து காய வைத்து மிக்ஸியில் தூள் செய்து எடுக்கவும்.
ருசியையும் மணத்தையும் தரக்கூடிய நோன்பு கஞ்சிப்பொடி ரெடி. இப்படி திரித்து வைத்துக்கொண்டால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம். சீரகம் மற்றும் அனைத்து பொருட்களும் அரைப்பட்டு விடுவதால் கஞ்சி அருமையாக இருக்கும்.


கஞ்சி செய்யும் போது இந்த பொடியை நூறு கிராம் அரிசிக்கு 1 டீஸ்பூன் குவியலாக போடவும். ஊறவைத்த பச்சரிசியுடன், நான்கு அல்லது ஐந்து மடங்கு தண்ணீர் வைத்து கஞ்சிப்பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது பூண்டு, வெங்காயம், தக்காளி, மல்லி இலை, புதினா, உப்பு போட்டு வேக வைக்கவும். வெந்தபின்பு அரை தேங்காய் பால் எடுத்து அதனை சிறிது வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து நுரை கூடி வரவும் சேர்த்தால் சிம்பிளான சுவையான கஞ்சி ரெடி. கொஞ்சம் ஸ்பெஷலாக கஞ்சி என்றால் சிறிது பாசிப்பருப்பு, கடலைபருப்பு, கொத்துக்கறி, கேரட்,பச்சை பட்டாணி என்று விரும்பிய பொருட்களை சேர்த்தும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா அக்கா உங்கள் கஞ்சி பொடி செய்து வைத்து தினமும் போட்டு வருகிறேன்.அருமை.
புன்னகையே பொன்னகை.
நாச்சியா சகாபுதீன்

புன்னகையே பொன்னகை