ப்ரெட் சாண்ட்விச் - 2

தேதி: September 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

காய்கறி ஃபில்லிங்:
பெரிய வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கியது)
சிறிய கேரட் - ஒன்று (பெரிய அச்சில் துருவியது)
முட்டைகோஸ் - அரை கப் (நீளமாக மெல்லியதாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (க்ராசாக சிறிது பெரியதாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று (பொடிதாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 2 சிட்டிகை
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முட்டை ஃபில்லிங்:
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கராண்டி
உப்பு - ருசிக்கேற்ப


 

தேவையானவற்றை தயாராக வைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை தாளிக்கவும். பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
முட்டைகோஸை சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதில் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும்.
பின்னர் நறுக்கின தக்காளியை சேர்க்கவும். தக்காளியை சேர்க்கும் போது தக்காளியின் விதை பகுதியை நீக்கி விட்டு சதைப்பற்றுள்ள தோலை மட்டும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து இறக்கி வைத்து விடவும்.
இறக்கி வைத்திருக்கும் கலவையில் கொத்தமல்லி தழையை மேலே தூவி கிளறி விடவும். ப்ரெட்டின் உள் வைக்கும் காய்கறி கலவை ரெடி.
முட்டை ஃபில்லிங் செய்ய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் முட்டையை உடைத்து வெங்காய கலவையில் ஊற்றி நன்கு கிளறி விட்டு முட்டை வெந்து உதிர் உதிராக ஆகும் வரை அடுப்பில் வைத்து கிளறி பின்னர் இறக்கவும்.
இப்பொழுது ப்ரெட்டின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெயை தடவி தவாவில் போட்டு ரோஸ்ட் பண்ணவும்.
அதன் பிறகு ரோஸ்ட் செய்த ப்ரெட்டின் உள் ஃபில்லிங்கை வைத்து சூடாக பரிமாறவும். இந்த ப்ரெட் சாண்விட்சை செய்து காட்டியவர் <b> திருமதி. சுபா ஜெயபிரகாஷ் </b> அவர்கள். நீங்களும் இந்த குறிப்பினை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்