அரட்டை நடக்குது.... நீங்களும் வாரது - 94

வாங்க வாங்க.... எம்முடைய பேச்சை கேட்டு அரட்டைக்கு வந்த எல்லாருக்கும் நன்றி. :D ஹிஹிஹீ..... தொடருங்கோ.... நாங்களும் நேரம் கிடைக்கும்போது வாரோம்.

ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் நலமா?

எனக்கு நேரம் இல்லாம போச்சு... ஆனாலும் எல்லாரும் என்னை அக்கறையாக விசாரிக்கறீங்க. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

பிரபா, அனாமிகா, தேன்மொழி, மிசஸ் ஹுசைன், சந்தனா, கவிதா, வாணி, கலா, சுகா, சுபா, உமா, யோகராணி, ரூபா, திவ்யா அனைவரும் நலமா? என்னை விசாரிச்ச எல்லாருக்கும் என் நன்றிகள். நானும் குழந்தையும் நலம். சென்னையில் வெய்யில் மீண்டும் தலை தூக்கிவிட்டது.

மர்ழி.... நீங்க புது பேரில் வந்ததும் கொஞ்சம் எனக்கு யாருன்னு தெரியாம போச்சு. :( நலமா இருக்கீங்களா??? குழந்தைகள் நலமா? சென்னை'லயா இருக்கீங்க?

விஜி.... சென்னை'ல இருக்கீங்களா கிளம்பிட்டீங்களா??? நான் என்னுடைய நம்பர் குடுத்து மெயில் அனுப்பினேன்.... ஆனா பதிலே இல்லை. நலமா?

ஹரிகாயத்ரி... நலமா? எங்கே ரொம்ப நாளா ஆளை காணோம்??!!

சாய்கீதா, சீதாலக்ஷ்மி.... நல்மா? என்ன இன்னும் அறுசுவை பக்கம் வர மாட்டஙறீங்க??

திரு ஹைஷ்.... நலமா? பையன் படிப்பு விஷயம் என்னாச்சு?

ஜலீலா.... எங்க உங்க குறிப்பு மட்டும் தான் வருது... நீங்க வரல. நலமா இருக்கீங்களா??? நோம்பு நேரம் பிசியா?

ஆசியா.... பட்டிமன்றத்துக்கு மட்டும் தான் வருவீங்களா??? நலமா இருக்கீங்களா???

இமா, செபா ஆன்ட்டி.... நலமா? என்ன இமா இத்தனை நாள் ஆயிட்டுது இன்னும் பூசணிக்காய் வரல.... :((

இலா, உத்ரா.... நலமா? இலா அடுத்த பட்டிமன்ற நடுவர் ஆயிட்டீங்க இனி அரட்டை பக்கம் ஒரு வாரத்துக்கு வர மாட்டீங்களோ??? ;) உத்ரா.... அரட்டை பக்கம் ஆள் வரலை போல நீங்களும்??? இலா பாவம்.... உங்க கையை கொஞ்சம் குடுங்கோ மருதாணி போட. ;)

அதிரா.... நலமா இருக்கீங்களா??? நீங்க சொல்றது சரி தான்.... எல்லார் பேரையும் நியாபகமா போட பிரபாவை விட்டா வேறு ஆள் இல்லை. ;) இத்தனை அறுசுவை உருப்பினர்களை நம்ம அண்ணா'வே நியாபகம் வெச்சிருக்காரோ இல்லையோ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வின்னி, மாலி.... நலமா? 93'ல் போட்ட பதிவில் உங்க இருவரையும் விசாரிக்க நினைச்சு மறந்துட்டேன்.... அதான் இங்க தனி பதிவு.... ;) வின்னி.... நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லி மாலி'யை இலா'கு அடுத்த நடுவர் ஆக்குங்களேன்.... நீங்க சொன்னா தான் மாலி கேப்பேன்னு சொல்லிட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாரங்கே.... சாந்தி ரவி'னு புதுசா ஒருத்தங்க அறுசுவை உள்ள வந்திருக்காங்க. அவங்களை அரட்டை பக்கம் கூட்டிட்டு வந்து அன்பாய் உபசரிக்க உத்தரவு போடுங்க.

கூடவே ஆசியா தங்கை நாச்சியா'வையும் இந்த பக்கத்துக்கு கூட்டி வாங்க. தனியா ட்ராக் ஓட்டிகிட்டு இருக்காங்கலாம். ;) நாச்சியா.... நலமா??? [ஆசியா தங்கை நாச்சியா.... ஆஹா ஆஹா....கவித கவித!!!] பயந்துடாதிங்க..... உங்ககிட்ட பேச ஆசை பட்டு தான் அழைக்கிறோம். :) ஆசியாவை கேட்டு பாருங்க.... நாங்களாம் ரொம்ப நல்லவங்க. அப்படி தானே ஆசியா??!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அனைவரும் நலமா. நான் நலம்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா..... நலம். நீங்க நலமா? நீங்க ஒருத்தங்க தான் என் அழைப்பு கேட்டு வந்திருக்கீங்க. நல்ல பொண்ணு. :)

மற்றவங்க மேல ரொம்ப கோவமா இருக்கா வனிதா. அதனால கோவம் கோவமா தூங்க போறா..... டாட்டா. :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சோனியா எப்படி இருகிங்க

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

ஹாய் அனைவரும் நலமா.

ஹாய் அனைவரும் நலமா.

ஹாய் தோழிகள் அனைவரும் நலமா,பிரபா பெங்களுஒரில் மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது ,எப்படித்தான் இவ்வளவு பெயர்களும் உனக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை .எனக்கு தலையே சுற்றி விட்டது .அப்பாடி ,,நானும் முடிந்த வரை ஞாபகப் படுத்தி பார்க்கிறேன் .சுகா ,கோமு ,பிரபா .சுகன்யா தேனு ,சோனியா அம்முலு சுவர்ணலக்ஷ்மி .சீதா ,அதிரா ,வாணி .விண்ணி .வனிதா ,இம்மா இலா ,ஆசியா ,தங்கை ,லக்ஷ்மி .திவ்யா ,செபா ,உத்ரா ,தேவா ,கவிதா ,உமா ,யோகராணி .ரூபா ,சந்தனா ,ஜலிலா .ஹைஸ் அண்ணா ,சாதிக்கா ,ரேனு ,ஹுசைன் a.சா ந்திரவி .மாலி ,சுறேஜினி ,ஜெயந்தி .
மனோகரி மேடம் ,கலா.இன்னும் பெயர் ஞாபகம் வராதவர்கள் ,எல்லோரும் நலம்மாப்பா .

முயற்சி தான் வெற்றி பெரும் என்று நானும் நினைத்தேன் .வாழ்த்துக்கள் .
அதிஷ்டத்தை நம்பிய தோழிகளுக்கும் ரொம்ப முயற்சி பண்ணியதற்கும் நன்றி ,வாழ்த்துக்கள் ,,,வாழ்க வளமுடன் ,,,அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி ..

ஹாய் வனிதா& ஐஸ்வரியாலட்சுமி!
நான் நலமே, நலமே நல்கட்டும்.
என்னை சுகம் விசாரித்தமைக்கு மிகவும் நன்றி.
மற்றும் தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கிங்க?
இது என்றென்றும் அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்