காரட் குடைமிளகாய் பொரியல்

தேதி: September 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
பருப்பு பொடி - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒரு
குடை மிளகாய் - 2
காரட் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், குடைமிளகாய் மற்றும் காரட் இவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.
நறுக்கிய காரட்டை ஒரு ஸ்டீம் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும் வெங்காயம் வதக்கி (பொன்னிறமாகனும் என்ற அவசியம் இல்லை) குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் பாதி வெந்ததும் காரட், உப்பு மற்றும் பொடிவகைகளை சேர்த்து நன்கு வதக்கி சுருண்டு வந்ததும் இறக்கவும்.


பூண்டு மிளகாய்பொடி = 4 பல் பூண்டு, 4 காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி கொப்பரையை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவேண்டும். பருப்பு பொடி - ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு, 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை, 5 மிளகு, காய்ந்த மிளகாய் 2, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Intha Carrot capcicum poriyal suvai migavum arumai en kanavar mamiyar anaivarum virumbi saptanar unagalin intha subayana kuripirku migavum nanri!!!!

என் குறிப்பை செய்து பின்னூட்டம் தந்ததற்க்கு மிக்க நன்றி. அனைவருக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோஷம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப டேஸ்டியாக இருந்தது.

உங்களின் பின்னூடத்திற்கு மிகவும் நன்றி.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

திருமதி மூர்த்தி....
உங்கள் இப்பொரியல் கறி செய்தேன் நன்றாக வந்தது. பருப்புப்பொடி சேர்த்தது சுவையை அதிகமாக்கியது. நான் கரட்டை நேரடியாகவே சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. சிறு சிறு மாற்றம் மிகவும் வரவேற்க தக்கது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கரட் குடைமிளகாய் பொரியலிற்கு நான் கரட்டை துருவிய பின்பு நேரடியாக சேர்த்து செய்தேன் சுவை மிக நன்றாக இருந்தது(இதில் பூண்டுமிளகாய் பொடி பருப்பு பொடி கலந்து இருப்பதால் இதன் சுவை கூடுதலாகவே இருந்தது)அத்துடன் இந்த சுவையான குறிப்பை தந்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம். உங்களின் இந்த அன்பான பின்னூட்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா இன்று உங்க காரட் குடைமிளகாய் பொரியல் செய்தேன் மிகவும் நன்றாக, வித்தியாசமான சுவையில் இருந்தது வாழ்த்துக்கள் பா

ponni