சிக்கன் தொக்கு

தேதி: September 12, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சிக்கன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - 350 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவையான அளவு


 

தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து கூழாகி தனியே வைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடாகி கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நசுக்கிய தக்காளியை சேர்த்து எல்லா பொடியையும் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி அதனுடன் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். சுவையான கோழி தொக்கு ரெடி.


நாட்டு கோழியாக இருந்தால் சுவை அதிகம்.

மேலும் சில குறிப்புகள்