வெங்காய கொத்ஸ்[சட்னி]

தேதி: September 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 3
உருளைக்கிழங்கு - ஒன்று
தக்காளி - ஒன்று
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
மிளகாய் - 8
தேங்காய் - 4 சில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை மிகப்பொடியாக நறுக்கிகொள்ளவும். உருளைக்கிழங்கை பொடி ஸ்லைசாக நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கியவற்றை நன்கு வதக்கவும்.
அரைக்கவேணடியவற்றை மையாக அரைத்து எடுக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு பச்சைவாசனை போகும்வரை கொதிக்கவிட்டு கூட்டுபோல் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.


இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையானது.

மேலும் சில குறிப்புகள்