மின்ஸ்ட் சிக்கன்

தேதி: September 11, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 6 (கீறியது)
விதைநீக்கிய சிகப்பு மிளகாய் - 8
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - ஒன்று
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனை மிகவும் பொடியதாக கொத்தி வைக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேரிடையாக எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
பிறகு மிளகாய் வகைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கொத்திய கறியை சேர்த்து எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்