கர்ப்பகாலத்தில் ஓய்விற்கான ஆயத்தத்திற்கு உதவவும்

தோழிகளே நான் பல தடவைகள் கர்ப்பமாகி ஒரு தடவைகூட என் கர்ப்பம் முழுமையடைந்து குழந்தை பெறும் வாய்ப்பை பெறவில்லை.இப்போது என் உடல்நிலை அதுவும் கர்ப்பப்பை பல்வீனமாக இருப்பதாகவும் அடுத்த கர்ப்பத்தின் போது நான் மிக மிக அவசியமான தேவை தவிர எழுந்து நடப்பது கூட ஆபத்து என்று டாக்டர் சொல்லி உள்ளார்.எனக்கு இங்கு கணவரைத்தவிர யாருமில்லை.ஆயத்தங்களை ஏற்கனவே செய்யச்சொல்லி டாக்டர் சொல்லி உள்ளார்.
நான் என்னென்ன ஆயத்தங்கள் செய்து வைக்க வேண்டும்.9 மாசம் பெட் ரெஸ்ட்டில் இருப்பதற்கு.தயவு செய்து உதவவும்.

இப்போதைக்கு ரூமில் டி.வி வைத்து சன் டிவி எடுப்பதாக உள்ளோம்.
சமையலுக்கு சாம்பார் பொடிகள் கொஞ்சம் செய்து வைத்திருக்கிரேன்.
இதேபோல் பொழுது போவதற்கும் கணவர் எனக்கு சுலபமாக சமைத்து வைத்து விட்டு வேலைக்கு செல்லவும் நான் என்ன ஆயத்தங்கள் செய்து வைக்கலாம்.உதவ முடியுமா?

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

அஷாரா,

உங்களின் முன்னெச்சரிக்கையைப் பாராட்டுகிறேன். வெற்றி பெற இறைவன் அருள் புரியட்டும்.

இவை முடியுமா என்று பாருங்கள்:

1. சாப்பாடு: சிறிய இந்திய ஹோட்டல் அருகாமையில் இருந்தால் அவர்களிடம் 3 வேளை சாப்பாடும் கொண்டு தரும்படி ஏற்பாடு செய்யலாம். அல்லது நண்பர்கள், உறவினர்கள் அருகில் இருந்தால், அவர்கள் வீட்டில் வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள் இருந்தால் அவர்களிடம் பேசிப்பாருங்கள். மாதக் கட்டணம் தருவதால் அவர்களுக்கும் ஒரு வருமானம் கிடைத்த மாதிரி இருக்கும். ஆனால் கவனமாகக் கையாள வேண்டும்.

2. பொழுதுபோக்கு: டி.வி., இண்டர்நெட், மியுஸிக், புத்தகங்கள், ஃபோன் பேசுதல் இவைதான்; வேறென்ன முடியும்? உடலை வருத்தாத கைவேலைப்பாடுகள், ஓவியம் வரைதல் போன்றவை செய்யலாம். உறவினர்கள், நண்பர்களை (இருந்தால்) அடிக்கடி வந்து போகும்படி சொல்லுங்கள்.

3. வீட்டில் மேல்வேலைகளைக் கணவரைக் கொண்டு செய்ய வேண்டும்.

4. உங்கள் பாஸ்போர்ட், விஸா, வங்கி கணக்குகள் குறித்த ஏதேனும் வேலைகள் இருந்தால் இப்பவே செய்து வையுங்கள்.

5. வீட்டில் நீங்கள் ஓய்வில் இருக்கும்போது தேவைப்படாத உபகரணங்கள் (எக்ஸர்சைஸ் மிஷின், மிக்ஸி, கிரைண்டர்) இருந்தால் அவற்றை பேக் செய்து வைப்பது நல்லது.

6. நீங்கள் போய்ப் பார்த்து வாங்க வேண்டிய பொருடக‌ள் இருந்தால் அவற்றை தேவையான் அளவு வாங்கி வையுங்கள். சிலவற்றை கண‌வருக்கு வாங்குவதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

தோன்றியதை எழுதியுள்ளேன். உபயோகப்பட்டால் நல்லது.

உபயோகமான பதிவுதான் சகோதரி மிகவும் நன்றி.
உணவு காரம் கொஞ்சமும் சேர்க்காமல் மற்றும் அவித்த காய்கறிகள் ,சூப் அப்படி லைட்டான சாப்பாடுகளைத்தான் வழமையை விட அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருப்பதால்.உணவுக்கு வெளியிலிருந்து ஏற்பாடு செய்வது என்பது குழப்பமாக இருக்கிறது

சப்பாத்தி என்ன மாவில் செய்வது நல்லது.
எத்தனை நாட்களுக்கு செய்து வைக்கலாம்

எனக்கு உறவினர் யாரும் இங்கு கிடையாது.ஆனால் நம்மால்முடியும் என்ற மனத்தைரியம் இருக்கிரது.
நீங்கள் சொன்னதுபோல் தேவையில்லாத பொருட்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டேன்.மிகவும் நல்ல ஐடியா .இப்போ என் கணவர் கிச்சனை சுலபமாக உபயோகிக்கக்கூடியாதா இருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி சகோதரி.

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

அஷாரா,

3 வேளை உணவு வெளியில் வாங்கிவிட்டு, இடையில் சாப்பிட வேன்டிய சூப் போன்ற எளிதான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்யலாம். நீங்கள் சைவம் மட்டுமே சாப்பிடுபவர் என்றால் எல்லா உணவுகளையும் வீட்டில் செய்யலாம்; அசைவம் என்றால் அதிகச் சிரமம் இருக்கும்.

சப்பாத்தி கோதுமை மாவில் செய்வதுதான் நல்லது. செய்து மொத்தமாக ஃப்ரீசரில் வைப்பது பற்றி எனக்கு அனுபவமில்லை; தெரிந்த தோழிகள் சொல்வார்கள்.

இட்லி செய்து ஃப்ரீசரில் வைத்து பின் டீஃப்ரோஸ்ட் செய்யலாம்.

சின்னச் சின்ன வேலைகளைக் கூடத் தவிர்த்து முழுமையான பெட் ரெஸ்டில் இருப்பதே நலம். பார்த்துச் செய்யுங்கள்.

மிகவும் நன்றி சகோதரி உஸைன்.

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

தேவார திருவாசகங்களை கேட்க யாருக்காவது லிங் தேவைப்படுகிரதா?

http://www.shaivam.org/gallery/audio/audio.htm
http://www.oosai.com/tamil_devotional.cfm

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

முயற்சி நம்மிடம் முடிவு ஆண்டவனிடம்

அஷாரா.. இளையரஜாவின் தேவாரபாடல்கள் கேளுங்க ரொம்ப நல்ல இருக்கு. ராகாவில இருக்கு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அஷாரா உங்களுக்கு இந்த லிங்க் உதவும் அப்படின்னு நினைக்கிறேன் . இதுல சப்பாத்தி எப்படி பிரீஸ் பண்ணி வைக்கிறதுக்கு கூட சொல்லி இருக்காங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/13416

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்