தந்தூரி சப்ஜி

தேதி: September 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குடை மிளகாய் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பேபி கார்ன் - 2
வெள்ளரிக்காய் - சிறு துண்டு
பாகற்காய் - சிறு துண்டு
காரட் - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
உப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
வறுத்த சீரக பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

காய்கறிகளை சதுரமான துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ள வேண்டும்.
கடாய் சூடானதும் உப்பு தூவி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி எல்லா பொடியையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
கடைசியாக காய்கறிகளை சேர்த்து மசாலா நன்கு காய்கறிகள் மேல் பரவும் வரை பிரட்டி எடுக்கவும். சுவையான தந்தூரி சப்ஜி தயார்.


மேலும் சில குறிப்புகள்