உருளைக்கிழங்கு முறுக்கு

தேதி: September 10, 2009

பரிமாறும் அளவு: 15

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4
அரிசி மாவு - 4 மேஜைக்கரண்டி அல்லது 1 கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எள்ளு - 2 தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர்
மகிழம்பூ (முள்ளு)முறுக்கு அச்சு


 

உருளைக்கிழங்குகளை, குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ தண்ணீரில் போட்டு வைத்து நன்றாக வேக வைத்து, ஆற வைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, நன்றாக கட்டிகள் இல்லாமல் மசிக்கவும்.
இதனுடன் மேல சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் தேவைப்படாது.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள்.
முறுக்கு பிழியும் குழலில், மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் முறுக்கு ஷேப்பில் பிழிந்து விடுங்கள். அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.
ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் எடுக்கும். பிறகு முறுக்கினை ஜல்லிக்கரண்டி கொண்டு திருப்பி விட்டு 2-3 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு எண்ணெயில் இருந்து கரண்டியின் மூலம் எடுத்து விடலாம். முறுக்கு ரெடி.
இந்த முறுக்கினை பல நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.


இந்த முறுக்கு மொறு மொறுப்பு வேற எந்த வகை முறுக்கிலும் வராது. சாப்பிடுவதற்கு எளிதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். தட்டில் முறுக்கை பிழியாமல் நேரிடையாக எண்ணெயில் பிழிவதற்கு காரணம், அப்போதுதான் முள்ளு முறுக்கின் ஷேப் மாறாமல் இருக்கும். தட்டில் பிழிந்தும் எண்ணெயில் போடலாம். ஆனால் அது தேன் குழல் முறுக்கு போல ஓரங்கள் முள் போன்று இல்லாமல் மொழுக்கென்று இருக்கும். உருளைக்கிழங்குக்கு, அரிசி மாவு போல் பிழிந்த பிறகு, ஷேப்பை நெடு நேரம் வைத்திருக்க முடியாது. ஆனால் சுவையில் மாற்றமிருக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் உருளைகிழங்கு முறுக்கு செய்தேன் .. சுவை நன்றாக இருந்தது மாவு பிசைவதர்க்கு நன்கு மிருதுவாக இருந்தது...ஃபிங்கெர்ஃப்ரைஸ் டேஸ்ட்டும் இருந்தது நன்றி மேம்...

வாழு, வாழவிடு..